Subscribe to Gizbot

கிடைத்தது பூமியில் தான், ஆனால் அர்த்தம் தான் எங்கு தேடியும் கிடைக்கவில்லை..!

Written By:

நாம் வாழும் பூமியில் இருந்து உண்மையிலேயே ஆச்சரியமான பல விடயங்கள், கடந்த பல ஆண்டு காலமாக கிடைக்கப் பெற்றுக்கொண்டே இருக்கிறது..!

கண்டுபிடிக்கப்படும் விடயங்கள் ஆனது பண்டைய நகரங்களில் இருந்து நமக்கு தெரிந்த வரலாற்றை அதன் அடிப்பபடையிலேயே அனுதினமும் மறுவரையறை செய்ய உதவிக் கொண்டிருக்கிறது என்பது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் சில விடயங்கள் பெரிய அளவிலான மர்மங்களை தன்னுள் சுமந்துக் கொண்டேதான் இருக்கிறது..!

அவைகளில் எப்படி நோக்கினும் அர்த்தம் கிடைக்காத சில மர்மங்கள் தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டுள்ளன..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கிடைக்காத அர்த்தம் #01 :

#1

தி மவுண்ட் ஓவன் மோவா ( The Mount Owen Moa)

500 ஆண்டு :

#2

அப்லேண்ட் மோவோ என்பது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன பறக்க முடியாத ஒரு பறவை இனத்தை சேர்ந்தது.

அதிர்ச்சி :

#3

ஆனால், நியூஸிலாந்தில் மவுண்ட் ஓவன் குகைக்குள் கிடைத்த இந்த நகமானது நன்றாக பாதுகாக்கப்பபட்டுள்ளது என்பதே மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்க இது சுமார் 3000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது இன்னும் அதிர்ச்சியாக உள்ளது.

கிடைக்காத அர்த்தம் #02 :

#4

தி லாங்யூ குரோட்டோஸ் (The Longyou Grottoes)

படிவப்பாறை :

#5

சீனாவில் காணபப்டும் மனிதனால் உருவாக்கம் பெற்றுள்ள இந்த குகைகள் பிரித்தெடுக்கக் கூடிய சில்ட்ஸ்டோன் என்ற படிவப்பாறைகளால் செதுக்கப்பட்டுள்ளது.

கி.மு 212 :

#6

இவைகள் கி.மு 212-இல் அதாவது க்வின் வம்சத்திற்க்கு முன்பே கட்டப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படலாம் அதற்கு எந்த விதமான பதிவும் இல்லை.

கிடைக்காத அர்த்தம் #03

#7

தி கேட் ஆப் தி சன் (The Gate Of The Sun)

 கல் அமைப்பு :

#8

இங்கிலாந்தில் உள்ள ஸ்டோன்ஹெஞ் போன்றே இந்த சன் கேட்டும் இதுநாள் வரையிலாக நீடிக்கும் ஒரு மர்மமான ஒரு கல் அமைப்பாகும்..!

வானியல் :

#9

முதல் மனித பிறப்பு உருவான இடமாக கருதபப்டும் பொலிவியாவில் உள்ள இந்த கல் அமைப்பு தன்னுள் சில வகையான ஜோதிட மற்றும் வானியல் முக்கியத்துவங்களை கொண்டுள்ளதாக நம்பப்படுகிறித்து ஆனால் அவைகள் என்ன என்பது கண்டுபிடிக்கப்படவில்லை..!

கிடைக்காத அர்த்தம் #04

#10

லேன்ஸ் ஆக்ஸ் மீடோஸ் (L'Anse aux Meadows)

வயது :

#11

கனடாவின் நியூஃபவுன்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தளத்திற்கு வயது 1,000..!

வைக்கிங் குடியேறிகள் :

#12

அதாவது கிறிஸ்டோபர் கொலம்பஸ் இந்தியாவை நோக்கி கப்பல் பயணம் மேற்கொள்ள நினைப்பதற்கு முன்பே வைக்கிங் குடியேறிகள் வட அமெரிக்காவிற்கு வந்ததை நிரூபிக்கும் ஆதாரம்..!

கிடைக்காத அர்த்தம் #05

#13

கோபேக்கிலி டீபீ (Gobekli Tepe)

சுங்க வளர்ச்சி :

#14

துருக்கியில் உள்ள ஒரு மலை முகடு மீது கண்டெடுக்கப்பட்ட இந்த தளம் பண்டைய சுங்க வளர்ச்சி மீது நமது புரிதலை முன்னெடுத்துச் செல்வதற்கு நிறைய பங்கு வகிக்கிறது எனலாம்.

 பக்தி:

#15

முதலில் கோவில் கட்டமைக்கப்பட்டு பின்பு அதை சுற்றி நகரம்அமைக்கப் பட்டுள்ளதை வைத்து பார்க்கும் போது பக்தி சார்ந்த மக்கள் குடியேறிய இடம் அது என்பது புரிய வருகிறது.

கிடைக்காத அர்த்தம் #06

#16

வொய்நிச் கையெழுத்துப்படிவம் (The Voynich Manuscript)

கோட்பாடுகள் :

#17

ஏராளமான கோட்பாடுகள் வகுக்கப்பெற்றும் இன்றுவரையிலாக எழுப்பட்டிருப்பது என்ன மொழி என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

குறியீட்டு :

#18

சிலர் இதை ஒரு குறியீட்டு ஆசிய மொழி என்றும், சிலர் இது அழிந்துபோன மெக்சிகன் பேச்சுவழக்கு என்றும் நம்புகின்றனர்..!

கிடைக்காத அர்த்தம் #07

#19

யோநாகுனி நினைவுச்சின்னம் (Yonaguni Monument)

இயற்கை :

#20

நீருக்கடியில் உள்ள இந்த பாரிய அளவிலான அமைப்பானது மனிதனால் உருவாக்கம் பெற்றதா அல்லது எப்படியோ இயற்கையாகவே உருவாகிவிட்டதா என்ற விவாதம் இன்றுவரை நீடிக்கிறது.

 90 டிகிரி :

#21

துல்லியமாக 90 டிகிரி கோணங்களில் பிளாட் முனைகளை கொண்டிருக்கும் இந்த வடிவமைப்பு ஜப்பானின் யோநாகுனி கடற்கரையில் உள்ளது.

கிடைக்காத அர்த்தம் #08

#22

கற்கால வயது சுரங்கப்பாதைகள் (Stone Age Tunnels)

உருவாக்கம் :

#23

பெரிய அளவிலான பிணையம் (நெட்வொர்க்) கொண்டுள்ள இந்த நிலத்தடி சுரங்கங்கள் முழுக்க முழுக்க மனிதனால் தான் உருவாக்கம் பெற்றுள்ளன, இதன் காலம் கற்கலாம் என்பது இன்னும் வியப்பானது.

 கேள்வி :

#24

அம்மாதிரியான ஒரு காலகட்டத்தில் எப்படி அவர்களால் இது போன்ற ஒரு விரிவான அமைப்பை உருவாக்க முடிந்தது என்பது தான் இப்போது வரையிலாக தீராத ஒரே கேள்வி.

கிடைக்காத அர்த்தம் #09

#25

கோஸ்டா ரிகா ஸ்டோன் கோளங்கள் (Costa Rica's Stone Spheres)

கிரானோடியோரைட் :

#26

கோஸ்டா ரிகாவில் முழுவதும் இந்த கிரானோடியோரைட் (granodiorite) கோளங்கள் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் காணப்படுகின்றன.

தொல்பொருள் ஆராய்ச்சி :

#27

சுமார் 3 முதல் 4 சென்டிமீட்டர்கள் தொடங்கி, மூன்று மீட்டர் அளவு வரையிலாக காணப்படும் இந்த கோளங்கள் இன்று வரையிலாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஒரு மர்மமாகவே நீடிக்கிறது

கிடைக்காத அர்த்தம் #10

#28

ஒரு முடிக்கப்படாத சதுர தூபி (An Unfinished Obelisk)

பாறைப்படுக்கை :

#29

இந்த ஸ்தூபி பாறைப்படுக்கையில் இருந்து நேரடியாக செதுக்கப்பட்டுள்ளது ஆனால் கிரானைட்களில் பிளவுகள் ஏற்படவே இது கைவிடப்பட்டுள்ளது.

 கிடைக்காத அர்த்தம் #11

#30

மொகஞ்சதாரோ (Mohenjo-daro)

சிந்து :

#31

பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் உள்ள இந்த தளம் நகர திட்டமிடளில் மிக சிறந்து விளங்குகிறது. குறிப்பாக சமூக அமைப்பு மற்றும் ஒரு வடிகட்டி அமைப்பில்..!

40000 மக்கள் :

#32

முந்தைய பெரிய நகர்ப்புற குடியேற்றங்களில் ஒன்றான இந்த தளத்தில் கிட்டத்தட்ட 40000 மக்கள் வசித்து வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது

கிடைக்காத அர்த்தம் #12

#33

சாக்சேவாமன் (Saksaywaman)

அடுக்கப்பட்ட கற்கள் :

#34

பெருவில் உள்ள இந்த அடுக்கப்பட்ட கற்கள் மற்றும் கற்பாறைகள் இடையே எந்தவிதமான சுண்ணாம்பு கலவையும் பயன்படுத்தப்படாது நன்றாக ஒட்டவைக்கபட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
These Crazy Things Were Found on Earth, and Some of Them Still Can't Be Explained. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot