சோனி வழங்கும் 360 டிகிரி ஸ்பீக்கர்ஸ்!

Posted By: Staff

சோனி வழங்கும் 360 டிகிரி ஸ்பீக்கர்ஸ்!
எப்பொழுதும் புதிய புதிய படைப்புகளை உலகத்திற்கு வழங்கிக்கொண்டிருக்கின்ற சோனி நிறுவனம் இப்பொழுது இன்னொரு படைப்பை அளித்திருகிறது.

உங்களின் அறை முழுவதும் 360 டிகிரி கோணத்தில் முழுமையான, இனிமையான இசையை பரப்பும் வகையில் ஸ்மார்ட்போனுக்கான புதிய ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது.

ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் ரசனையையும் மனதில் கொண்டு இப்படிப்பட்ட அரிய படைப்புகளைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றது சோனி நிறுவனம்.

இசை கேட்பது பலரது இயல்பான விருப்பம். இதை மனதில் கொண்டு தயரிக்கப்பட்டதுதான் இந்த 360 ஸ்மார்ட் ஃபோன் ஸ்பீக்கர்ஸ்.

ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் உங்களை இசையில் மிதக்கச்செய்கின்றது இந்த புதிய ஸ்பீக்கர்கள். அதோடு துல்லியமான இசைமழையில் நனைய வைக்கும்.

வாடிக்கையாளர்களுக்கு இந்நிறுவனம் அளித்த வாக்மேனை இன்னும் நம்மால் மறக்க முடியாது. எஸ்ஆர்எஸ் பிடிவி-25 என்ற பெயரில் வந்துள்ள இந்த ஸ்பீக்கர்கள் மொபைல் உலகில் புதிய அத்யாயத்தை எழுதும்.

இதனுடைய அழகான வடிவத்தைப்பார்த்தாலே, வாடிக்கையாளர்களின் மனதைக் கவர்ந்திழுக்கும் தன்மைக் கொண்டது.

பேலன்ஸ்டு க்வாலிட்டி சவுன்டு வசதியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் புளூடூத் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் வயர்லெஸ் வசதியை நீங்கள் பெறமுடியும். உங்களுக்கு விருப்பமான இடங்களில் வைத்து இனிமையான இசையை உங்களால் கேட்கவும் முடியும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

இந்த நுட்பமான கண்டுபிடிப்பின் மூலமாக பொழுது போக்கு அம்சமாக படங்கள் பார்க்கவோ அல்லது வீடியோ கேம்கள் விளையாடவோ முடியும்.

இது போன்ற வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது. புளூடூத் இணைப்பு இல்லாமலும் எஸ்ஆர்எஸ் பீட்டிவி 25 ஸ்பீக்கரை உங்களால் உபயோகிக்க முடியும்.

இதில் யூஎஸ்பி சார்ஜ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ரீச்சார்ஜ்புல் பேட்டரி வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.மற்றும் ஆர்டிபி ரிமோட் வசதியுன் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐ-போன், ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற வகைத் தொழில் நுட்பங்களுக்கும் இந்த ஸ்மார்ட் போன் ஸ்பீக்கர்ஸ் பொருத்தமானதே.

உங்களுக்கு எவ்வளவு துல்லியமாகக் கேட்க வேண்டுமோ அவ்வளவு துல்லியமகக் கேட்க முடியும். எஸ்ஆர்எஸ் ஸ்பீக்கர்ஸ் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்திலும்,ஆர்டிப்பி சிகப்பு நிறத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot