அனைத்து வசதிகளுடன் மலிவு விலையில் மேக்ஸ் மொபைல்

Posted By: Staff

அனைத்து வசதிகளுடன் மலிவு விலையில் மேக்ஸ் மொபைல்
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மொபைல் உலகில், சிறந்த மொபைல்களை வழங்கிக் கொண்டிருக்கிறது இந்திய நிறுவனமான மேக்ஸ். அதோடு நீடித்து உழைக்கும் பேட்டரியையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது மேக்ஸ்.

வெயில் காலம், மழைக் காலம் என்பது போல இது டச் ஸ்கிரீன் மொபைல் காலம் என்று கூறலாம். ஏனெனில் வாடிக்கையாளர்கள் அதிகமான தொடுதிரை தொழில் நுட்பம் கொண்ட மொபைல்களை விரும்புகின்றனர்.

இதனால் ஒவ்வொரு நிறுவனமும் நீ, நான் என்று போட்டி போட்டுக் கொண்டு உயர்ந்த ரக மொபைல்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இதனால் டச் ஸ்கிரீன் மொபைல்களுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது.

இந்த சமயத்தில் மற்ற மொபைல்களுக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு ஸிப்பி எம்டி-105 என்ற டச் ஸ்கிரீன் மொபைலை நேற்று வெளியிட்டிருக்கிறது மேக்ஸ் நிறுவனம்.

இரண்டு சிம் நெட்வொர்குகளை ஆப்பரேட் செய்ய இதில் டியூவல் சிம் தொழில் நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 2.4 இஞ்ச் திரை கொண்ட ட்எப்டி ஃபுல் டச் ஸ்கிரீன் மொபைல் மூலம் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்திய சந்தோஷத்தையும், வெற்றியையும் கொண்டாட காத்திருக்கிறது மேக்ஸ்.

இந்த எம்டி-105 மொபைலில் நிறைய மல்டிமீடியா வசதியும் உள்ளது. ப்லெய்ன் ப்ளாக் வித் புளூ, மெட்டாலிக் ரெட் மற்றும் ஃபன்க்கி ஆரன்ச் போன்ற கண்கவரும் நிறங்களிலும் இந்த மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வீடியோ ரெக்காரடிங், டிஜிட்டல் சூம் வசதி கொண்ட இதன் கேமரா 640 X 480 பிக்ஸல் துல்லியத்தை வழங்குகிறது. இதில் உள்ள பிஏடி05 பேட்டரி 3 இருந்து 4 மணி நேரம் டாக் டைமையும் மற்றும் , 400 இருந்து 450 மணி நேரம் வரை ஸ்டான்-பை டைமையும் வழங்குகிறது.

115கேபி இன்டர்னல் மெமரியும், 64 எம்பி சிஸ்டம் மெமரியும் இதில் பயன்படுத்த முடியும்.

இதன் எக்ஸ்டர்னல் மெமரி கார்டு வசதியினை 4ஜிபி வரையில் விரிவுபடுத்திக் கொள்ளலாம். மியூசிக், வீடியோ ப்ளேயர் ஃபார்மெட்டுகளுக்கு சப்போர்ட் செய்யும் இந்த மொபைல் புளூடூத், ஜிபிஆர்எஸ் தொழில் நுட்பத்திற்கும் உதவுகிறது.

அதோடு இந்த மொபைலில் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் டைப் செய்ய சப்போர்ட் செய்கிறது.ஃபுல் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட மேக்ஸ் எம்டி-105 மொபைல் ரூ.2,550 விலையை ஒட்டி கிடைக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot