குறைந்த கதிரியக்கத்தை வெளியிடும் ஐஸ்3 மொபைல்போன்

By Super
|
குறைந்த கதிரியக்கத்தை வெளியிடும் ஐஸ்3 மொபைல்போன்
குறைந்த கதிரியக்கதை வெளியிடும் வகையில் அல்கேட்டல் ஐஸ்3 என்ற பெயரில் புதிய மொபைல்போனை ஐஸ் மொபைல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

மொபைல்போன்களிலிருந்து வெளிவரும் கதிரியக்கத்தால், உடல்நலத்திற்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக ஒருசாரார் கூறிவருகின்றனர். ஆனால், மறுபுறம் மொபைல்போன் கதிரியக்கத்தால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை என்று மறுப்பு தெரிவிக்கப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும், மொபைல்போன்களின் கதிரியக்கத்தால், உடல்நலம் பாதிக்கப்படுவதாக பரவலான கருத்து நிலவுகிறது. இந்த நிலையில், மக்களின் எண்ணத்திற்கு தக்கவாறு அவர்களை சமாதானப்படுத்தும் வகையில், குறைந்த கதிரியக்கம் கொண்ட போனை களமிறக்கி உள்ளதாக ஐஸ் மொபைல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐஸ் மொபைல் சிஸ்டம் மேனேஜ்மென்ட் பிரிவு இயக்குனர் எம்.எஸ். மாலிக் கூறியதாவது:

"குறைந்த கதிரியக்கம் கொண்ட போன்களை தயாரிக்க முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அல்கேட்டல் ஐஸ்-3 மொபைல்போன் குறைந்த கதிரியக்கத்தை வெளியிடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த போன் குறைந்த கதிரியக்கம் கொண்ட போனுக்கான எஸ்ஏஆர் சான்றிதழையும் பெற்றுள்ளது. மேலும், நடப்பு நிதிஆண்டுக்குள் 10 லட்சம் மொபைல்போன்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

இந்த நிலையில், அதிக கதிரியக்கம் கொண்ட போன்களை தடைசெய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால், அதிக கதிரியக்கத்தை வெளியிடும் வகையிலான சீன போன்கள் மற்றும் குறைந்த விலையில் கிடைக்கும் அதிக கதிரியக்கம் கொண்ட போன்கள் தடை செய்யப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X