கண்கவரும் வடிவமைப்பில் ஜிஃபைவ் மொபைல்கள்!

By Super
|

{image-02-g'five-g99-g66i.jpg tamil.oneindia.com}இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மொபைல்கள் இந்திய சந்தைக்கு வர உள்ளது. ஜி-99 மற்றும் ஜி-66ஐ என்ற ஸ்மார்ட்போன்களை ஜி' ஃபைவ் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. ஜி-99 டியூவல் சிம் வசதி கொண்ட மொபைல். மிக அழகாக தொடு திரை வசதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ப்ரவுன் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜி-99 மொபைல் 2.6 இஞ்ச் திரை வசதி கொண்டது. ஃப்லிப் கவர் பொருத்தப்பட்டுள்ளதால் இந்த மொபைலின் ஸ்டைல் இன்னும் கூடுகிறது. இது டிட்டேச்சபில் கீப்பேட் வசதி கொண்டது. இதில் டியூவல் டிஜிட்டல் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. ஜாவா ப்ளாட்ஃபார்ம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜி-99 ஸ்மார்ட்போனில் 800 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது 4 ஜிபி மெமரி வசதி கொண்டது. மல்டிப்பில் ஆடியோ மற்றும் வீடியோ வசதிக்கு சப்போர்ட் செய்கிறது. புளூடூத், எப்எம் போன்ற பயன்பாடுகளையும் இதன் மூலம் பெற முடியும்.

ஜி'ஃபைவ் நிறுவனத்தின் இன்னொரு ஸ்மார்ட்மொபைலான ஜி-66ஐ போனும் டச் ஸ்கிரீன் மற்றும் டியூவல் சிம் வசதி கொண்டது. ஜி-99 மாடலைவிடவும் ஜி-66ஐ மாடல் சற்று மேம்படுத்தப்பட்ட வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஜி-66ஐ மொபைலில் 1,500 எம்ஏச் எல்ஐ-அயான் போட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த மொபைலும் டியூவல் கேமரா வசதி கொண்டது.

ஜி-66ஐ வைபை மற்றும் அனலாக் டிவி வசதி கொண்டது. இந்த மொபைலில் எப்எம் ரேடியோ, ஸ்டீரியோ புளூடூத், 3.5 மிமீ ஆடியோ ஜேக், மீடியாப் பிளேயர் போன்ற வசதிகளும் உள்ளது. இது 2 ஜிபி மெமரி கார்டு வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மெமரி வசதியை 4 ஜிபி வரை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஜி-99 மொபைல் ரூ.2,800 விலையிலும் ஜி-66ஐ மொபைல் ரூ.4,000 விலையிலும் இருக்கும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X