ஆடம்பரமாக வலம் வரப்போகும் எச்டிசி ஸ்மார்ட்போன்

இந்த மொபைல் கூகுள் ஆன்ட்ராய்டு வி2.3.4 ஜின்ஜர்பிரீட் வெர்ஷன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. இதில் 4.3 எஸ்-எல்சிடி டச் ஸ்கிரீன் கெப்பாசிட்டிவ் வழங்கப்பட்டுள்ளது. 2ஜி நெட்வெர்க் மற்றும் 3ஜி எச்எஸ்டிபிஏ நெட்வொர்க் வசதிக்கும் இந்த மொபைல் சப்போர்ட் செய்கிறது. இந்த மொபைல் 173 கிராம் எடை கொண்டது.
வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் வகையில் நிச்சயம் இதன் கேமரா இருக்கும். இதில் 8 மெகா பிக்ஸல் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டியூவல் லெட் ப்ளாஷ் வசதி கொண்ட கேமரா, அதிகபட்சம் 3264 X 2448 பிக்ஸல் ரிசல்யுஷனைக் கொடுக்கிறது. இதில் 2 மெகா பிக்ஸல் வசதி கொண்ட செகன்டரி கேமராவும் உள்ளது.
எச்டிசி 4ஜி மொபைல் எம்எஸ்டி வசதியினைக் கொண்டுள்ளது. 1ஜிபி ரேம் வசதியோடு 16 ஜிபி இன்டர்னல் மெமரி ஸ்டோரேஜ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மெமரி வசதியை 32 ஜிபி வரை வேண்டுமானாலும் விரிவுபடுத்திக் கொள்ளலாம்.
ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் தொழில் நுட்ப வசதியும் இந்த மொபைல் கொண்டுள்ளது. இதன் வைபை வேகமான நெட் வசதியினை பெற உதவுகிறது. அதோடு டிஎன்எல்ஏ வசதியும் உள்ளது. தகவல்களை பரிமாற்றிக் கொள்ள இதில் வி3.0 ஏ2டிபி புளூடூத் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
இதில் 1730 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால் நீண்ட நேரம் டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை டைமும் கொடுக்கிறது. வி 2.0 யூஎஸ்பி போர்ட் வசதியும் கொடுக்கும். இந்த மொபைல் வாடிக்கையாளர்கள் எதிர் பார்க்க முடியாத அளவு உயர்ந்த தொழில் நுட்பம் கொண்டது.
இத்தகைய வசதிகள் கொண்ட எச்டிசி அமேஸ் 4ஜி மொபைல் ரூ.34,000 விலையில் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications