Subscribe to Gizbot

விண்வெளியில் 'நீடிக்கும்' டாப் 10 விசித்திரங்கள்..!

Written By:

எதை பற்றியெல்லாம் தெளிவாக புரிந்துக்கொள்ள முடியவில்லையோ அவைகளையெல்லாம் புதிர் என்றும் விசித்திரம் என்றும் மனிதரகள் சொல்வது ஒன்றும் புதிதில்லை. அதற்காக புதிர்களும் விசித்திரங்களும் கிடையவே கிடையாது என்று கூறி விட இயலாது. நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால், விண்வெளி எவ்வளவுக்கு எவ்வளவு அழகான ஒன்றோ.. அதற்கு ஈடாக மிகவும் விசித்திரமான மர்மமான ஒன்றும் கூட..!

அப்படியாக, விண்வெளியில் 'நீடிக்கும்' டாப் 10 விசித்திரங்கள் பற்றிய தொகுப்பே இது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
விசித்திரம் #10 :

விசித்திரம் #10 :

ஹப்பர்வெலாசிட்டி நட்சத்திரங்கள் (Hypervelocity Stars) - சூரியனை விட நன்கு மடங்கு பெரிய இந்த நட்சத்திர பந்துகள், மணிக்கு மில்லியன் மைல் வேகத்திற்கு விண்வெளி முழுவதும் எரிவாயு உமிழுந்து கொண்டே பறக்கும் விசித்திரங்கள் ஆகும்..!

விசித்திரம் #09 :

விசித்திரம் #09 :

க்லிசே 581 சி (Gliese 581 c) - சிவப்பு நிறத்திலும், சூரியனை விட மிக மிக சிறிய அளவிலும் இருக்கும் கிரகம் தான் க்லிசே 581 சி, எதிர்காலத்தில் மனித இனம் குடியேற வாய்ப்புள்ள கிரகங்களில் ஒன்று என்கிற அதே சமயம் மனிதர்களை கொல்லும் கொடிய கதிர்வீச்சு போன்ற ஆபத்துகளையும் கொண்ட கிரகம் ஆகும்.

விசித்திரம் #08 :

விசித்திரம் #08 :

தி காஸ்டர் சிஸ்டம் (The Castor System) - மிகவும் பிரகாசமான நட்சத்திரமான ஜெமினி அதன் இதர 5 நட்சத்திரக் கூட்டத்துடன் இணைந்து நமது சூரியனை காட்டிலும் சுமார் 52.4 மடங்கு அதிக வெப்ப ஒளிர்வு உற்பத்தி செய்கிறது.

விசித்திரம் #07 :

விசித்திரம் #07 :

ஸ்பேஸ் ராஸ்பெர்ரீஸ் மாற்றம் ரம் (Space Raspberries and Rum) - சமீபத்தில் நமது பால்வெளி மண்டலத்தின் மையத்தில் தூசு மேகம் கண்டுபிடிக்கப்பட்டது, அதை ஆராய்ந்ததில் அது சகிட்டரியஸ் பி2 (Sagittarius B2) என்று பெயர் சூட்டப்பட்டது. ஆராய்ந்ததில் அது ரம் மற்றும் ராஸ்பெர்ரீஸ் மனத்தில் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

விசித்திரம் #06 :

விசித்திரம் #06 :

க்லிசே 46 பி (Gliese 436 b) - இதை ஒரு எரியும் ஐஸ் கியூப் எனலாம், 439 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட இந்த கிரகம் ஆனது முழுதும் பனியால் சூழப்பட்டுள்ளது.

விசித்திரம் #05 :

விசித்திரம் #05 :

தி டைமண்ட் பிளான்ட் (Diamond Planet) - முழுக்க முழுக்க படிக வைரத்தால் உருவாகி கிடக்கும் கிரகம் என்று நம்பப்படுகிறது.

விசித்திரம் #04 :

விசித்திரம் #04 :

தி ஹிமிக்கோ க்ளவுட் (The Himiko Cloud) - ஹிமிக்கோ கிளவுட் ஆரம்ப பிரபஞ்சத்தில் காணப்படும் மிக பெரிய பொருள் ஆகும், கிட்டத்தட்ட பாதி பால்வெளியை உள்ளடக்கமாய் கொண்டது.

விசித்திரம் #03 :

விசித்திரம் #03 :

அண்டத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கம் (The Universe's Largest Water Reservoir) - பன்னிரண்டு பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அண்டத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கம்தனில் பூமி கிரகத்தில் இருக்கும் பெருங்கடல்களில் இருக்கும் நீரை விட 140 டிரில்லியன் மடங்கு அளவு அதிக நீர் உள்ளது.

விசித்திரம் #02 :

விசித்திரம் #02 :

அண்டத்தின் மிகப்பெரிய மின்னோட்டம் (The Universe's Largest Electrical Current) - விண்வெளியில் நீர்த்தேக்கம் போல மின்னோட்டமும் சமீபத்தில் கண்டுப்பிடிக்கப் பட்டது அதன் அளவு சுமார் ஒரு டிரில்லியன் மின்னல் போல்ட் இருக்குமாம்..!

விசித்திரம் #01 :

விசித்திரம் #01 :

தி எல்க்யூஜி (The LQG) - லார்ஜ் க்வாசர் க்ரூப் (Large Quasar Group) - நவீன வானியலில் உள்ள வழக்கமான சட்டங்களை உடைக்கும் மிகப்பெரிய அமைப்பான இது எப்படி உருவானது என்பது இன்றுவரை விண்வெளி ஆராய்சியாளர்களின் தேடல் தான்..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

பூமியை இரக்கமின்றி 'கொல்லப்போகும்' 7 கொடூரங்கள்..!


'நரகத்தை' கண்டுப்பிடித்து விட்டோம் : ஆராய்ச்சியாளர்கள் அதிரடி..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Top 10 Strangest Things In Space. Read mora about this in Tamil Gizbot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot