Home
Mobile

ஆன்ட்ராய்டு வசதி கொண்ட எல்ஜி மொபைல்

By Super
ஆன்ட்ராய்டு வசதி கொண்ட எல்ஜி மொபைல்
மொபைல் உலகத்தில் ஒரு புதிய சாம்ராஜ்யம் படைக்க எத்தனையோ மொபைல்கள் உருவாகிக் கொண்டு இருக்கின்றது. அந்த வகையில் புது முகமாக வெளிவர உள்ளது எல்ஜி அப்டிமஸ் நோட் மொபைல். இதை மிகவும் அக்கரையுடன் வெளியிட இருக்கிறது எல்ஜி நிறுவனம்.

அப்டிமஸ் நோட் மொபைல் ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரீட் 2.3.4 வெர்ஷன் கொண்டது. இதில் எல்சிடி ஸ்கிரீன் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இது 800 X 480 பிக்ஸல் ரிசல்யூஷன் துல்லியத்தை வழங்குகிறது. இந்த எல்ஜி மொபைல் ஸ்லைட் போன்ற கீபேட் வசதி கொண்டது.

இதில் 1.2 ஜிஎச்இசட் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மொபைலில் இரண்டு கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் 5 மெகா பிக்ஸல் கேமரா வசதி துல்லியமான புகைப்படம் எடுக்க உதவுகிறது. இதில் விஜிஏ கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட் மொபைலில் ப்ளாஷ் மற்றும் சூம் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற சூம் வசதியினால் எந்த ஒரு புகைப்படத்தையும் சூம் செய்து தெளிவாகப் பார்க்க முடியும். இந்த மொபைல் 12.3 மிமீ தடிமன் கொண்டது.

இதில் 8 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதி கொடுக்கப்பட்டுள்ளது. எல்ஜி ஆப்டிமஸ் நோட் மொபைலில் புளூடூத், வைபை, எட்ஜ், யூஎஸ்பி, எச்டிஎம்ஐ போர்ட் போன்ற தொழில் நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன் வைபை வசதியின் மூலம் நெட் தொடர்பை எளிதாகப் பெறமுடியும்.

புளூடூத் வசதி உள்ளதால் தகவல்களை சுலபமாக நண்பர்களிடையே பரிமாறிக் கொள்ள முடியும். எஸ்எம்எஸ், எம்எம்எஸ், எப்எம் ரேடியோ, கால் லாகிங், ரெக்கார்ட், மல்டிபில் ஆடியோ மற்றும் வீடியோ போன்ற வசதிகளை எளிதாகப் பெற முடியும். இந்த ஸ்மார்ட்போன் முதலில் தென் கொரியாவில் வெளிவந்த பின்பு இந்தியாவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X