ஆக்மென்டட் ரியாலிட்டி என்றால் என்ன.? அதெப்படி வேலை செய்யும்.?

ஆக்மண்டட் ரியாலிட்டி எப்படி வேலை செய்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? வாருங்கள்

By Gizbot Bureau
|

கடந்த 2016ஆம் ஆண்டின் டெக்னாலஜி புரட்சி என்று கூறினால் அது கண்டிப்பாக வெர்ட்டியுவல் ரியாலிட்டி (Virtual Reality) என்பதுதான் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். கடந்த ஆண்டு பல நிறுவனங்கள் இந்த வெர்ட்டியுவல் ரியாலிட்டியை பயன்படுத்தி பெரும் வரவேற்பை பெற்றன.

ஆக்மென்டட் ரியாலிட்டி என்றால் என்ன.? அதெப்படி வேலை செய்யும்.?

அந்த வகையில் இந்த வெர்ட்டியுவல் ரியாலிட்டியின் அடுத்த அம்சமாக இந்த ஆண்டு வெளிவரும் டெக்னாலஜிதான் 'ஆக்மண்டட் ரியாலிட்டி' (Augmented Reality). இதுகுறித்த அறிமுக செய்திகள் ஏற்கனவே இணையத்தில் வந்துவிட்டன

குறிப்பாக உலகின் பலரை கவர்ந்த போகிமான் கோ' விளையாட்டை அறியாதவர்கள் இல்லை. இது இந்த 'ஆக்மண்டட் ரியாலிட்டி டெக்னாலஜியில்தன் வந்தது என்றால் நீங்கள் நம்புவீர்களா? கண்டிப்பாக நம்பித்தான் ஆக வேண்டும். போகிமான் கோ மூலம் இதன் சிறப்பை அறிந்தவர்கள் நிச்சயம் இதன் அடுத்தடுத்த வெர்ஷனை எதிர்பார்ப்பது இயல்புதானே

வந்துவிட்டது பாரத் கியூஆர் கோடு.!

இந்த 'ஆக்மண்டட் ரியாலிட்டி'யை ரசித்து வியந்தால் மட்டும் போதாது. இதை பற்றிய சிறிதளவு அறிவையாவது தெரிந்து வைத்து கொள்வது நல்லது. 'ஆக்மண்டட் ரியாலிட்டியும், வெர்ட்டியுவல் ரியாலிட்டியும் ஒன்றா? வெவ்வேறா? 'ஆக்மண்டட் ரியாலிட்டி எப்படி வேலை செய்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? வாருங்கள்

'ஆக்மண்டட் ரியாலிட்டி என்றால் என்ன? எப்படி வேலை செய்கிறது?

'ஆக்மண்டட் ரியாலிட்டி என்றால் என்ன? எப்படி வேலை செய்கிறது?

'ஆக்மண்டட் ரியாலிட்டி என்பது விக்கிபீடியாவின்படி பார்த்தால் உங்களை சுற்றியுள்ள இயற்கையான உலகை உங்களுக்கு டெக்னாலஜி கண்கள் மூலம் கம்ப்யூட்டரில் உள்ள வீடியோ, ஒலி, கிராபிக் போன்றவற்றின் உதவியால் தெரிய வைக்கும் ஒரு உயர்ந்த டெக்னாலஜி.

அடிப்படையில் இது ஒரு சாப்ட்வேர் போன்றதுதான். இயற்கையான ஒரு பொருளை உங்கள் கற்பனைக் கண்களில் அடுக்கடுக்காக வைப்பதுதான் இதன் ஸ்பெஷல்

இந்த சாப்ட்வேரில் ஒருசில எலக்ட்ரானிக் உபகரணங்கள் இணைக்கப்படுகிறது. கேமிரா, ஆக்சிலெரோமீட்டர், காம்பாஸ் மற்றும் ஜிபிஎஸ் என்று கூறப்படும் லொகேஷன் டேட்டா ஆகியவைகளின் உதவியால் உலகை காண வைக்கும் ஒரு சாப்ட்வேர்.

நிஜம் மற்றும் கற்பனை கலந்த இந்த சாப்ட்வேரில் உண்மையான லொகேஷன் டேட்டாவுடன் செயற்கையான கற்பனையும் கலப்பதுதான் இதன் தனிச்சிறப்பு

'ஆக்மண்டட் ரியாலிட்டிக்கும் வெர்ட்டியுவல் ரியாலிட்டிக்கும் என்ன வித்தியாசம்?

'ஆக்மண்டட் ரியாலிட்டிக்கும் வெர்ட்டியுவல் ரியாலிட்டிக்கும் என்ன வித்தியாசம்?

இந்த இரண்டிற்கும் உள்ள முக்கிய வித்தியாசம் உண்மையும் கற்பனையும்தான். ஆம் வெர்ட்டியுவல் ரியாலிட்டியில் உங்கள் கற்பனைக்கு வேலை இல்லை. இதன் மூலம் உருவாக்கப்படும் கேம்ஸ்கள் உண்மையில் நீங்கள் ரியலாக பார்த்த உலகை கலந்திருக்கும்.

ஆனால் 'ஆக்மண்டட் ரியாலிட்டி என்பது ரியல் உலகத்துடன் செயற்கையான சில அம்சங்கள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். ஸ்மார்ட்போன் அல்லது வெப் கேரா மூலம் உங்களுக்கு இயற்கையும் செயற்கையும் கலந்த உணர்வை கொடுக்கும்

மொத்தத்தில் வெர்ட்டியுவல் ரியாலிட்டி என்பது உங்களுக்கு ரியல் உலகத்தை கொடுக்கும் என்றால் 'ஆக்மண்டட் ரியாலிட்டி என்பது உங்களுக்கு ரியலையும், கம்ப்யூட்டர் இமேஜ்கள் மூலம் கற்னையையும் சேர்த்து கொடுக்கும்

என்னதாம்ப்பா சொல்ல வர்றிங்க:

என்னதாம்ப்பா சொல்ல வர்றிங்க:

என்னதான் 'ஆக்மண்டட் ரியாலிட்டி குறித்து எழுத்தில் வர்ணித்தாலும் புரிவதற்கு கஷ்டமாக இருக்கும், அல்லது புரிய வைக்கும் அளவுக்கு எழுத்து இருக்காது. இதை அனுபவபூர்வமாக உணர்ந்தால்தான் மெல்ல மெல்ல அதன் சூட்சமம் தெரியும்.

இந்த 2017ஆம் ஆண்டு நிச்சயம் 'ஆக்மண்டட் ரியாலிட்டி ஆண்டுதான். இந்த ஆண்டு இறுதிக்குள் இதுகுறித்த அனைத்து தகவல்களையும் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் எளிமைப்படுத்தப்படும். அனைவரையும் இந்த ஆண்டுக்குள் இந்த டெக்னாலஜி சென்று சேரும் என்ற நம்பிக்கை உள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
A guide to Augmented Reality.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X