விண்டோஸ் மேங்கோவுடன் வரும் எச்டிசி ஈட்டர்னிட்டி

எச்டிசியின் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டதாக வடிவமைக்கப்படுகிறது. ஆனால், ஆன்ட்ராய்டு ஓஎஸ் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையால் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை எச்டிசி நிறுவனம் கைவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்த நினைப்பை பொய்யாக்கும் வகையில், மைக்ரோசாப்ட் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள விண்டோஸ் போன் 7 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய புதிய ஸ்மார்ட்போனை எச்டிசி விரைவில் கொண்டுவருகிறது.
எச்டிசியின் இந்த புதிய ஸ்மார்ட்போனுக்கு ஈட்டர்னிட்டி என்று பெயரிடப்பட்டுள்ளது.
அடுத்த தலைமுறை அம்சங்களுடன் சந்தைக்கு வரவுள்ள இந்த போன் 4.7 இஞ்ச் டச் ஸ்கிரீனுடன் வருகிறது.
அப்ளிகேஷன்களை இயக்குவதற்கும், வீடியோ கேம்களை விளையாடுவதிலும் இந்த ஸ்கிரீன் புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர்பாஸ்ட் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் க்யூவல்காம் ஸ்நாப்ட்ராகன் பிராசஸருடன் வரும் இந்த போனில், அட்ரினோ 205 கிராபிக் சிப் பொருத்தப்பட்டுள்ளது. இது வீடியோ கேம் விளையாடுவதில் புதிய அனுபவத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிவேக செயல்பாடுகளுக்காக 512 எம்பி ரேமுடன் ஈட்டர்னிட்டி வருகிறது. தவிர, தேவையான அளவு சேமிப்பு திறன் கொண்டதாகவும் இருக்கிறது.
மியூசிக் ப்ளேயர், வீடியோ ப்ளேயர் மற்றும் எப்எம் ரேடியோ அம்சங்களுக்கும் குறைவில்லை. கூடுதல் ஸ்பீக்கர்களைஇணைத்துக்கொள்ளும் வகையில் தனி ஸ்லாட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
தவிர, ஹைடெபினிஷனுடன் வீடியோ ரெக்கார்டிங் மற்றும் வீடியோ காலிங் வசதிக்காக முன்பக்க கேமரா உள்ளிட்ட வசதிகளும் இதில் உள்ளன.
எச்டிசி ஈட்டர்னிட்டியின் முக்கிய அம்சங்கள்:
4.7 இஞ்ச் கொண்ட விசாலமான திரை
3ஜி, புளூடூத் மற்றும் வை-பை இணைப்பு வசதிகள்
விண்டோஸ் போன் 7 மேங்கோ ஓஎஸ்
8 மெகாபிக்செல் கொண்ட கேமரா
வீடியோ காலிங் வசதிக்காக முன்பக்க கேமரா
அனைத்து நவீன அம்சங்கள் கொண்டதாக வரும் இந்த ஸமார்ட்போன் ரூ.32,000 விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications