Home
Mobile

1.09 கிலோ எடைகொண்ட புதிய நெட்புக்: சாம்சங் அறிமுகம்

By Super
1.09 கிலோ எடைகொண்ட புதிய நெட்புக்: சாம்சங் அறிமுகம்
அளவில் சிறிய அடக்கமான மின்னணு சாதனங்களை விரும்பும் போக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டெஸ்க்டாப்பிலிருந்து லேப்டாப்புக்கு மாறிய மக்கள் தற்போது கைக்கு அடக்கமான நெட்புக் மீது நாட்டம் செலுத்த துவங்கிவிட்டனர்.

எடை, அளவு, விலை என அனைத்திலும் குறைவாக இருக்கும் நெட்புக்குகள் தற்போது கம்ப்யூட்டர் மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிக்க துவங்கியுள்ளன. இதையடுத்து, எல்லோருக்கும் வசதியான விலைகளில் புதிய வரிசை நெட்புக் மாடலை சாம்சங் அறிமுகம் செய்துள்ளது.

என்-100 என்ற பெயரில் மார்க்கெட்டில் கால் பதித்துள்ள இந்த நெட்புக் கையில் எடுத்து செல்வதற்கு வசதியாக வெறும் 1.03 கிலோ எடையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

10.1 இஞ்ச் ஸ்கிரீனை கொண்ட இந்த நெட்புக் கம்ப்யூட்டரில் 1.33 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் அட்டாம் பிராசஸரும், 1ஜிபி டிடிஆர்-3 ரேமும் பொருத்தப்பட்டுள்ளது. இதில், 250ஜிபி சேமிப்பு திறன் கொண்ட ஹார்ட் டிஸ்க் பொருத்தப்பட்டுள்ளது.

மீகோ லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்லோடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் விண்டோஸ் ஓஎஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துக்கு அப்கிரேடு செய்துகொள்ளலாம். இன்டர்நெட் இணைப்புக்கான வசதியும் உண்டு.

ரூ.12,290 முதல் ரூ,22,990 வரையிலான விலைகளில் 8 விதமான வேரியண்டுகளில் சாம்சங் என்-100 நெட்புக் கிடைக்கிறது. இந்திய கம்ப்யூட்டர் மார்க்கெட்டில் இந்த புதிய நெட்புக் விற்பனையில் பல புதிய சாதனைகளை படைக்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X