மலிவு விலையில் ப்ளை வழங்கும் டச் அண்ட் டைப் மொபைல்

Posted By: Staff

மலிவு விலையில் ப்ளை வழங்கும் டச் அண்ட் டைப் மொபைல்
எத்தனை புதிய தொழில் நுட்பம் கொண்ட மொபைல் விற்பனைக்கு வந்தாலும் வாடிக்கையாளர்களின் கண்கள் இன்னும் டியூவல் வசதி கொண்ட மொபைலைத் தேடத்தான் செய்கிறது.

இதை மனதில் கொண்டு எம்வி-249 மொபைலை வெளியிட்டுள்ளது ஃப்லை நிறுவனம். டியூவல் தொழில் நுட்பம் மட்டும் அல்லாமல் டச் மற்றும் டைப் வசதியையும் இதன் மூலம் பெற முடியும்.

அதனால் தான் முன்னனி நிறுவனங்கள் டியூவல் வசதி கொடுக்கும் மொபைல்களை மக்களுக்கு கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இந்திய சந்தையில் இந்த டியூவல் சிம் வசதி உள்ள மொபைல்கள் அதிகம் விற்பனையாகக் காரணமும் இருக்கிறது. மேலும், இரண்டு சிம் வைத்திருப்பவர்கள் ஒரு சிம் கார்டை பயன்படுத்த வேண்டுமென்றால் ஒவ்வொரு முறையும் மொபைலைக் கழற்றி சிம் கார்டுகளை மாற்றுவது சற்று சிரமத்தைக் கொடுக்கிறது.

இந்த பிரச்னையை களையும் விதமாக மார்கெட்டில் ஏராளமான டியூவல் சிம் மொபைல்கள் வந்துள்ளன. ஆனாலும், அதிலும் கூடுதல் வசதிகள் கொண்ட மொபைல்களுக்கு மார்க்கெட்டில் தனி வரவேற்பு கிடைக்கிறது.

எந்த மாநிலத்தைச் சேர்ந்த சிம் கார்டுகள் இருந்தாலும், இரண்டு சிம் கார்டுகளை ஒரே மொபைலில் பொருத்திக்கொள்ளும் வகையில் டியூவல் சிம் மொபைல்கள் வரவேற்பை பெறுகின்றன. இரண்டு சிம்களில் இருந்து வரும் எந்த அழைப்பையும் தவறவிட வேண்டிய அவசியமே இல்லை.

எனவே, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் புதிய டியூவல் சிம் கார்டு பொருத்தும் வசதிகொண்ட புதிய டச் அண்ட் டைப் மொபைலை ப்ளை நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

2.4 இஞ்ச் திரையின் மூலம் போதிய அளவு தெளிவாகப் பார்க்க முடியும். ஸ்டைலான தோற்றத்தையும் கொண்டுள்ளது. இதனால் கையில் வைத்திருப்பவர்களின் ஸ்டைலையும் உயர்த்திக் காட்டும்.

இதன் 2 மெகா பிக்ஸல் கேமரா 1600 X 1200 பிக்ஸல் துல்லியத்தைக் கொடுக்கிறது. இரண்டு மெகா பிக்ஸல் கேமராவில் இத்தனை அதிகமான துல்லியம் கிடைக்கிறதென்றால், எந்த வித சந்தேகமும் இன்றி தெளிவான புகைப்படத்தையும், வீடியோவையும் கொடுக்கும் தன்மை கொண்ட மொபைல் என்று தாராளமாக நம்பலாம்.

இதன் மெமரி வசதியும் இதில் அதிகம் தான். ஏனென்றால் இதில் 66எம்பி வரை இன்டர்னல் மெமரி வசதி உள்ளது. அதோடு 32ஜிபி இதன் மெமரியை விரிவுபடுத்திக் கொள்ளலாம்.

1200 எம்ஏஎச் லித்தியம் ஆயான் பேட்டரி உள்ளதால் 12 மணி நேரம் டாக் டைம் மற்றும் 216 மணி நேரம் ஸ்டான்-பை டைமும் கொடுக்கிறது. இந்த மொபைலில் உள்ள யூஎஸ்பி வசதியின் மூலம், லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் பொருத்தி தகவல்களை பதிவேற்றம் செய்து கொள்ள முடியும்.

எம்வி-249 மொபைலில் உள்ள வசதிகளைப் பார்க்கும் போது, இது தரமான தொழில் நுட்பத்தைக் கொடுக்கும் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இந்த ஃப்லை எம்வி-249 மொபைலின் விலை ரூ.3,500. இந்த விலையில் தொடுதிரையில் இருந்து, மெமரி வரை அதிக வசதிகளை வழங்குகிறது என்றல் நிச்சயம் இதில் சிறந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்