எல்ஜி ஆப்டிமஸ் vs சோனி எக்ஸ்பீரியா மினி ப்ரோ: ஒப்பீடு

By Super
|
எல்ஜி ஆப்டிமஸ் vs சோனி எக்ஸ்பீரியா மினி ப்ரோ: ஒப்பீடு
பயனளிக்கும் விதத்தில் புதிய புதிய தொழில் நுட்பத்துடன் பல மொபைல்கள் வாடிக்கையாளர்களின் கைகளில் ஜொலித்துக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் எல்ஜி ஆப்டிமஸ் நெட், சோனி எக்ஸ்பீரியா மினி ப்ரோ என்ற இரண்டு மொபைல்களும், மொபைல் உலகின் இரு வேறு புதிய சகாப்தம் என்று கூறலாம்.

இந்த மொபைல்கள் ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட் மொபைல்கள். ஸ்மார்ட் மொபைல் என்றாலே நிறைய எதிர் பார்ப்புகளை வாடிக்கையாளர்கள் வைத்திருக்கிறார்கள். இந்த இரண்டு மொபைல்களுமே அந்த எதிர் பார்ப்பை கலைக்காத வண்ணம் தொழில் நுட்பத்தினை வழங்கியிருக்கிறது.

எல்ஜி ஆப்டிமஸ் நெட் மொபைல் 3.2 இஞ்ச் எச்விஜிஏ திரை கொண்டது. இன்னொரு மொபைலான சோனி எக்ஸ்பீரியா மினி மொபைல் 2.55 இஞ்ச் திரையை கொடுக்கிறது. இதனால் இந்த இரண்டு மொபைல்களிலும் எந்த காட்சியையும் முழுமையாகவும், தெளிவாகவும் காண முடியும்.

ஸ்டைலாக நிற்கும் இந்த இரண்டு ஸ்மார்ட்மொபைல்களுமே பார்க்கும் வாடிக்கையாளர்களை முதல் பார்வையிலேயே ஸ்தம்பித்து நிற்க செய்கிறது. அவ்வளவு நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் மொபைல்களின் ஒரு ஒற்றுமை, இரண்டுமே ஆன்ட்ராய்டு 2.3 வெர்ஷன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் இங்குகிறது. இதனால் நிறைய அப்ளிக்கேஷன்களை ஆன்ட்ராய்டு மார்க்கெடின் மூலம் அப்கிரேட் செய்து கொள்ள முடியும்.

மெமரி வசதியினைப் பொருத்த வரையில் எல்ஜி ஆப்டிமஸ் நெட் மொபைல், சோனி எக்பீரியா மினி மொபைலை மிஞ்சுகிறது. ஏனென்றால் எல்ஜி ஆப்டிமஸ் நெட் மொபைல் 32 ஜிபி மெமரி வரை சப்போர்ட் செய்கிறது. ஆனால் சோனி எக்ஸ்பீரியா மொபைல் 16 ஜிபி மெமரி வரை மட்டுமே சப்போர்ட் செய்கிறது.

சோனி மொபைல் 5 மெகா பிக்ஸல் கேமராவைக் கொண்டது. ஆனால் எல்ஜி ஆப்டிமஸ் மொபைலில் 3.15 மெகா பிக்ஸல் கேமராவை மட்டுமே கொண்டுள்ளது. கேமராவை பொறுத்த வரையில் சோனி எக்ஸ்பீரியா மொபைல் அதிக பிக்ஸல் கொண்ட கேமராவை கொண்டுள்ளது. இதனால் எந்த புகைபடமானாலும் சரி, வீடியோ ரிக்கார்டிங்கானாலும் சரி, தெளிவாகவும் துல்லியமாகவும் பெற முடியும்.

பேட்டரி விஷயத்தில் இந்த இரண்டு மொபைல்களுமே சிறந்த பேக்கப்பை வழங்கும் திறன் கொண்டது. புளூடூத், வைபை போன்ற வசதிகளையும் எளிதாகப் பெறலாம்.

எல்ஜி ஆப்டிமஸ் நெட் மொபைல் ரூ.10,000 விலையில் கிடைக்கும். சோனி எக்ஸ்பீரியா மினி ப்ரோ மொபைல் இதே விலையிலோ அல்லது கூடுதல் விலையிலோ கிடைக்கும். இது போன்ற உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்மொபைல்கள் வாடிக்கையாளர்களின் வாழ்வில் நவீன மாற்றங்களைக் கொடுக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X