நோக்கியா 701 மற்றும் 603 ஸ்மார்ட்போன்கள்: ஓர் ஒப்பீட்டு அலசல்

Posted By: Staff

நோக்கியா 701 மற்றும் 603 ஸ்மார்ட்போன்கள்: ஓர் ஒப்பீட்டு அலசல்
உலகெங்கும் பிரபலமாக பேசப்படும் மொபைல் தயாரிப்பின் நட்சத்திர நாயகன் என்று நோக்கியா நிறுவனத்தைக் கூறலாம். ஏனென்றால் இந்த மொபைல் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றிருப்பது அனைவரும் அறிந்த விஷயமே.

வாடிக்கையாளர்களுக்கு மொபைல் அதிகம் பழக்கத்தில் இல்லாத காலத்தில் இருந்தே நோக்கியா நிறுவனம் தன்னம்பிக்கையுடன் பல மொபைல்களை வெளியிட்டது.

அப்படிப்பட்ட நோக்கியா நிறுவனம் கடந்த ஆகஸ்டில் 701 என்ற ஸ்மார்ட் மொபைலை உலக அளவில் வெளியிட்டது. இதேபோன்று, அடுத்து 603 என்ற புதிய மொபைலை நோக்கியா நிறுவனம் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.

இந்த இரண்டு அற்புதமான ஸ்மார்ட்போன்களுமே சிம்பையான் பெல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் இயங்குகிறது. இந்த ஓஎஸ் எந்த விதமான சிரமமும் இன்றி இயங்க இதன் 1ஜிஎச்இசட் பிராசஸர் துணைபுரிகிறது.

701 மொபைல் 131 கிராம் எடையையும், 603 மொபைல் 109.6 கிராம் எடையையும் கொண்டது. நோக்கியா-701 மொபைல் சில்வர் லைட், ஸ்டீல் டார்க், அமித்திஸ்ட் வைலட் போன்ற கண்கவரும் நிறங்களில் உள்ளது. ஆனால் 603 மொபைல் கறுப்பு நிறத்தில் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.

3.5 இஞ்ச லெட் ப்ளாக்லிட் டிஎப்டி தொடுதிரை கொண்டது 701 மொபைல். நோக்கியா 603 மொபைல் 3.5 ஐபிஎஸ் எல்சிடி தொடுதிரை தொழில் நுட்பத்தைக் கொண்டது.

603 மற்றும் 701 என்ற இரண்டு மொபைல்களிலுமே ஆர்டிஎஸ் தொழில் நுட்பத்தின் மூலம் ஸ்டீரியோ எப்எம் ரேடியோவையும் கேட்டு மகிழ முடியும். இந்த மொபைல்கள் மியூசிக் ப்ளேயர் வசதிக்கு சப்போர்ட் செய்கிறது. 701 மொபைலில் எப்எம் டிரான்ஸ்மிட்டர் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்தாக அனைவரின் ஆர்வத்தையும் தூண்டும் கேமரா பற்றிய தகவல்கள். 701 மொபைல் 8 மெகா பிக்ஸல் கேமரா கொண்டது. இதன் துல்லியத்தைக் கேட்டால் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சிக்கு நிச்சயம் அளவே இருக்காது. ஏனெனில் இது 3264 X 2248 பிக்ஸல் துல்லியத்தை வழங்கி தொழில் நுட்ப நிபுணர்களின் திறமையை பகிரங்கப்படுத்தி உள்ளது. அதோடு இது டியூவல் லெட் ப்ளாஷ் வசதி இதில் உள்ளது.

603 மொபைல் 5 மெகா பிக்ஸல் கேமராவை கொண்டது. இதனால் 2592 X 1944 பிக்ஸல் துல்லியத்தை கொடுக்கிறது. ஆனால் கேமராவை பொருத்த வரையில் 701 மொபைல் 603 மொபைலையும் விட அதிக பிக்ஸல் கொண்ட கேமராவையும், அதிக துல்லியத்தையும் வழங்குகிறது.

ஸ்மார்ட் மொபைல் என்றால் விலையில் மட்டும் ஸ்மார்ட் அல்ல, தொழில் நுட்பத்திலும் ஸ்மார்ட்தான் என்பது இங்கு உண்மையாகிறது.

ஏனென்றால் இதில் ஜிபிஆர்எஸ், எட்ஜ், வைபை, பிராக்ஸிமிட்டி சென்சார், ஆக்சிலரோமீட்டர், டிஜிட்டல் கம்பாஸ், போட்டோ எடிட்டர் என்று இதன் உயர்ந்த தொழில் நுட்பங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த இரண்டு மொபைல்களிலும் ஏ-ஜிபிஎஸ் பயன்பாடுகளும் உள்ளது. எவ்வளவு தகவல்கள் வேண்டுமானாலும் இந்த மொபைல்களில் ஸ்டோர் செய்து கொள்ளலாம். 32ஜிபி வரை இதன் மைக்ரோஎஸ்டி கார்டு வசதி உள்ளது.

603 மொபைல் 2ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி கொண்டது. ஆனால் 701 மொபைலில் 8ஜிபி வரை இன்டர்னல் மெமரி ஸ்டோரேஜ் வசதியைப் பெற முடியும்.

நோக்கியா-701 மொபைல் சற்று கூடுதல் தொழில் நுட்பத்தினைக் கொண்டுள்ளதால் விலையிலும் கூடுதலாக இருக்கிறது. இந்த மொபைல் ரூ.17,000 விலையில் கிடைக்கும். நோக்கியா-603 மொபைல் ரூ.13,500 விலையில் கிடைக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் இதன் சரியான விலை இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட் மொபைல்களுமே அதிக வசதியினைக் கொடுக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிக அளவு பயன்பெற முடியம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot