ஆன்ட்ராய்டு 3.1 அப்கிரேடுடன் மோட்டோரோலா சூம் ஸ்மார்ட்போன்

By Super
|
ஆன்ட்ராய்டு 3.1 அப்கிரேடுடன் மோட்டோரோலா சூம் ஸ்மார்ட்போன்
கூகுள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஆன்ட்ராய்டு 3.1 ஹனிகோம்ப் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்கிரேடு செய்யப்பட்ட 'சூம்' டேப்லெட் போனை மோட்டோரோலா அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே சூம் டேப்லெட் போனை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களும் புதிய ஆன்ட்ராய்டு 3.1 ஹனிகோம்ப் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்துகொள்ளலாம் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

டவுண்ட்லோடு செய்தோ அல்லது வைஃபை இணைப்பு மூலமாகவோ ஆன்ட்ராய்டு 3.1 ஹனிகோம்ப் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அவர்கள் அப்டேட் செய்து கொள்ளலாம் என மோட்டோரோலா தெரிவித்துள்ளது.

ஆன்ட்ராய்டு 3.1 ஹனிகோம்ப் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் மோட்டோரோலா சூம் டாப்லட் செயல் வேகம் மேலும் அதிகரிக்கும் என்பதால், வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தவிர, இதிலுள்ள நவீன ப்ளூடூத் கீபேடு மூலம் விரைவாக டைப் செய்யும் வசதியை பெற முடியும். அதுபோல் ஸ்க்ரோல் செய்ய மவுஸ் வசதியும் வழங்கியிருக்கிறது.

மற்ற டேப்லெட் போன்கள் வைஃபை வசதியைக் கொண்டிருக்கின்றன. ஆனால், மோட்டோரோலா சூம் டேப்லெட் வைஃபை லாக்கிங் வசதியை கொண்டிருக்கிறது. இதன் மூலம் போனை எப்பொழுதும் வைஃபை தொடர்பில் வைத்திருக்க முடியும். மேலும், தொடர்பைத் துண்டிக்காமல் ஸ்க்ரீனை லாக் செய்து நாம் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம்.

மோட்டோரோலா சூம்மின் டேப்லெட் 32 ஜிபி இன்டர்நெல் சேமிப்பு திறனை கொண்டிருக்கிறது. இதை 64 ஜிபி வரை கூட்டிக்கொள்ள முடியும். இதன் மூலம் ஏராளமான பாடல்கள், திரைப்படங்கள் மற்றும் விளையைட்டுகளை நாம் பதிவு செய்து வைக்கலாம்.

அப்டேட் செய்யப்பட்ட மோட்டோரோலா சூம்மின் டேப்லெட் அப்டேட் செய்யப்பட்ட ஆடோப் ப்ளாஷ் ப்ளேயரை கொண்டிருக்கிறது. மேலும், சக்தி வாய்ந்த கேமரா வசதியையும் கொண்டுள்ளது. இது யுஎஸ்பி போர்ட் கொண்டிருப்பதால் இந்த போனுடன் கீபோர்டு, மவுஸ் மற்றும் டிஜிட்டல் கேமராவை நாம் இணைத்துக்கொள்ளும் வசதியையும் தருகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X