Subscribe to Gizbot

வரலாற்றையே மாற்றியமைத்த அமானுட நிகழ்வுகள்.!!

Written By:

விளக்கம் அளிக்க முடியாதவைகளை தான் அமானுடம் என்கின்றோம். காரணமில்லாமல் உலகில் எதுவும் நடப்பதில்லை என்றாலும், பெரும்பாலும் அமானுட சம்பவங்களுக்கான காரணம் எதுவும் இன்று வரை யாராலும் அறியப்படவில்லை என்பதே உண்மை. பொதுவாக அமானுட சம்பவங்கள் பலர் உணரும் போது தான் அது குறித்த நம்பிக்கை பலருக்கும் வருகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
அமானுட நிகழ்வு #05

01

விர்ஜின் மேரி ஆசீர்வாதம்
இந்நிகழ்வு 1917 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஞாயிற்று கிழமை நடைபெற்றது.

ஆசீர்வாதம்

02

சுமார் 30,000 முதல் 100,000 பேர் வரை போர்ச்சுகல் நகரம் ஒன்றில் கூடியிருந்தனர். மதிய வேலையில் பறக்கும் தட்டை போன்ற ஒன்று வானத்தில் தென்ப்பட்டது. சிறிது நேரத்தில் இந்த பறக்கும் தட்டில் இருந்து அதிக பிரகாசமான ஒளி கூடியிருந்த மக்களை நோக்கி விழுந்தது. இந்த வெளிச்சத்தை கூடியிருந்தோர் விர்ஜின் மேரி மாதாவின் ஆசீர்வாதம் என கூறினர்.

விளக்கம்

03

இன்று வரை இந்நிகழ்விற்கு போதுமான விளக்கம் இல்லை என்ற போதும் ரோமன் கத்தோலிக் திருச்சபை இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அமானுட நிகழ்வு #04

04

பேய் வசிக்கும் அறை
ஒஹியோ பல்கலைக்கழகத்தில் 1970களில் மர்மமான முறையில் மரணித்த இளம் பெண் குறிப்பிட்ட அறை ஒன்றில் இன்றும் அமானுட நிகழ்வுகளை ஏற்படுத்துவதாக நம்பப்படுகின்றது.

அறை

05

வில்சான் ஹால் கட்டிடத்தில் பல்வேறு மாணவர்களின் உறங்கும் இடமாக இருந்த டார்மிடோரி அறையில் மர்மமான முறையில் உயிர் இழப்புகள் ஏற்பட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவை எதற்கும் முறையான காரணம் கிடைக்கப்பெறவில்லை.

பயன்பாடு

06

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட அறையானது பல்கலைக்கழக நிர்வாகத்தினால் நிரந்திரமாக மூடப்பட்டதோடு இன்று வரை அங்கு யாரும் வசித்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமானுட நிகழ்வு #03

07

போல்டர்ஜிஸ்ட் சாபம்
ஆவிகளின் நடமாட்டம் இருப்பதை உணர்த்துவது தான் போல்டர்ஜிஸ்ட் ஆகும். போல்டர்ஜிஸ்ட் சாபம் உண்மை தான் என பெரும்பாலானோர் நம்பினர்.

மரணம்

08

போல்டர்ஜிஸ்ட் சாபம் மூலம் உலகில் பலர் மர்மமான முறையில் மரணித்ததாக கூறப்படுகின்றது. மேலும் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய திரைப்படங்களை தொடர்ந்து பலர் மர்மமான முறையில் இறந்ததாகவும் கூறப்படுகின்றது.

மனித எலும்புகூடு

09

இவர் இயக்கிய திரைப்படங்களில் உண்மையில் மனித எலும்புகூடுகள் பயன்படுத்தப்ப்டதை தொடர்ந்து பலர் மரணித்திருக்கின்றனர். இதில் இக்கதையை எழுதிய எழுத்தாளரும் கார் விபத்தில் மரணித்தது குறிப்பிடத்தக்கது.

அமானுட நிகழ்வு #02

10

ரோஸ்வெல் விபத்து
அமெரிக்காவின் நெவாடா பகுதியில் அமைந்திருக்கும் தடை செய்யப்பட்ட ஏரியா 51 பகுதியில் ஏற்பட்ட அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் விபத்து.

மர்மம்

11

இந்த சம்பவம் நடைபெற்று பல ஆண்டுகள் கழிந்த போதும் இது குறித்த மர்மம் தொடர்ந்து நீடிக்கின்றது. பலரும் அமெரிக்க அரசு வேற்றுகிரக வாசிகளை வைத்து ஏரியா 51 பகுதியில் ரகசிய ஆய்வு மேற்கொண்டு வருகின்றது என நம்புகின்றனர்.

ஏலியன்

12

அமானுடம் சார்ந்த ஆய்வாளர்களை அதிகம் ஈர்த்த இச்சம்பவம் குறித்த சகியாலோசனை கோட்பாடு இயற்றப்பட்டுள்ளதோடு கூகுள் சார்பில் இதனை நினைவு கூறும் வகையில் டூடுள் ஒன்றும் வெளியிடப்பட்டது.

அமானுட நிகழ்வு #01

13

ட்ரோபா கற்கள்
தற்சமயம் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் சுமார் 12,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாக கண்டறியப்பட்டுள்ள பண்டைய காலத்தை ட்ரோபா கற்கள் குறித்த தகவல்கள் இன்றும் அறியப்படாத மர்மமாகவே இருக்கின்றது.

ட்ரோபா கற்கள்

14

1938 ஆம் ஆண்டு சீனாவின் பழைமை வாய்ந்த குகையில் கண்டெடுக்கப்பட்ட வட்ட கற்களை ட்ரோபா கற்கள் என அழைக்கப்படுகின்றது. இவை குறித்து எவ்வித தெளிவான தகவல்களும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

ஏலியன்

15

மேலும் இந்த கற்கள் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் மற்றும் வேற்றுகிரக வாசிகள் பயன்படுத்தியிருக்கலாம் என கோணத்திலும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Unexplained Paranormal Events That Changed History Tamil

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot