Home
Mobile

ரூ.2,000 விலையில் புதிய பட்ஜெட் மொபைலை அறிமுகப்படுத்தியது கார்பன்

By Super
ரூ.2,000 விலையில் புதிய பட்ஜெட் மொபைலை அறிமுகப்படுத்தியது கார்பன்
வெளி நாடுகளில் உள்ள மொபைல் நிறுவனங்கள் தங்கள் அறிய பல படைப்புகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. அது போல் இந்திய நிறுவனங்களும் உயர்ந்த தொழில் நுட்பங்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் இந்திய நிறுவனமான கார்பன் தற்போது கேசி-410 என்ற புதிய மொபைலை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த மொபைல் 1.77 இஞ்ச் திரையுடன், 77.6 கிராம் எடையை கொண்டுள்ளது.

முன்பெல்லாம் இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைலில் கேமரா வசதி இருக்காது. ஆனால் குறைந்த விலையிலும் கேமரா வசதியினை அளித்திருக்கிறது கார்பன் நிறுவனம்.

அடித்தட்டு மக்களின் மனோநிலையையும் மனதில் கொண்டு இந்த மொபைல் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் சொல்லலாம்.

இதில் 0.3 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் 800 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால், இந்த மொபைல் 270 நிமிடம் டாக் டைம் மற்றும் 200 மணி நேரம் ஸ்டான்பை டைமும் கொடுக்கிறது.

கேசி-410 மொபைலில் 2ஜிபி வரை மெமரியை விரிவுபடுத்திக் கொள்ளலாம். இந்த மொபைல் ஆடியோ மற்றும் வீடியோ ஃபார்மெட்களுக்கு சப்போர்ட் செய்கிறது. இதனால் பொழுதுபோக்கு அம்சங்களை எளிதாகப் பெற முடியும்.

அதோடு வாய்ஸ் ரெக்கார்டர், இ-புக், கரன்சி கன்வர்டர் போன்ற வசதிகளையும் இது கொடுக்கிறது. பின்பு அனைத்து வாடிக்கையாளர்களும் எதிர் பார்க்கின்ற புளூடூத் மற்றும் யுஎஸ்பி வசதியும் உள்ளது. இத்தனை வசதிகளையும் கொடுக்கும் இந்த மொபைலின் விலை ரூ.2,000 மட்டுமே.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X