Home
Mobile

புதிய மல்டிமீடியா மொபைல்களை களமிறக்கும் ஜி'ஃபைவ்

By Super
புதிய மல்டிமீடியா மொபைல்களை களமிறக்கும் ஜி'ஃபைவ்
பொழுதுபோக்கு அம்சங்களை கொடுத்து அசத்துவதில் கில்லாடி என்று பெயர் பெற்ற ஜி'ஃபைவ் நிறுவனம், புதிய மல்டிமீடியா மொபைலை களமிறக்குகிறது

இந்த சினிமா வரிசை மொபைல்கள் இ-720, இ-780 மற்றும் இ-505 என்ற பெயர்களில் மார்க்கெட்டிற்கு வருகிறது.

இந்த மொபைல்களில் பிரபலமான 20 சினிமாக்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளதால், சிறந்த பொழுதுபோக்கை தரும். இந்த வசதியினை அளிக்க இருக்கும் இந்த மொபைல்களை ஒரு குட்டித் திரை அரங்கு என்றும் கூறலாம்.

இந்த செய்தி நிச்சயம் வாடிக்கையாளர்களை சந்தோஷத்தில் திணறடிக்கும். பாலிவுட் நடிகரான சல்மான் கான் நடித்து வெளிவந்த தபாங் போன்ற படங்களையும், இன்னும் பிறமொழி படங்களையும் இதில் பார்க்க முடியும்.

விருப்பப்பட்ட படங்களையும், ரிங்டோன்களையும், வீடியோக்களையும் இதன் 4ஜிபி மெமரி கார்டில் பதிவு செய்து பார்க்கவும், கேட்கவும் முடியும். இப்படி பொழுதுபோக்கு அம்சத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது ஜி'ஃபைவ் நிறுவனம்.

இத்தகைய வசதியினை மொபைல்களின் மூலம் வழங்க இருக்கும் போது நிச்சயம் அந்த மொபைல்களின் அமைப்பை தெரிந்து கொள்ளவதும் அவசியமாகிறது.

இ-720 மொபைல் 2.4 இஞ்ச் டச் ஸ்கிரீன் கொண்டது. இதில் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 3.2 மெகா பிக்ஸல் கேமராவும், வீடியோ காலிங் செய்ய வசதியாக முகப்புக் கேமராவும் உள்ளது.

16ஜிபி மெமரி வசதியுடன் 1,300 எம்ஏஎச் ஸ்டான்டர்டு பேட்டரி வசதியும் இந்த மொபைல்களில் உள்ளது. இதனால் நீண்ட நேரம் பேக்கப் கிடைக்கும்.

ஆனால் இன்னொரு படைப்பான இ-780 மொபைல் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட மொபைல் அல்ல. இந்த மொபைல் 3.2 இஞ்ச் அகன்ற திரை கொண்டது. அதாவது முன்பு கூறிய இ-720 மொபைலை விட சற்று குறைந்த திரை அளவைக் கொண்டது.

ஆனால் தகவல் பரிமாற்றம் செய்ய உதவும் இதன் புளூடூத் வசதி வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும்.

மல்டிமீடியா தொழில் நுட்பம் இந்த மொபைலில் வழங்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது மொபைலான இ-505 மொபைல் 2.2 இஞ்ச் திரை கொண்டது. இதன் 1.3 கேமரா துல்லியமான புகைப்படத்தையும், தெளிவான வீடியோவையும் கொடுக்கும்.

இ-720, இ-780, இ-505 மொபைல்களை ரூ.2,000 இருந்து ரூ.4,000 விலை வரையில் பெற முடியம். இனிமையான பொழுதுபோக்கு அம்சம் தேவை என்று கருதும் வாடிக்கையாளர்களுக்கு இந்த மொபைல்கள் நிச்சயம் ஏற்றதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X