விளக்கமில்லா மர்மம் : எகிறும் மார்ஸ் எலும்பு கூடு சர்ச்சை..!

Written By:

க்யூரியோசிட்டி ரோவர் (Curiosity rover) - செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடத்திட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவினால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு தரையுளவியாகும். தற்போது அந்த ரோவர் செவ்வாய் மேற்பரப்பு முழுவதும் வழி செலுத்தி பூமியின் தூரத்து கிரகமான செவ்வாயை வெளிப்படுத்தும் படங்களை எடுத்து கொண்டிருக்கிறது..!

க்யூரியாசிட்டி ரோவர் பூமிக்கு அனுப்பும் ஒவ்வொரு புகைப்படமும் ஆயிரக்கணக்கான கேள்விகளையும் சர்ச்சைகளையும், சதியாலோசனை கோட்பாடுகளையும் கிளப்பி விடுகிறது என்பது நிதர்சனம். அப்படியாக தற்போது கிளம்பியுள்ள விளக்கமில்லாத சர்ச்சை தான் மார்ஸ் ஏலியன் ஸ்கெலிட்டன் (Mars Alien skeleton)..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆராயப்படும் :

ஆராயப்படும் :

செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஒவ்வொன்றும் பல சதி கோட்பாட்டாளர்களால் மிக ஆர்வமான முறையில் விசித்திரமான ஆதாரங்களை கண்டறியும் நோக்கத்தில் ஆராயப்படுகின்றன.

பாறைபகுதி :

பாறைபகுதி :

அப்படியாக சமீபத்திய செவ்வாய் புகைப்படம் ஒன்றில், பாறைபகுதியின் மேலொரு எலும்புக்கூடு பரந்து கிடப்பது போன்ற காட்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாராநார்மல் க்ரூசிபில் :

பாராநார்மல் க்ரூசிபில் :

செவ்வாயில் ஜூன் 2015-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் உள்ள எலும்பு கூடு மனித உருவத்தை ஒற்றுள்ளதாக யூட்யூப் சேனலான பாராநார்மல் க்ரூசிபில் வீடியோ வெளியிட்டது.

மதிப்பு :

மதிப்பு :

பாராநார்மல் க்ரூசிபில் யூட்யூப் சேனலுக்கு 100,000-க்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் உள்ளார்கள் என்பதும் பிரபல சதியாலோசனை கோட்பாடு வட்டாரங்களில் மதிப்புமிக்க சேனல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அலங்காரம் :

அலங்காரம் :

கணிக்கப்படும் எலும்புகூட்டின் தலைப்பகுதியில் அழகுபடுத்தப்பட்ட அல்லது அலங்காரம் செய்யப்பட்ட தலைத்துண்டு கொண்ட பெரிய மண்டை காட்சிப்படுகிறது.

கணிப்புகள் :

கணிப்புகள் :

அதன் மூலம் அந்த எலும்புக்கூடானது ஒரு ராஜாவாகவோ அல்லது மத குருவாகவோ அல்லது ஒருவேளை ஒரு வீழ்ந்த போர்வீரனாகவோ இருக்கலாம் என்ற கணிப்புகள் கிளம்பியுள்ளன.

அன்னிய மனித உரு :

அன்னிய மனித உரு :

"எதுவாக இருப்பினும் இது சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு அன்னிய மனித உருக்கொண்ட உயிரினத்தின் எலும்பு எச்சங்கள் தான்" என்று பாராநார்மல் க்ரூசிபில் அறிவித்துள்ளது.

அறிவார்ந்த இனத்தின் மிச்சம் :

அறிவார்ந்த இனத்தின் மிச்சம் :

"செவ்வாய் கிரகத்தை கட்டுப்பாட்டில் கொடுள்ள ஒரு அறிவார்ந்த இனத்தின் மிச்சம் தான் இது, செவ்வாய் மீதான நமது பார்வையை மாற்றியமைக்கும் அசாதாரண கண்டுபிடிப்பு இது" என்று பாராநார்மல் க்ரூசிபில் அறிவித்துள்ளது.

குறியீடு :

குறியீடு :

மறுபக்கம் மேற்றொரு புகைப்படத்தில் சிவப்பு கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள புள்ளிகளும் கோடுகளும் ஒருவகையான குறியீடு என்று நம்பப்படுகிறது. துரதிருஷ்டவசமாக, நிபுணர்களுக்கு இதில் உடன்பாடு இல்லை.

நேரியல் குன்றுகள் :

நேரியல் குன்றுகள் :

அந்த 'கோடுகள்' மணல்மேடில் இணையாக பயணக்காத இரு திசை காற்று மூலம் உருவாக்கப்பட்ட நேரியல் குன்றுகள் என்றும், சிறிய 'புள்ளிகளோ' அந்த நேரியல் குன்றுகள் உருவாக்கும் செயல்பாட்டில் ஏற்பட்ட சில குறுக்கீடுகளால் உருவானவை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புகைப்படங்கள் : நாசா / பாராநார்மல் க்ரூசிபில்

English summary
Unexplained footage of 'alien skeleton' on Mars fuels conspiracy theories. Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot