கண்கவரும் வடிவமைப்பில் ஜிஃபைவ் மொபைல்கள்!

Posted By: Super
    X

    கண்கவரும் வடிவமைப்பில் ஜிஃபைவ் மொபைல்கள்!

    இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மொபைல்கள் இந்திய சந்தைக்கு வர உள்ளது. ஜி-99 மற்றும் ஜி-66ஐ என்ற ஸ்மார்ட்போன்களை ஜி' ஃபைவ் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. ஜி-99 டியூவல் சிம் வசதி கொண்ட மொபைல். மிக அழகாக தொடு திரை வசதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ப்ரவுன் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ஜி-99 மொபைல் 2.6 இஞ்ச் திரை வசதி கொண்டது. ஃப்லிப் கவர் பொருத்தப்பட்டுள்ளதால் இந்த மொபைலின் ஸ்டைல் இன்னும் கூடுகிறது. இது டிட்டேச்சபில் கீப்பேட் வசதி கொண்டது. இதில் டியூவல் டிஜிட்டல் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. ஜாவா ப்ளாட்ஃபார்ம் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஜி-99 ஸ்மார்ட்போனில் 800 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது 4 ஜிபி மெமரி வசதி கொண்டது. மல்டிப்பில் ஆடியோ மற்றும் வீடியோ வசதிக்கு சப்போர்ட் செய்கிறது. புளூடூத், எப்எம் போன்ற பயன்பாடுகளையும் இதன் மூலம் பெற முடியும்.

    ஜி'ஃபைவ் நிறுவனத்தின் இன்னொரு ஸ்மார்ட்மொபைலான ஜி-66ஐ போனும் டச் ஸ்கிரீன் மற்றும் டியூவல் சிம் வசதி கொண்டது. ஜி-99 மாடலைவிடவும் ஜி-66ஐ மாடல் சற்று மேம்படுத்தப்பட்ட வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஜி-66ஐ மொபைலில் 1,500 எம்ஏச் எல்ஐ-அயான் போட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த மொபைலும் டியூவல் கேமரா வசதி கொண்டது.

    ஜி-66ஐ வைபை மற்றும் அனலாக் டிவி வசதி கொண்டது. இந்த மொபைலில் எப்எம் ரேடியோ, ஸ்டீரியோ புளூடூத், 3.5 மிமீ ஆடியோ ஜேக், மீடியாப் பிளேயர் போன்ற வசதிகளும் உள்ளது. இது 2 ஜிபி மெமரி கார்டு வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மெமரி வசதியை 4 ஜிபி வரை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஜி-99 மொபைல் ரூ.2,800 விலையிலும் ஜி-66ஐ மொபைல் ரூ.4,000 விலையிலும் இருக்கும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more