ரூ.3,000ல் கிவெர்ட்டி கீபேடுடன் டியூவல் சிம் போன்: ப்ளை

Posted By: Staff

ரூ.3,000ல் கிவெர்ட்டி கீபேடுடன் டியூவல் சிம் போன்: ப்ளை
ஐரோப்பிய மொபைல் நிறுவனமான ப்ளை மொபைல்ஸ் உலக அளவில் மொபைல் வர்த்தகத்தில் தமது தரம் மற்றும் புதிய சிந்தனை மூலம் கொடிகட்டி பறக்கின்றனர்.

அவர்களின் புதிய ப்ளை க்யு 120 டிவி இந்தியாவிற்கு விரைவில் வரவிருக்கிறது. இந்த மொபைலின் சிறப்பம்சம் இது இரட்டை சிம் வசதியுடன் க்யுவெர்டி கீபேடுடன் வருகிறது. மேலும் இதில் நிறைய வசதிகள் இருக்கும் என்ற ப்ளை மொபைல்ஸ் நிறுவனம் உறுதி அளிக்கிறது.

ப்ளை க்யு 120 டிவி 95 கிராம் எடையுடன் 112.6 x 62.5 x 2.6 மிமீ பரப்பளவைக் கொண்டிருக்கிறது. மற்றும் இதன் ஜிசிஎம் ப்ரீக்வன்சி 900/1800 எம்ஹச்ஸட் ஆகும். இதன் திரை 2.0 இன்ச் கொண்டு 262கே வண்ணம் பெற்று டிஎப்டி தொழில்நுட்பத்தை வழங்குகிறது.

ப்ளை க்யு 120 டிவியின் கேமராவைப் பார்த்தால் இது 0.3 விஜிஎ மெகா பிக்ஸல் கேமரா கொண்டு 640 x 480 பிக்ஸல் ரிசலூசனைக் கொண்டுள்ளது. மேலும் இந்த கேமராவில் டிஜிட்டல் சூம் வசதியும் உள்ளது. அதோடு இந்த கேமரா மூலம் க்யுசிஐஎப் 176 x 220 பிக்ஸல் அளவிற்கு வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் எம்பி4, 3ஜிபி, எஎம்ஆர் ஒலி அமைப்பு மற்றும் டபுள்யுஎவி போன்ற பைல்களையும் இந்த கேமரா சப்போர்ட் செய்யும்.

இதன் இன்டர்னல் மற்றும் எக்ஸ்டர்னல் மெமரி மிகவும் ஆச்சரியத்தைக் கொடுக்கும். ஆம், ப்ளை க்யு 120 டிவி மைக்ரோஎஸ்டிஹச்சி மெமரி கார்டுடன் 16ஜிபி அளவு எக்ஸ்டர்னல் மெமரியைக் கொண்டிருக்கிறது. மேலும் ஜிபிஆர்எஸ் மற்றும் ஒடிஎ சப்போர்ட்டையும் பெற்றுள்ளதால் இதில் ப்ரவுஸ் செய்வது சிறந்த அனுபவமாக இருக்கும். அதோடு அனலாக் டிவி வசதியும் உள்ளதால் இந்த மொபைல் வாடிக்கையாளர்களின் வரப்பிரசாதமாக இருக்கும்.

மின் திறனுக்காக ப்ளை க்யு 120 டிவி 900எம்ஹச் லை-யன் பேட்டரி கொண்டிருப்பதால் 3 மணி நேரம் தடையின்றி பேசும் மின்திறனும் 360 மணி நேரம் ஸ்டான்டர்டு பேட்டரி பேக்கப்பும் இதில் உள்ளது. இந்திய சூழலுக்கு ஏற்றவாறு இந்த பேட்டரி சிறந்த செயல் திறனை வழங்கும் என்று ப்ளை மொபைல்ஸ் நிறுவனம் உறுதி அளிக்கிறது. மேலும் இதில் மியூசிக் ப்ளேயர், வீடியோ ப்ளேயர் மற்றும் எப்எம் ரேடியோ போன்ற வசதிகளும் உள்ளன.

எனவே ப்ளை க்யு 120 டிவி மொபைலை நாம் தாராளமாக தேர்ந்தெடுக்கலாம். இதன் விலை ரூ.3,000க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot