8 மணி நேரம் டாக் டைமுடன் மோட்டோரோலா மொபைல்போன்

Posted By: Staff

8 மணி நேரம் டாக் டைமுடன் மோட்டோரோலா மொபைல்போன்
இது ஒரு வித்தியாசமான படைப்பு என்று அனைவரையும் சொல்ல வைக்கும் அளவிற்கு அசத்தலான வடிவமைப்பில் வெளிவந்துள்ளது இந்த புதிய மோட்டோரோலா மொபைல்.

பிரியா இ-119 என்ற புதிய மொபைலை பட்ஜெட் விலையில் வெளியிட்டுள்ளது மோட்டோரோலா நிறுவனம். அழகு மிளிரும் தோற்றத்துடன் கம்பீரமாக நிற்கிறது இந்த புதிய மொபைல்.

ஒவ்வொரு மொபைலின் தொழில் நுட்பமும் பயன்படுத்திய பிறகே தெரியும். ஆனால் இ-119 மொபைல் சற்று வித்தியாசம்.

ஏனென்றால் இந்த மொபைல் தனது வடிவமைப்பிலேயே வாடிக்கையாளர்களக்கு புதுமையை உணர்த்துகிறது. இது டியூவல் சிம் தொழில் நுட்பத்துடன் இந்திய சந்தைக்கு சவால்விட வந்துள்ளது.

எந்த ஒரு வேலையிலும் முழுமையை எதிர் பார்க்கின்ற மக்களுக்கு 2.4 இஞ்ச் தொடுதிரையை அளிக்கிறது இந்த மொபைல்.

எடுக்கும் புகைப்படங்களை கண்களில் பளிச்சிடும் அளவிற்கு துல்லியமாக கொடுக்கிறது இந்த மொபைல். 3.0 பிக்ஸல் கேமரா இருக்கிறது என்றால் துல்லியத்திற்கு குறையே இருக்காது என்பது வாடிக்கையாளர்களுக்கும் தெரிந்த ஒன்றே.

இப்பொழுதெல்லாம் நெட் தொழில் நுட்பம் கொண்ட மொபைல்களை மக்கள் எதிர் பார்க்க ஆரம்பித்துவி்ட்டனர். ஏனெனில் குறைந்த அவகாசம் கொண்ட வாழ்க்கையில் யாரும் நேரத்தை வீணடிக்கத் தயாராக இல்லை. அதனால் பிரவுசிங் சென்டர் தேடி ஓடும் நேரத்தைக் கூட சேமிக்கத் தொடங்கிவி்ட்டனர்.

நேரத்தை மிச்சம் செய்வது நல்ல விஷயம் தானே. நல்ல விஷயத்தை கடைபிடிக்க, வைபை தொழில் நுட்பத்தையும் மொபைலில் வழங்குகிறது இந்த புதிய பிரியா இஎக்ஸ்-119 மொபைல்.

அதிக தகவல்களைக் கொண்ட ஃபைல்களைக் கூட கண் இமைக்கும் நேரத்தில் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் புளூடூத் ஏ2டிபி வெர்ஷன் 2.1 மற்றும் இடிஆர் தொழில் நுட்பத்தின் மூலம் அனுப்பி மகிழ முடியும்.

வைபை மூலம் நிறைய தகவல்களை நெட் வசதி கொண்டு தெரிந்து கொள்ளவது மட்டும் அல்லாது, அப்படி தெரிந்து கொள்ளும் விஷயங்களை யூஎஸ்பி வசதியை பயன்படுத்தி, மொபைலுக்கு பதிவேற்றம் செய்ய முடியும். 8 மணி நேரம் 20 நிமிடம் டாக் டைம் கொடுக்கும் எல்ஐ-அயான் 750 எம்ஏஎச் பேட்டரி இருக்கையில் கவலையே இல்லை. அதோடு 680 மணி நேரம் ஸ்மான்-பை டைமும் பெற முடியும்.

இத்தனை வசதி கொண்ட இந்த பிரியா இஎக்ஸ்-119 மொபைல் ரூ.5,500 ஒட்டிய விலையில் கிடைக்கும். இந்த குறைந்த விலை கொண்ட மொபைலை அனைத்து வகை வாடிக்கையாளர்களும் வாங்க முடியும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot