ரூ. 4,599 க்கு புதிய டியூவல் சிம் கார்டு போன்: ஸ்பைஸ் அறிமுகம்

By Super
|

ரூ. 4,599 க்கு புதிய டியூவல் சிம் கார்டு போன்: ஸ்பைஸ் அறிமுகம்

டெல்லி: ரூ.4,599 விலையில் புதிய அம்சங்களுடன் கூடிய முதல் டிரான்ஸ்பார்மர் மாடல் போனை இந்திய சந்தையில் ஸ்பைஸ் மொபைல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கவர்ச்சியான வடிவமைப்பு மற்றும் அதிக வசதிகளுடன் கூடிய ஸ்பைஸ் டிரான்ஸ்பார்மர் மொபைல்போன்கள் இளைஞர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த நிலையில், டிரான்ஸ்பார்மர்-3 ஹாலிவுட் படத்தின் சிறப்பு வீடியோ கிளிப்பிங்குகள் அடங்கிய புதிய டிரான்ஸ்பார்மர் மொபைல்போனை ஸ்பைஸ் சந்தைக்கு கொண்டுவந்துள்ளது.

இந்த புதிய டிரான்ஸ்பார்மர் போனை சந்தைப்படுத்துவதற்காக ஹாஸ்ப்ரோ நிறுவனத்துடன் ஸ்பைஸ் ஓர் ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

மல்டி பார்மெட் ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர், எப்எம் ரேடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் மற்றும் ஹோம் தியேட்டருடன் இணைக்கத்தக்க பிரத்யேக ஸ்லாட்டுடன் இந்த போன் வந்துள்ளது.

புளூடூத், யூஎஸ்பி போர்ட் உள்ளிட்ட கனெக்டிவிட்டி வசதிகள், டியூவல் சிம் கார்டு பொருத்தும் வசதிகளுடன் இந்த போன் வந்துள்ளது. வீடியோ ரெக்கார்டிங் செய்யும் வசதிகொண்ட கேமராவும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்பைஸ் டிரான்பார்மரின் முக்கிய அம்சங்கள்:

டியூவல் சிம் பொருத்திக்கொள்ளும் வசதி

1.3 மெகாபிக்செல் கேமரா

8 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு பொருத்தும் வசதி

மியூசிக் ப்ளேயர்

ஜாவா சப்போர்ட்

புளூடூத்

உள்ளிட்ட வசதிகளுடன் வந்துள்ள இந்த போன் ரூ. 4,599 விலையில் விற்பனை செய்யப்படுவதாக ஸ்பைஸ் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X