Home
Mobile

எச்டிசி இவோ 3டி மற்றும் பிளாக்பெர்ரி-9810 போன்கள் ஒப்பீடு

By Super
எச்டிசி இவோ 3டி மற்றும் பிளாக்பெர்ரி-9810 போன்கள் ஒப்பீடு
விற்பனையில் சக்கைபோடு போடும் எச்டிசி இவோ 3டி மற்றும் பிளாக்பெர்ரி போன்களின் ஒப்பீட்டு பார்வையை இங்கு காணலாம்.

இரண்டு போன்களும் முதல் பார்வையிலேயே பார்ப்பவர்களைக் கவர்கின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், எச்டிசி இவோ 3டி போன் 4.3 இன்ச் திரைவசதி கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

எதையும் துல்லியமான முறையில் பார்க்க விரும்புகிறீகளா? அப்படியென்றால் இதில் உள்ள qHD அகலத்திரை வசதி 960X540 பிக்செல் தி்ரை எதையும் தெளிவாக காட்டும்.எச்டிசி இவோ 3டி எல்சிடி கெப்பாசிட்டி திரையை கொண்டுள்ளது.

1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் கொண்டுள்ளதால் எதையும் மிகுந்த வேகத்துடன் தகவல்களைத் தேடி எடுக்க முடியும்.

இந்த புதிய மாடலில் அட்ரினோ 220 ஜிபியூ க்வால்காம் எம்எஸ்எம்8660 சிப்செட் கிராபிக் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

சுலபத்தில் பேட்டரி தீர்ந்து விடுமே என்ற கவலையே உங்களுக்குத் தேவையில்லை. ஏனென்றால் இதில் உங்களின் நன்மைக்காக நீண்டு உழைக்கக்கூடிய பேட்டரி வசதியும் வழங்கப்பட்டிருக்கின்றது. ஏக்சலரோமீட்டர் சென்சார்ஸ் வசதியும் மற்றும் மல்டி இன்புட் வசதியும் கொண்டுள்ளது.

இதில் கரையோ சென்சார் மற்றும் யுன்க் ஹெச்டிசி சென்சார் யூஐ வசதி அளிக்கப்பட்டிருப்பது ஒரு வரப்பிரசாதம் என்று தான் கூறவேண்டும்.

இந்த இவிஒ 3டி மாடல் வாடிக்கையாளர்களுக்கு,தொழில் நுட்ப வல்லுனர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம்.இதில் 3டி சம்மந்தப்பட்ட விஷயங்களைப் பதிவு செய்யவும் முடியும், பதிவு செய்தவற்றைக் கண்டு களிக்கவும் முடியும்.

இதில் 1ஜிபி வரை மெரி ஸ்டோரேஜ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.மற்றும் இதில் 32 ஜிபி வரை மைக்கரோ எஸ்டிக்கார்டு பயன்படுத்தி உங்களது மெமரி சேவையை விரிவு படுத்திக்கொள்ள முடியும்.

உபயோகிப்பவரின் நன்மையை மனத்தில் கொண்டு அவர்களின் ஒவ்வொரு தேவையையும் பட்டியலிடப்பட்டு, அதன் பின் தயாரிக்கப்பட்டுள்ளதே இந்த மாடலின் தனித்துவம்.

1 ஜிபி ரேம் வசதி கொடு்க்கப்பட்டுள்ளதால் தகவல்களை இன்னும் எளிதில் பெறமுடியும்.ஹெச்டிசி இவிஓ 3டி 5எம்பி கேமிராவைக் கொண்டுள்ளதால் துல்லியமான படங்களை வெளியிடுகிறது.

2560 X 1920 பிக்செல் ஆட்டோ போக்கஸ் வசதியையும் மற்றும் டியூவல் லெட் பளாஷ் வசதியையும் பெற்றுள்ளது. இன்னொரு புதிய ஹேண்செட்டான பிளாக்பெர்ரி டார்ச் 9810 க்வர்டி கீப்பேட் வசதியைகொண்டுள்ளது.

ஹெச்டிசி இவிஓ 3டி மாடலில் இருக்கின்ற அனைத்து வசதிகளும்,பிளாக்பெர்ரி டார்ச் 9810 மாடலிலும் உள்ளது.

இந்த மாடலில் 8ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது.இதன் மெமரி ஸ்டோரேஜ் வசதியை மைக்ரோஎஸ்டி கார்டு மூலம் 32 ஜிபி வரை விரிவுபடுத்திக்கொள்ளலாம்.

பிளாக்பெர்ரி டார்ச் 9810 மாடல் 768 எம்பி ரேம் கொண்டது. புளூடூத் மற்றும் 802.11 b/g/n வைபை வசதியையும் பெற்றிருக்கிறது.5எம்பி கேமிராவைக் கொண்டுள்ளதால் துல்லியமான படங்களை வெளியிடுகிறது.மற்றும் டயூவல் லெட் பளாஷ் வசதியையும் பெற்றுள்ளது.

ஹெச்டிசி இவிஓ 3டி இப்பொழுது ரூ.25,000 என்கிற விலையில் கிடைக்கின்றது. பிளாக்பெர்ரி டார்ச் 9810 மாடல் ரூ.29,749 என்ற விலையில் இந்திய சந்தையில் கிடைக்கின்றது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X