Home
Mobile

ரூ.11,000 விலையில் நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன்

By Super
ரூ.11,000 விலையில் நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன்
டெல்லி: ரூ.11,000 விலையில் சிம்பையான் அன்னா ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் புதிய ஸ்மார்ட்போனை நோக்கியா விரைவில் அறிமுகப்படுத்துகிறது.

என்-500 என்ற பெயரில் வரும் இந்த போன் சமீபத்தில் ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்த போன் விரைவில் இந்தியாவிலும் அறிமுகப்படுத்த இருப்பதாக நோக்கியா தெரிவித்துள்ளது.

இந்த போன் 3.2 இஞ்ச் தொடுதிரை டிஸ்பிளே கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிம்பையான் அன்னா ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இயக்கும் வகையில் 1ஜிகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் பிராசஸருடன் இந்த போன் வருகிறது.

பொழுதுபோக்கு அம்சங்களில் குறைவைக்காத அளவுக்கு 5 மெகாபிக்செல் கேமராவுடன் வருகிறது. மேலும், வீடியோ காலிங் வசதிக்காக முகப்பு கேமராவும் இருக்கும்.

2ஜிபி சேமிப்பு திறனை வழங்கும் மெமரி கார்டு கொண்ட இந்த போனின் சேமிப்பு திறனை 32 ஜிபி வரை கூட்டிக்கொள்ள முடியும்.

அனைத்து மல்டிமீடியா பார்மெட்டுகளையும் இயக்கும் வசதியும், ஹைடெபினிஷனில் ப்ளேபேக் செய்யும் வசதியையும் கொடுக்கும்

எப்எம் ரேடியோ மற்றும் கூடுதல் ஸ்பீக்கர்களை இணைப்பதற்கு ஏதுவாக 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்டவையும் இருக்கும்.

வைஃபை, ஜிபிஆர்எஸ், எட்ஜ்,2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க் சப்போர்ட் ஆகிய வசதிகளையும் பெறலாம்

ஐரோப்பிய சந்தையில் இந்த போன் 150 யூரோ விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, இந்தியாவில் நடுத்தர மக்களை குறிவைத்து இந்த போன் ரூ.11,000 விலையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X