Home
Mobile

புதிய இண்டெக்ஸ் ஐஎன்- 4570 எக்ஸ்ப்லோட்

By Super
புதிய இண்டெக்ஸ் ஐஎன்- 4570 எக்ஸ்ப்லோட்
புதுடில்லியைச் சேர்ந்த இன்டக்ஸ் டெக்னாலஜிஸ் ஹார்டுவேர் தயாரிப்பிலும், கம்யூட்டிங் சேவையிலும் சிறந்த பெயரைப் பெற்றுள்ளது. அதன் மூலம் இவர்கள் தங்களின் இந்தியா முழுவதுமுள்ள சில்லறை வர்த்தகர்களிடம் நல்ல பெயரும் பெற்றுள்ளனர். இந்த நிறுவனம் பல விருதுகளை வாங்கி இந்திய சந்தையில் உயர்ந்த இடத்தில் உள்ளது.

இந்த மொபைல் நிறுவனம் புதிதாக இண்டக்ஸ் ஐஎன்-4570 எக்ஸ்ப்ளோட் என்ற புதிய மொபைலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த புதிய மொபைல் ஜிஎஸ்எம் வசதி கொண்டு இரட்டை சிம் வசதியை அளிக்கிறது. எப்பொழுதுமே இந்தியாவில் இரட்டை சிம் மொபைல்களுக்கு அதிக தேவை உண்டு. அப்படிப் பார்க்கும் போது இந்த இரட்டை சிம் வசதி கொண்ட புதிய மொபைலுக்கும் அமோக வரவேற்பு இருக்கும் என நம்பலாம்.

இந்த மொபைலின் க்விஜிஎ டிஸ்ப்ளே 6.6 இன்ச் ஆகும். வீடியோ காட்சிகளை அம்சமாக படம் பிடிக்கும் வகையில் 1.3 மெகா பிக்ஸல் கேமராவை வழங்குகிறது. இந்த புதிய மொபைலில் நாம் விரும்பிய எப்எம் சேனல்களை கேட்க முடியும். மேலும் இதில் எப்எம் ரிக்கார்டிங் வசதியும் உள்ளது. அதனால் கண்டிப்பாக இந்தியாவில் இந்த மொபைலுக்கு சிறந்த வரவேற்பு கிடைக்கும் என நம்பலாம்.

இண்டக்ஸ் ஐஎன் 4570 எக்ஸ்ப்லோட் வீடியோ மற்றும் ஆடியோ ப்ளேயர்களையும் கொண்டுள்ளது. மேலும் இந்த மொபைல் 32 ஜிபி வரை சேமிப்பு வசதி கொண்டுள்ளதால் நாம் நிறைய வீடியோ மற்றும் ஆடியோ பைல்களை சேமிக்க முடியும்.

இதன் ப்ளூடூத் ஜிபிஆர்எஸ்/டபுள்யு வசதி கொண்டிருப்பதால் தகவல் பரிமாற்றத்திலும் இந்த மொபைல் சிறந்து விளங்குகிறது. மேலும் இந்த மொபைல் யுஎஸ்பி மோடமும் கொண்டுள்ளது. மொபைல் ட்ராக்கருடன் பாதுகாப்பு வசதியும் கொண்டிருக்கிறது. இது லை-யன் பேட்டரி கொண்டிருப்பதால் 5 மணி வரை செயல்படும். மேலும் இதன் ஸ்டான்டர்டு பேட்டரி பேக்கப் 500 மணி நேரமாகும். இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் கண்டிப்பாக இந்திய வாடிக்கையாளர்களின் மனம் கவர் கள்வனாக இந்த மொபைல் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X