நாஸ்கா கோடு ஒரு விமான ஓடுதளம்..!? பூமிக்கு வருகை தந்தது யார்..?

|

பெரும்பாலான நாஸ்கா கோடுகளும் அவைகளின் சிக்கலான புள்ளிவிவரங்களும் கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும்கூட அவற்றின் உண்மையான நோக்கம் என்ன என்பது இன்றுவரையிலும் கண்டுபிடிக்கப்படாத மர்மம் தான்.

இந்த மாபெரும் புள்ளிவிவரங்கள் மேலே இருந்து பார்க்கும் போது என்ன பொருள்களை வழங்கும்..? வானத்தில் உள்ள நட்சத்திர கட்டமைப்புகளை தான் இவைகள் நிஜத்தில் பிரதிபலிக்கிறதா..? இந்த பண்டைய முயற்சி எதிர்கால தலைமுறையினருக்கு என்ன சொல்ல முயற்சிக்கிறது..? அல்லது நாஸ்கா கோடுகள் வெறுமனே ஒரு பழங்கால கலை தானா..?

சாத்தியமற்றது :

சாத்தியமற்றது :

இதுவெறும் கலை தான் என்றால் ஏன் பண்டைய மனித குலம் தரையில் இருந்துப்படியே இதை முழுமையாக்கவில்லை, (வானத்தில் இருந்தும் கவனிக்கப்படாமல் இந்த நாஸ்கா கோடுகள் சாத்தியமற்றது என்பது தெளிவு), அப்படியென்றால் இவைகள் என்ன..?

தொல்லியல் சிறப்பு :

தொல்லியல் சிறப்பு :

அதற்கான தனது பதிலை பத்து ஆண்டுகளுக்கு மேலாக நாஸ்கா கோடுகளை ஆராயும் பேராசிரியர் மாசடோ சகாய் (Masato Sakai) வழங்குகிறார், உடன் நாஸ்கா கோடுகள் ஒரு தொல்லியல் சிறப்பு என்கிறார்.

இணைப்புகள் :

இணைப்புகள் :

நாஸ்கா கோடுகளில் காணப்படும் ஆயிரக்கணக்கான நேர்க்கோடுகள் கிராமங்கள் மற்றும் அதன் மக்களுக்கு இடையேயான எளிதான தகவல்தொடர்பு இணைப்புகள் உண்டாக்கியுள்ளது என்பது உறுதிப்பட கணக்கிடப்பட்டுள்ளது.

கிமு 400 :

கிமு 400 :

பேராசிரியர் சகாய் முன்மொழியும் கோட்பாட்டின் படி, நாஸ்கா கோடுகள் கிமு 400 இருந்து சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

நிரூபிக்கப்படவில்லை :

நிரூபிக்கப்படவில்லை :

உடன் அவரது கோட்பாடு நாஸ்கா கோடுகளின் வடிவியல் மற்றும் அவைகள் ஒரு மாபெரும் 'ஓடுபாதைகள் ' போன்ற அவரின் விளக்கங்கள் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் கூட, நாஸ்கா கோடுகள் பண்டைய கால ஓடுபாதை என்ற விடயம் புதியதொரு கோணத்தை ஏற்படுத்தியுள்ளது.

விமான ஓடுபாதை :

விமான ஓடுபாதை :

வியக்கத்தக்க வண்ணம் வானில் இருந்து பார்க்கும் போது நேரான நீண்ட நாஸ்கா கோடுகள் தற்கால விமான ஓடுபாதையை அப்பட்டமாக பிரதிபலிக்கின்றன.

வாய்ப்பில்லை  :

வாய்ப்பில்லை :

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பண்டைய மனித குலத்திடம் முன்னேறிய தொழில்நுட்பம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்ற ஒரே கருதுகோளால் இது அவர்களால் சாத்தியமற்றது என்பது உண்மையாகி விடாது என்ற கருத்து தற்போது எழுந்துள்ளது.

காந்த புல முரண்பாடு :

காந்த புல முரண்பாடு :

நாஸ்கா கோடுகளின் காந்த புலம் அளவிடப்பட்டபோது ஒவ்வொரு கோடுகளும் காந்தப்புல மாற்றங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர், அதாவது அங்கு காந்தபுல முரண்பாடுகள் உள்ளன.

தனிப்பட்ட :

தனிப்பட்ட :

இதனாலேயே நாஸ்கா கோடுகள், பூமியில் தனிப்பட்ட ஒரு இடத்தில கட்டமைக்கப்பட்டுள்ளது ஆனால் அது என்ன என்பதை நம்மால் அறிந்துகொள்ளவே முடியவில்லை.

இந்தியாவில் :

இந்தியாவில் :

பண்டைய நூல்களின்படி, குறிப்பாக இந்தியாவில் தொலைதூரம் கடந்து வாகனங்கள் மூலம் தெய்வங்கள் பூமிக்கு வருகை தந்துள்ளனர் அதாவது இது பண்டைய விமானத்தை பற்றி பேசுகிறது.

கேள்விக்கான விடை :

கேள்விக்கான விடை :

அம்மாதிரியான நிகழ்வுகளுடன் நாஸ்கா கோடுகள் தொடர்பு கொண்டது தான் என்றால் பூமிக்கு வருகை தந்தது யார்..? நாஸ்கா கோடுகளின் மர்மங்களே விளங்காத நிலையில் இந்த கேள்விக்கான விடை..!? காலப்போக்கில் கண்டறியப்படலாம்.

 மேலும் படிக்க :

மேலும் படிக்க :

'ஐரோப்பிய' நடராஜர் சிலை முன்பு நரபலி..!?


4000 ஆண்டுகள் பழமையான வட்டில் கர்பிணி அன்னை தேவி உருவம், விளக்கமென்ன..?

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
The Nazca Lines: Ancient Vimana Runways. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X