இந்தியா வரும் ஹுவெய் குறைந்த விலை ஸ்மார்ட்போன்

ஆனால், அவற்றின் விலையை கேட்கும்போதுதான் தலை சுற்ற வைக்கும். இந்த நிலையில், அடித்தட்டு மக்களின் ஸ்மார்ட்போன் கனவை நனவாக்கும் வகையில் புதிய ஸ்மார்ட்போனை ஹுவெய் அறிமுகம் செய்துள்ளது.
ஹுவெய் எம் 835 என்ற பெயரில் வெளிநாட்டு சந்தைகளில் அறிமுகமாகி உள்ள இந்த போன், ஸ்மார்ட்போனுக்கான அனைத்து அடிப்படை அம்சங்களும் கொண்டதாக இருக்கிறது.
இந்த போன் விரைவில் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 2.8 இஞ்ச் தொடுதிரையுடன் வந்துள்ள இந்த போன் ஆன்ட்ராய்டு 2.2 (ப்ரேயோ) ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.
மல்டிமீடியா அம்சங்களுக்கும் குறைவில்லாமல் வந்துள்ளது ஹுவெய் எம் 835. டிடிஎஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்பீக்கர்களுடன் வந்துள்ள இந்த போனில் இசையை கேட்கும்போது பரவசத்தை ஏற்படுத்துகிறது.
3.2 மெகாபிக்செல் கொண்ட கேமரா, ஹைடெபினிஷன் தொழில்நுட்பத்தில் வீடியோ ரெக்கார்டிங் செய்யும் வசதி கொண்டது.
ஸ்வைப் தொழில்நுட்பத்துடன் கூடிய கிவெர்ட்டி கீபோர்டு, டைப் செய்வதற்கு வெகு எளிதாக இருக்கிறது. 2 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட இந்த போனில், 32 ஜிபி வரை கூடுதல் மெமரி கார்டை பொருத்திக்கொள்ளலாம்.
ஹுவெய் எம்835 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
210 மணிநேரம் ஸ்டான்ட்-பை மற்றும் 4 மணிநேரம் டாக்டைம் கொண்ட சக்திவாய்ந்த பேட்டரி
யூஎஸ்பி வால் சார்ஜர் செய்யும் வசதி
2ஜிபி சேமிப்பு திறன்; 32 ஜிபி வரை சேமிப்பு திறன் அதிகரித்துக்கொள்ளும் வசதி
ஆன்ட்ராய்டு 2.2 ஓஎஸ்
2.8 இஞ்ச் கொண்ட தொடுதிரை
வை-பை, புளூடூத் கனெக்ட்டிவிட்டி
ஸ்மார்ட்போனுக்கான அனைத்து வசதிகளுடன் வந்துள்ள இந்த போன் தோராயமாக ரூ.5,000 விலையில் இந்திய மார்க்கெட்டில் நுழைய இருக்கிறது.


Click it and Unblock the Notifications