'இதைப்பற்றி' நாசா மறைக்க என்ன காரணம்.??!

|

2015, மார்ச் 14 ஆம் தேதி சூரியன் உள் கட்டமைப்பு , அதன் விரிவான வெளி மண்டலம் மற்றும் சூரிய காற்றின் ஆதிமூலம் போன்றவைகளை ஆராயும் சோலார் மற்றும் ஹிலியோஸ்பெரிக் அப்சர்வேட்டரி (Solar and Heliospheric Observatory) எனப்படும் சோஹோ (SOHO) செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களில் மிகவும் 'விசித்திரமான திகிலூட்டும்' உருவம் ஒன்று பதிவாகியுள்ளது.

'இதைப்பற்றி' நாசா மறைக்க என்ன காரணம்.??!

மீண்டும் அதே மர்ம உருவம் அதே நாளில் (2015, மார்ச் 14 ஆம் தேதி) இரண்டாம் முறையும் சூரியனுக்கு நெருங்கிய உட்புற சூரிய வழியாக செல்வது பதிவாகியது. அங்கிருந்து எண்ணில் அடங்காத சதியாலோசனை கோட்பாடுகளும் ஆயிரக்கணக்கான கேள்விகளும் ஆரம்பித்தன. ஆனால், எதற்குமே நாசாவிடம் இருந்து பதில் இல்லை...!

நாசா மறைக்கிறது :

நாசா மறைக்கிறது :

ஆரம்ப காலத்தில் இருந்தே வேற்றுகிரக வாசம் சார்ந்த உண்மைகளை நாசா மறைத்து வருகிறது என்று ஏலியன் பிலிவர்ஸ் எனபப்டும் வேற்றுகிரகவாச நம்பிக்கையாளர்கள் கூறிக் கொண்டு வருகின்றனர்.

யூஎப்ஒ போக்குவரத்து :

யூஎப்ஒ போக்குவரத்து :

தற்போது சூரியன் அருகே, மிகபெரிய அளவில் ஏலியன் யூஎப்ஒ-க்களின் போக்குவரத்து நடைபெறுவதை தான் கிடைக்கப்பெற்றுள்ள சோலார் மற்றும் ஹிலியோஸ்பெரிக் அப்சர்வேட்டரி புகைப்படங்கள் விளக்குகின்றது என்று யூஎப்ஒ ஹன்டர்ஸ் (UFO Hunters) கோரியுள்ளனர்.

தாய் அல்லது பயணம் செய்யும் கப்பல் :

தாய் அல்லது பயணம் செய்யும் கப்பல் :

புகைப்படத்தில் சிக்கியுள்ள மர்ம உருவமானது ஏலியன்களின் தாய் கப்பலாகவோ அல்லது பயணம் செய்யும் கப்பல், போர்க்கப்பல், அதிரடிப்படை கப்பலாகவோ இருக்கலாம் என்றும் யூஎப்ஒ ஹன்டர்ஸ் கருத்து தெரிவித்துள்ளனர்.

 உடுக்களிடை விண்கலம் :

உடுக்களிடை விண்கலம் :

அதுமட்டுமின்றி பதிவாகியுள்ள மர்ம உருவம் ஆனது - சிக்கலான அதே சமயம் சமச்சீர் கட்டமைப்புகள் மற்றும் ஏரோடைனமிக்ஸ் அம்சங்கள் கொண்ட செயற்கை அல்லது புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்ட உடுக்களிடை விண்கலம் ( interstellar spacecraft) ஆக இருக்கலாம் என்றும் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

நாசா மற்றும் ஐரோப்பிய நாடுகள் :

நாசா மற்றும் ஐரோப்பிய நாடுகள் :

இதை பதிவு செய்துள்ள சோஹோ செயற்கைகோள் ஆனது நாசா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஒரு கூட்டுத்திட்டதில் உருவான சூரிய செயல்பாடு பற்றிய தரவுகளை சேமிக்கும் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

விளக்கம் :

விளக்கம் :

இருப்பினும் கூட இந்த மர்ம உருவம் பற்றி எந்த விதமான விளக்கத்தையும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொருண்மை :

பொருண்மை :

ஒரே நாளில் ஒரே போன்ற உருவம் இரண்டு முறை பதிவாகி உள்ளதால் இது நிச்சயமாக டிஜிட்டல் உருவத்தில் ஏற்பட்ட சீரற்ற உருவமாகவோ அல்லது சூரியனில் இருந்து வெளிப்படுத்தப்பட்ட பொருண்மையாகவோ (coronal mass ejection - CME) இருக்க வாய்ப்பில்லை என்ற ஆணித்தனமான கருத்தும் வெளியாகியுள்ளது.

எரிவாயு மற்றும் காந்த புல கசிவு :

எரிவாயு மற்றும் காந்த புல கசிவு :

சூரியனில் இருந்து வெளியேறும் மிகப்பெரிய அளவிலான எரிவாயு மற்றும் காந்த புல கசிவை தான் கோரோனல் மாஸ் ஈஜக்ஷன் (coronal mass ejection - CME) எனப்படுகிறது. இவ்வகை நிகழ்வுகளை கோரோனோகிராப் (coronagraph) மூலம் பதிவு செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நெருங்கி கொண்டிருக்கிறது :

நெருங்கி கொண்டிருக்கிறது :

"இதை மட்டுமின்றி அனைத்து வகையான யூஎப்ஒ சார்ந்த பதிவுகளையும் நாசா புறக்கணித்துக் கொண்டிருப்பதின் மூலம் இதுநாள் வரையிலாக நாசா மறைத்து வரும் உண்மைகள் வெளியாகும் நாள் நெருங்கி கொண்டிருக்கிறது என்பது தெளிவாக புரிகிறது" என்ற கருத்தையும் யூஎப்ஒ ஹன்டர்ஸ் முன்வைக்கின்றனர்.

நாசாவிற்கு சவால் :

நாசாவிற்கு சவால் :

ஸ்டீரீட்கேப் 1 என்ற யூட்யூப் சேனல் தான் இந்த மர்ம உருவத்தை பற்றிய செய்திகளையும் ஆதாரத்தையும் வெளியிட்டது என்பதும் மட்டுமின்றி இது போலியான புகைப்படமோ அல்லது ஏமாற்று வேலையோ இல்லை என்று நாசாவிற்கு சவால் விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

பூமிக்குள் புதையுண்டு வாழும் திகிலூட்டும் 'உச்சவிரும்பி' இனம்..!


'கிண்டலடித்த' நாடுகளுக்கு, இதோ இந்தியாவின் 'பதிலடி'..!!


'எஃப்' மாற்றம் 'ஜே' கீகளில் இருக்கும் சிறு கோடு, காரணம் தெரியுமா..?!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Why NASA wont Talk About Massive Interstellar Alien UFOs That Appear In SOHO Images Of Our Sun. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X