1.5 ஜிகாஹெர்ட்ஸ் சூப்பர் பாஸ்ட் பிராசஸருடன் ஸ்மார்ட்போன்: எச்டிசி தீவிரம்

Posted By: Staff

1.5 ஜிகாஹெர்ட்ஸ் சூப்பர் பாஸ்ட் பிராசஸருடன் ஸ்மார்ட்போன்: எச்டிசி தீவிரம்
1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்ட சூப்பர் பாஸ்ட் பிராசஸருடன் புதிய ஸ்மார்ட்போனை களமிறக்க எச்டிசி ஆயத்தமாகி வருகிறது. இது ஹைஎண்ட் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

எச்டிசி விகர் என்ற பெயரில் வரும் இந்த போன் மல்டி டாஸ்க்கிங் செயலாற்றலில் சிறப்பாக இருக்கும். ஆன்ட்ராய்டு ஜிஞ்சர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், 1.5 ஜிகாஹெர்ட்ஸ் க்யூவல்காம் சூப்பர் பாஸ்ட் பிராசஸர் மற்றும் 256எம்பி கிராபிக்ஸ் பிராசஸர் ஆகிய பெரும் சூப்பர் பாஸ்ட் பட்டாளமே இதில் இருக்கும் என்பதால் வேகத்தை பற்றி அதிகம் கூறவேண்டியதில்லை.

வீடியோ கேம் விளையாடுவதிலும், வீடியோ ப்ளேபேக் செய்யும்போதும் ஓர் புதிய அனுபவத்தை பெறலாம் என்பது திண்ணம். மேலும், 3டி ஹைடெபினிஷன் துல்லியத்தில் வீடியோ ப்ளேபேக் தரும்.

அகன்ற தொடுதிரையுடன் வர இருக்கும் இந்த போன் அப்ளிகேஷன்களை எளிதில் இயக்க வசதியான வடிவமைப்புடன் வர இருக்கிறது. 32ஜிபி வரை கூடுதல் சேமிப்பு, ஜிபிஆர்எஸ், எட்ஜ், 3ஜி, புளூடூத்,வைஃபை உள்ளிட்ட அனைத்து இணைப்பு வசதிகளுடன் வரும் இந்த போன் சந்தையில் அனலை கிளப்பும் என்று தெரிகிறது.

உயரிய ஸ்மார்ட்போன் ரகத்தில் இந்த போன் ரூ.35,000 விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot