அத்துனை தேவைகளையும் பூர்த்தி செய்ய வரும் இசட்டிஇ ஸ்மார்ட்போன்

இசட்இடி ஸ்மார்ட்போனில் 800 எம்எச்இசட் கியூவல்காம் எம்எஸ்எம்7227டி பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் கூகுள் ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ளதால் நிறைய ஆப்ளிக்கேஷன்களின் வசதிகளைப் பெற முடியும்.
இது 4.3 இஞ்ச் திரை கொண்டது. அதோடு பார்ப்பதற்கும் அழகான வடிவத்தைக் கொண்டிருக்கிறது. இந்த இசட்டிஇ ஸ்கேட் போன் பிராக்ஸிமிட்டி சென்ஸார், ஆக்சிலரோமீட்டர் சென்ஸார் போன்ற வசதிகளையும் கொண்டது. உள்ளது. வேகத்தை அதிகரிக்க 512 எம்பி ரேம் வசதியும் இதில் உள்ளது.
வாடிக்கையாளர்கள் எதிர் பார்கின்ற 3ஜி மற்றும் 2ஜி நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்கிறது.
அற்புதமான லவுடு ஸ்பீக்கர் வசதி கொண்டது. 3.5 மிமீ ஆடியோ ஜேக் வசதியுடன் வெளிவர உள்ளது. இதன் மைக்ரோ எஸ்டி கார்ட்ஸ் மெமரி ஸ்டோரேஜ் வசதிக்கு சப்போர்ட் செய்கிறது.
32 ஜிபி வரையிலும் கூட இசட்டிஇ மொபைலின் மெமரியை விரிவுபடுத்திக் கொள்ளலாம். இந்த மொபைல் 3ஜி, ஜிபிஆர்எஸ், எட்ஜ் போன்ற தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்கிறது. ஓ2டிபி புளூடூத் வசதியும் இதில் உள்ளது. கணினியில் உள்ளவற்றை மொபைலுக்கு மாற்ற யூஎஸ்பி வி2.0 போர்ட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
பின்பு அனைவரும் எதிர் பார்ப்பது கேமரா வசதி. 5 மெகா பிகஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சம் 2592 X 1944 பிக்ஸல் ரிசலயுஷன் கொண்டது. இது ஆட்டோ போக்கஸ், ஜியோ டேகிங் போன்ற வசதிகளையும் கொடுக்கிறது. இதில் செகன்டரி கேமரா வசதி இல்லை. இது மீடியா பிளேயர் வசதி கொண்டது.
இசட்இடி மொபைலில் 1,400 எம்ஏஎச் எல்ஐ-அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால் 5 மணி நேரம் டாக் டைம் கொடுக்கிறது. இந்த மொபைல் ரூ.15,000 விலை கொண்டதாக இருக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. கூடிய விரைவில் விற்பனைக்கு வரும் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications