Home
Mobile

புதிய டியூவல் சிம் போன்: இண்டெக்ஸ் அறிமுகம்

By Super
புதிய டியூவல் சிம் போன்: இண்டெக்ஸ் அறிமுகம்
15 வருடங்களாக மக்களின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ள இன்டெக்ஸ் டெக்னாலஜி நிறுவனம் இப்பொழுது ஒரு புதிய மாடலை உருவாக்கியுள்ளது.

இதனுடைய தரமான படைப்பினால் உலகத்தையே தன் வசம் ஈர்த்துள்ளது.அது மட்டும் அல்லாது மக்களிடையே சிறந்த நம்பிக்கையைப் பெற்றுள்ளது.

இன்டெக்ஸ் டெக்னாலஜி நிறுவனம் விற்பனையாளர்களிடமும் அதே நம்பிக்கையைப் பெற்றுள்ளது.

இந்த இன்டெக்ஸ் ஐஎன்-4500 தன்டர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மாடல் மிகவும் அழகான தோற்றத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது டியூவல் சிம் கார்டு பொருத்தும் வசதியைக் கொண்டுள்ளது.

இந்த மாடல் 2.4 இஞ்ச் க்யூவிஜிஏ திரை வசதி கொண்டதாக உள்ளது.நீங்கள் எதிர்பார்ப்பது போல் கேமரா வசதியும் வழங்கபட்டுள்ளது. இதனால் உங்களால் சிறப்பான படங்களையும்,வீடியோக்களையும் எளிதில் எடுக்கமுடியும்.0.3 அளவு மெகா பிக்செல் கேமரா வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் புதிதாகக் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடலில் எஃஎம் ரேடியோப் பாடல்களை உங்களால் துல்லியமாக கேட்கமுடியும். இதில் 32 ஜிபி வரை ஸ்டோரேஜ் வசதியை கூட்ட முடியும். இதனால் நீங்கள் நிறைய தகவல்களை சேமிக்க முடியும்.

அதுமட்டும் அல்லாது உங்களது ஹேண்செட்டிற்கு ஒரு அற்புதமான பாதுகாப்பும் இத்துடன் வழங்கப்பட்டுள்ளது. உங்களது மொபைலை தொலைத்து விட்டாலோ அல்லது திருடு போய்விட்டாலோ இதில் உள்ள மொபைல் டிராக்கிங் வைத்து கண்டுபிடித்துவிட முடியும்.

இந்த ஹேண்ட்செட் மாடலில் ஜிபிஆர்எஸ்/டபல்யூஏபி புளூடூத் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. யூஎஸ்பி மோடம் தொழில்நுட்ப வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் 1200 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால் நீண்டு உழைக்கும் தன்மைக் கொண்டது.இது 4 மணி நேரம் டாக் டைம் கொடுக்கிறது. இதில் புளூடுத்,யூஎஸ்பி,ஜீஆர்பிஎஸ்,வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 40 மணி நேரம் ஸ்டான்ட்-பை டைம் கொடுக்கிறது.இந்த ஹேண்செட் மாடல் இந்திய சந்தையில் ரூ.3,000 என்ற விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X