புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது ஹுவெய்

ஒவ்வொருமுறையும் புதிய மொபைல்களை கொடுத்து வெற்றி வாகை சூடும் ஹுவெய் நிறுவனம் இந்தமுறையும் பில்லர் என்ற புதிய மொபைலை அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த மொபைல் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தோழனாக இருக்கும் தகுதிகளைப் பெற்ற மொபைல். இந்த மொபைலை பார்க்கும்போது முதலில் கண்களில் படுவது இதன் கீப்பேட்தான்.
இதில் உள்ள கியூவர்டிக் கீப்பேட் இந்த மொபைலுக்கு ஒரு கம்பீரமான தோற்றத்தை கொடுக்கிறது. இதன் 2 இஞ்ச் திரை, 320 X 240 பிக்ஸல் துல்லியத்தைக் கொடுக்கிறது.
இதன் இன்டர்நெட் பிரவுசிங் வசதி எச்டிஎம்எல் சாப்ட்வேரை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. ஆனால் இந்த மொபைல் கேமரா விஷயத்தில் குறைவான பிக்ஸல் கொண்ட கேமராவை கொண்டுள்ளது. அதாவது 0.3 மெகா பிக்ஸல் கேமராவைப் பெற்றுள்ளது இந்த மொபைல்.
ஹுவெய் பில்லர் மொபைல் 900 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் 4.50 மணி நேரம் டாக் டைம் மற்றும் 240 மணி நேரம் ஸ்டான்-பை டைமும் கொடுக்கிறது.
எல்லா தகவல்களையும் மனதில் பதிய வைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதில், இதன் மெமரி வசதியினை உபயோகித்துப் பயன்பெறலாம். இதனால் ஏராளமான குறிப்புகளை பதிவு செய்யலாம்.
இதன் பொழுதுபோக்கு அம்சங்களின் மூலம் வேலைப்பளுவைக் குறைக்கலாம். இனிமையான இசையைக் கேட்டுக் கொண்டே வேலையை தொடரலாம்.
இந்த மொபைல் புளூடூத் வசதிக்கு சப்போர்ட் செய்கிறது. ஹுவெய் பில்லர் மொபைலை சொந்தமாக்கிக் கொள்ளும் போது இதன் யூஎஸ்பி கனக்டிவிட்டியையும் உங்கள் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.
அதோடு இந்த மொபைலுக்கு வாரண்டி கார்டும் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் தொழில் நுட்பம் கொண்ட இந்த மொபைல் நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் விலையையும் கொண்டிருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
