ரூ.2,500 விலையில் புதிய பட்ஜெட் போன்: மைக்ரோமேக்ஸ் அறிமுகம்

இந்த போன் டச்ஸ்கிரீன் வசதியைக்கொண்டுள்ளது. 2 ஜிஎஸ்எம் சிம் கார்டுகளை(900/1800) உபயோகப்படுத்த முடியும்.
இது 92 X 52 X 14 மில்லிமீட்டர் அளவு காம்பாக்ட் டைமென்ஷன் தொடுதிரை வசதி கொண்டுள்ளது. இந்த மாடல் 6 சென்டி மீட்டர் அதாவது 2.4 இன்ச் மற்றும் 240 X 320 பிக்செல் எல்சிடி தொடுதிரை வசதியைக் கொண்டுள்ளது.
இதில் 0.3 அளவு கொண்ட விஜிஏ கேமிராப் பொருத்தப்பட்டுள்ளது. இதில், ஆடியோ மற்றும் வீடியோ வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.6 மணி நேரம் தொடர்ந்து டாக் டைம் கொடுக்கிறது.
157 மணி நேரம் ஸ்டாண்ட்-பை டைம் கொடுக்கிறது. ஏஎம்ஆர், டபிள்யூஎம்ஏ, எம்பி3 போன்ற பார்மெட்டுகளில் ஆடியோ பிளேயர் வசதிகளை கொடுக்கும். மற்றும் இதில் 3ஜிபிபி வீடியா பிளேயர் வசதிகளும் உள்ளது.இதில் 8 ஜிபி வரை ஸ்டோரேஜ் செய்யும் திறன் உள்ளது.
மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்தும் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.இதில் புளூடூத் வசதி உள்ளதால் தகவல் பரிமாற்றம் எளிதில் நிகழ்த்தலாம். வெறும் 83 கிராம் எடையைக்கொண்டுள்ளது. இத்தனை வசதிகளைக்கொண்ட இதன் விலை ரூ.2,500 மட்டுமே.


Click it and Unblock the Notifications