க்யூட் வடிவமைப்பில் புதிய ஸ்பைஸ் பட்ஜெட் போன்

Posted By: Staff

 

எளிமையாகவும் அதேநேரத்தில் ஸ்டைலாகவும் இந்திய சந்தையை முற்றுகையிட்டிருக்கிறது ஒரு புதிய மொபைல். சத்தமில்லாமல் சந்தையில் கால்பதித்துள்ள அந்த மொபலை வெளியிட்டிருக்கிறது ஸ்பைஸ் நிறுவனம்.

ஆடம்பரத்தை விரும்பும் மக்கள் ஒருபுறம் இருந்தாலும், எளிமையை விரும்பும் மக்களும் இன்னொருபுறம் இருக்கத்தான் செய்கின்றனர். அதற்கு முக்கியத்துவம் கொடுத்து சில சிம்பில்ஸ்டைல் கொண்ட மொபைல்களையும் உருவாக்குகிறது மொபைல் உலகம்.

இதன் அடிப்படையில் எம்-5225 என்ற பெயரில் இந்த மொபைலை ஸ்பைஸ் வெளியிட்டுள்ளது. பார்ப்பதற்கு ஜென்டிலாகவும், கியூட்டாகவும் இருக்கும் இந்த மொபைல் 88.5 கிராம் இலகு எடை கொண்டு அசத்துகிறது.

நண்பர்களிடம் உணரும் ஒரு தோழமையை இந்த மொபைலிடமும் உணர முடியும். ஏனென்றால் இந்த எம்-5225 மொபைலை ஆப்பரேட் செய்வதில் எந்த விதமான இடையூறும் இருக்காது. அனைவராலும் மிக எளிதாக இயக்கும் வகையில் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால் சிறியவர்களும் கூட இந்த டியூவல் வசதி கொண்ட மொபைலை இயக்க முடியும். இதில் உள்ள ஆப்ஷன் மூலம் இரண்டு சிம் கார்டு நெட்வொர்கையும் நொடியில் இயக்கலாம்.

176 X 220 பிக்ஸல் திரை துல்லியத்தைக் கொடுக்கும் 2.0 இஞ்ச் திரை இதில் உள்ளதால், கண்களை சிரமப்படுத்தாமல் காட்சிகளையும், தகவல்களையும் காண முடியும். அடிப்படை வசதிகள் கொண்ட இந்த டியூவல் சிம் மொபைலில் சூம் வசதி கொண்ட டிஜிட்டல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

எப்எம் கேட்கும் பழக்கம் எல்லோரிடமும் பரவிக்கிடக்கும் பொழுது, எப்எம் ரேடியோவை போகும் இடமெல்லாம் எடுத்துச் செல்ல முடியுமா என்ன.

அதனால் இந்த மொபைல் எப்எம் ரேடியோ அம்சத்தினை கைவசம் வைத்திருக்கிறது. சிம்பில் மொபைல் என்று சொன்னதற்காக, தொழில் நுட்பத்திலும் சிம்பில் என்று கருதிவிட முடியாது.

வாடிக்கையாளர்களை "சபாஷ் போட வைக்கும்" திட்டத்துடன் இந்த மொபைல் ஒரு புதிய வசதியைக் கொடுத்திருக்கிறது. என்ன? என்ற ஆர்வம் அனைவரையும் நிச்சயம் பிடித்துக் கொள்ளும். மியூசிக் ப்ளே செய்வதற்கென்றே பிரத்தியேகமாக இதில் சில பட்டன்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் எளிதாக மியூசிக்கை ப்ளே செய்து கொள்ளலாம். டிவிடி ப்ளேயரில் உள்ளது போல இதில் நெக்ஸ்ட் ஆப்ஷன், ப்ரீவியஸ், ஸ்டாப், பாஸ், ப்ளே போன்ற அனைத்து பட்டன்களையும் கொண்டிருக்கிறது இந்த மொபைல். இது எம்-5225 மொபைலின் தனிச் சிறப்பு என்று சொல்லலாம்.

எக்ஸலன்ட் ஸ்டோரேஜ் வசதியும் இதில் உள்ளது. இந்த மொபைல் 8ஜிபி வரை கூடுதல் மெமரியைக் கொண்டுள்ளது. தகவல் பரிமாற்றத்திற்கு புளூடூத் சிறப்பும் இருக்கிறது.

5 மணி நேரம் தொடர்ந்து டாக் டைம் வழங்கும் 1,350 எம்ஏஎச் எல்ஐ-ஆயான் பேட்டரியும் உள்ளது. இந்த வசதிகளைக் கொண்டிருக்கும் ஸ்பைஸ் எம்-5225 மொபைலின் விலை அதிகம் இல்லை. இந்த டியூவல் சிம் மொபைலை ரூ.2,000 ஒட்டிய விலையில் பெறலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot