Home
Mobile

வாய்ஸ் மெஸெஜ் வசதியுடன் புதிய எச்டிசி ஸ்மார்ட்போன்

By Super
வாய்ஸ் மெஸெஜ் வசதியுடன் புதிய எச்டிசி ஸ்மார்ட்போன்
எலக்ட்ரானிக் படைப்புத் தொழில் வித்தையை மிக சாமர்த்தியமாக கையாளுகிறது எச்டிசி நிறுவனம். தொழில் ரீதியாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும் பல அனுபவங்களை கைவசம் வைத்திருக்கும் இந்நிறுவனம் விவிட் என்ற ஸ்மார்ட்மொபைலை அறிமுகம் செய்திருக்கிறது.

அந்த வகையில் விவிட் என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனை எச்டிசி அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஆம், விமானத்தில் பறந்துகொண்டிருந்தாலும் அதுபற்றிய தகவலை வாய்ஸ் மெசெஜ் மூலம் தொடர்பு கொள்பவர்களுக்கு தெரிவித்துவிடும்.

அதுவும் அனைவரும் வாங்கத்துடிக்கும் 4ஜி தொழில் நுட்பத்துடன் கொடுக்க முன் வந்திருக்கிறது. "4.50 இஞ்ச் அகன்ற திரை கொண்டதா?" என்று அனைவரையும் மூக்கின் மேல் விரல் கைக்கத் தூண்டும் வகையில் அறிமுகமாகி இருக்கிறது.

இந்த புதிய ஸ்மார்ட்மொபைல் ஆன்ட்ராய்டு 2.3.4 இயங்குதளத்தில் இயங்குகிறது. இதில் 1,500 டியூவல் கோர் பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது. இது அகன்ற திரை 540 X 960 பிக்ஸல் துல்லியத்தை வழங்கும் மல்டி டச் தொழில் நுட்பம் கொண்டது. 8 மெகா பிக்ஸல் கேமராவைக் கொண்டுள்ள இந்த மொபைல், 1920 X 1080 பிக்ஸல் துல்லியத்தை கொடுக்கும்.

இதனால் புகைப்படத்தையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியையும் அதி வேகத்தில், தாறுமாறாக வழங்க முடியும். குறிப்பாக 1080பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதியைக் கொடுக்கிறது. அதோடு 1.3 முகப்பு கேமராவும் இதில் இடம் பெற்றிருக்கிறது.

எம்பி3, எம்பிஇஜி4, யுடியூப் போன்ற ஃபார்மெட்டுகளுக்கு சப்போர்ட் செய்ய ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர் வசதியும் இதில் உள்ளது. பிரவுசிங் வசதி இல்லாத மொபைலா? என்று ஆன பிறகு எச்டிசி மொபைலில் வைபை வசதி இல்லாமல் இருக்குமா? இதில் உள்ள வைபை தொழில் நுட்பத்தின் மூலம் ஜி-டாக் போன்ற நெட் வசதியினை எளிதாகப் பெற முடியும்.

இது எட்ஜ் மற்றும் ஜிபீஆர்எஸ் தொழில் நுட்பத்தையும் கொடுக்கும். புளூடூத், யூஎஸ்பி போன்ற இதர வசதிகளையும் இதில் பயன்படுத்தலாம். அதோடு ஃப்லைடில் செல்லும் போது இந்த மொபைலை ஃப்லைட் மோடிற்கு மாற்ற முடியும். இதனால் உங்களை தொடர்பு கொள்ளுபவர்களுக்கு, நீங்கள் விமானத்தில் சென்று கொண்டிருக்கும் தகவலை, கம்யூட்டர் வாய்ஸ் தெரிவித்துவிடுகிறது.

இந்த அளவுக்கு தொழில் நுட்ப நிபுணர்கள் யோசித்து சேவையை வழங்குவது நிச்சயம் ஒரு நிமிடம் ஆச்சர்யத்தை அளிக்கிறது. இதில் 32ஜிபி வரை மெமரி வசதியை விரிவுபடுத்திக் கொள்ளலாம். கேட்பதற்கே இத்தகைய ஆர்வத்தை தூண்டும் மொபைல், வாங்குவதற்கு இன்னும் அதிக ஆர்வத்தை துண்டும். இப்படிப்பட்ட எச்டிசி விவிட் மொபைல் விற்பனைக்கு இன்னும் வரவில்லை என்பதை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X