Subscribe to Gizbot

ஏலியன் கண்டுபிடிக்க வழிமுறைகள்.!!

Written By:

ஏலியன் எனும் வேற்றுக் கிரகவாசம் குறித்த உண்மை தகவல்களை அறிய உலகில் பலரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இது தெரிந்தோ அல்லது பாதுகாப்புக் காரணங்களைக் காட்டியோ உலகின் பல்வேறு நாட்டு அரசுகளும் ஏலியன் குறித்த தகவல்களை மறைத்து வருவதாகப் பல்வேறு சதியாலோசனை கோட்பாட்டாளர்களும் கருதுகின்றனர்.

உலக மக்களில் பலரும் கடவுளைத் தாண்டி ஏலியன்கள் சார்ந்த விடயத்தில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். இவை குறித்த தேடல்களில் ஏலியன் இருப்பதை நிரூபிக்கும் தெளிவான ஆதாரங்கள் இன்று வரை நம்மிடம் இல்லை என்பதே உண்மை.

ஏலியன் குறித்த சந்தேகம் நம் அனைவருக்கும் இருக்கின்றது என்பதைத் தாண்டி, ஏலியன்களை எங்குத் தேட வேண்டும் என்றும் அதற்கான தொழில்நுட்ப வளர்ச்சிகளும் இன்று நம்மிடம் இருக்கின்றது. இனி வரும் காலங்களில் ஏலியன் சார்ந்த தேடலில் பல்வேறு புரிதல் மற்றும் இவை குறித்த தெளிவான பார்வை அல்லது ஆதாரங்கள் கிடைக்கப் பெறலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ரேடியோ சிக்னல்

01

இன்று நம்மிடம் இருக்கும் ரேடியோ தொலைநோக்கிகளைப் பயன்படுத்திப் பூமியை சுற்றி என்னென்ன நடக்கின்றது என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. இதன் விளைவாக நாம் ஏற்கனவே வாவ் சிக்னல் மற்றும் எல்ஜிஎம் போன்றவை பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பின.

தூரம்

02

நம்மை விடச் சுமார் 300 கோடி ஒளியாண்டு தூரத்தில் இருந்து கிடைக்கும் சிக்னல்கள் குறித்து இன்று வரை ஏன் ஏற்படுகின்றது என்ற கேள்விக்குத் தெளிவான விளக்கம் இல்லை. பல ஆண்டுக் காலமாகத் தொடர்கின்றது.

விண்வெளி ஆய்வு

03

பிரபஞ்சத்தை நன்கு அறிந்து கொள்ள விண்வெளி ஆய்வு மிகவும் முக்கியமானதாகும். இதற்கென அமெரிக்காவின் நாசா 1977 ஆம் ஆண்டுச் சூரிய குடும்பத்தை விட்டு வெளியே செல்லும் திறன் கொண்ட வொயேஜர் 1 என்ற விண்ணுளவியை விண்ணில் செலுத்தியது.

நோக்கம்

04

மனிதன் தயாரித்து அதிகத் தூரம் விண்வெளியில் பயணித்த முதல் விண்ணுளவி என்ற பெருமையை வொயேஜர் 1 பெற்றுள்ளது. இதன் மூலம் வேற்றுகிரகவாசம் கண்டுபிடிக்கப்படலாம் அல்லது வேற்றுகிரகவாசிகள் நம்மைத் தொடர்பு கொள்ளலாம் என நம்பப்படுகின்றது.

பயோசிக்னேச்சர்

05

பயோசிக்னேச்சர் என்பது விண்வெளியில் மிதக்கும் அல்லது காணப்படும் ஒன்றாகும். இது ஏற்கனவே வாழ்ந்த அல்லது வாழும் வாழ்க்கையை விளக்கும் அறிவியல் ஆதாரம் ஆகும்.

தேடல்

06

பிரபஞ்சத்தில் பூமியை தவிற மனிதர்கள் வாழத்தகுந்த கிரகங்களைத் தேட அமெரிக்காவின் நாசா 2018 ஆம் ஆண்டிற்குள் விண்வெளியில் விண்கலங்களை ஏவத் திட்டமிட்டுள்ளது.

மாசு

07

ஆராய்ச்சியாளர்கள் நம் பிரபஞ்சத்தின் வெளியே தேடும் வேற்றுக்கிரக வாசிகளும் நம்மைப் போல் இருக்கலாம், இந்நிலையில் அவர்களும் நம்மைப் போல் கிரகத்தினை மாசுபடுத்தலாம். முன்பு குறிப்பிடப்பட்ட பயோசிக்னேச்சர் முறையைக் கொண்டு வேற்றுக்கிரகத்தில் மாசு இருப்பதைக் கொண்டு அங்கு யாரோ வாழ்ந்து வருகின்றனர் என்பதை மட்டுமாவது முதலில் உறுதி செய்ய முடியும்.

தொழில்நுட்பம்

08

தற்சமயம் முழு இருளில் இருக்கும் வெளிக் கோள்களில் இருந்து வரும் வெளிச்சத்தைக் கொண்டு அங்கு யாரேனும் வாழ்வது குறித்த முடிவு செய்யலாம். ஆனால் இதனைக் கண்டறிய நம்மிடம் இன்று தொழில்நுட்ப வசதி இல்லை.

மின்சக்தி

09

ஏலியன்களும் நம்மை போன்றே நட்சத்திரங்களில் இருந்து மின்சாரம் எடுக்கலாம். கர்தஷேவ் ஸ்கேல் முறையை பயன்படுத்தி அவர்கள் எந்தளவு மேம்பட்டிருக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள முடியும். இம்முறையானது அவர்கள் எதை கொண்டு மின்சக்தியை உற்பத்தி செய்கின்றனர் என்பதை வைத்து கூறுவதாகும்.

கண்டுபிடிப்பு

10

வேற்றுகிரக வாசிகள் தங்களது விண்கலங்களை அதாவது அடையாளம் தெரியாத பறக்கும் பொருளினை காமாக்கதிர்களை கொண்டு சக்தியூட்டலாம். இவைகளை வைத்து ஏலியன் நடமாட்டம் அல்லது குறைந்த பட்சம் அவர்கள் இருப்பதையாவது உறுதி செய்ய முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Ways We Might Finally Prove Aliens Exist Tamil

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot