விமான தளத்தில் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு, 'மீண்டும் பரபரப்பு'.!!

By Meganathan
|

ஒஹியோ யுஎஃப்ஒ வீடியோ ஒன்று பதிவு செய்யப்பட்டது முதல் இணையத்தில் வைரலாகியுள்ளது. சனிக்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோவில் மர்மமான முறையில் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு பறந்தது பதிவாகியுள்ளது. டேடன் பகுதியை சுற்றி ரைட்-பேட்டர்சன் விமான தளத்தில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1

1

மே மாதம் 25 ஆம் தேதி தம்பதிகள் இந்த வீடியோவினை பதிவு செய்து, தனியார் தொலைகாட்சி மற்றும் இதர தளங்களக்கு தெரிவித்ததாக யுஎஃப்ஒ சார்ந்த தகவல்களை பதிவு செய்யும் செக்யூர் டீம் தெரிவித்துள்ளது.

2

2

வானத்தில் பறந்த அடையாளம் தெரியாத பறக்கும் தட்டை முதலில் கனவர் பார்த்ததாகவும், உடனே மனைவி தன் கைபேசியில் வீடியோவினை பதிவு செய்ய துவங்கியுள்ளனர்.

3

3

வானத்தில் வித்தியாசமாக காட்சியளித்ததால் தாங்கள் காட்சியினை மொபைலில் பதிவு செய்ய துவங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4

4

இந்த அடையாளம் தெரியாத பறக்கும் தட்டானது மூன்று தனிப்பட்ட ஆதாரங்களால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செக்யூர் டீம் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5

5

'ப்ராஜக்ட் ப்ளூ புகி என்ற புத்தகத்தில் ரைட்-பேட்டர்சன் விமான தளத்தில் மொத்தம் 12,618 வினோதமான காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் சுமார் 701 சம்பவங்கள் தொடர்ந்து அடையாளம் தெரியாமலே இருக்கின்றது' என யுஎஸ்ஏ டுடே தெரிவித்துள்ளது.

6

6

மேலும் இந்த விசித்திர சம்பவங்கள் 1947-1969 ஆம் ஆண்டு வாக்கில் பதிவு செய்யப்பட்டதாகவும் யுஎஸ்ஏ டுடேவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

7

7

'யுஎஃப்ஒ குறித்த விசாரணைகளில் எவ்வித யுஎஃப்ஒ'க்களும் பதிவு செய்யப்படவில்லை, இதோடு எவ்வித தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் கிடைக்கப்பெறவில்லை என்றும் எவ்வித அடையாளம் தெரியாத மற்றும் வேற்றுகிரக வாகனங்கள் வந்ததை நிரூபிக்கும் ஆதாரங்களும் பதிவு செய்யப்படவில்லை' என ரைட்-1985 ஆம் ஆண்டின் பேட்டர்சன் ஃபேக்ட் ஷீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக யுஎஸ்ஏ டுடேவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

8

8

டேடன் தினசரி செய்தியின் படி, செக்யூர் டீமானது பதிவு செய்யப்பட்ட புகைப்படம் ஏலியன் வாகனம், டிரோன் அல்லது ரகசிய விமான தள திட்டமாக இருக்க கூடும் என நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

9

9

ஏலியன் சார்ந்த விவகாரங்கள் சார்ந்த ரகசிய ராணுவ தளங்கள் என்றால் ரைட்-பேட்டர்சன் தளம் தான் நினைவிற்கு வருகின்றது, என இது குறித்து வெளியான வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10

10

'பதிவு செய்யப்பட்ட பறக்கும் தட்டிற்கும் விமான தளத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது' என ரைட்-பேட்டர்சன் விமான தளத்தின் தகவல் தொடர்பாளர் மேரி வோனோவர் செய்தி தாள்களில் தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
UFO Video Shot Near Air Force Base Stuns Viewers Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X