எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா? புத்திசாலித்தனமான பூனை செய்த காரியம் இதுதான்.!

|

நாய்களுக்கு அடுத்தப்படியாக அதிகளவில் செல்லப்பிராணிகளாக வளர்கப்படுபவை பூனைகள் தான். அதேபோல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக கொஞ்சி விளையாடுவது இந்த பூனைகளை தான். ஆனாலும் நாய்களிடம் உணர்வுப்பூர்வமான அன்பை உணர முடியும். இந்த பூனைகளோ பெரும்பாலும் உணவுத் தேவைக்காகவே மனிதர்களை நாடுகின்றன.

ல உணவை தேடி தங்களை தாங்களே

அதன்படி நல்ல உணவை தேடி தங்களை தாங்களே கவனித்து கொள்வதில் பூனைகள் திறமை மிக்கவை என்றுதான் கூறவேண்டும். அதனாலேயே தான் பூனைகள் மிகவும் பிரபலமாகின்றன. அதேபோல் சராசரியாக பூனைகள் ஒரு நாளில் 70 சதவீதத்தை தூங்கியே கழிக்கின்றன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்கொரியாவில் உள்ள ஒரு

இந்நிலையில் தென்கொரியாவில் உள்ள ஒரு புத்திக் கூர்மையான பூனை வீட்டின் கதவை திறப்பதற்கான ரகசிய எண்களை போட்டு உள்ளே நுழைகிறது. இந்த வீடியோ தான் தற்போது இணையதளத்தில் அதிக வைரலாகி உள்ளன. ஆனாலும் அந்த வீட்டின் உரிமையாளர் போட்டுவைத்த ரகசிய எண்ணை பயன்படுத்தி பூனை திறப்பது ஆச்சரியம் தான். இதை நம்புவது கடினமாகத் தான் இருக்கிறது.

பறந்து பறந்து தேங்காய் பறிக்கும் 'ஃப்ளை-கோகோபோட்' ட்ரோன்.. உண்மையில் இது விவசாயியின் உயிர் காவலன் தான்..பலே.!பறந்து பறந்து தேங்காய் பறிக்கும் 'ஃப்ளை-கோகோபோட்' ட்ரோன்.. உண்மையில் இது விவசாயியின் உயிர் காவலன் தான்..பலே.!

வலைத்தளத்தில் வெளிவந்த

indiatimes வலைத்தளத்தில் வெளிவந்த தகவலின்படி, இந்த பூனை அந்த வீட்டு உரிமையாளர் வளர்க்கும் பூனை இல்லை
என்று கூறப்படுகிறது. அதாவது தெருவில் சுற்றித்திரியும் இந்த பூனை உணவு கிடைக்காத சமயத்தில் அந்த வீட்டுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது.

இனி கம்மி விலை KaiOS பீச்சர் போன்களிலும் வாட்ஸ்அப் அழைப்பு சேவை: ஜியோபோன் பயனர்களுக்கு குஷி தான்..இனி கம்மி விலை KaiOS பீச்சர் போன்களிலும் வாட்ஸ்அப் அழைப்பு சேவை: ஜியோபோன் பயனர்களுக்கு குஷி தான்..

உரிமையாளர் கதவை

மேலும் அந்த வீட்டின் உரிமையாளர் கதவை திறப்பதற்கு ரகசிய எண்கள் கொண்ட டோர்லாக் எனும் கருவியை பொருத்தியுள்ளார். ஆனாலும் அந்த ரகசிய எண்களை தெரிந்துகொண்டு இந்த வேலையை செய்து வருவதாக கூறப்படுகிறது.

அந்த வீட்டின் உரிமையாளர் கூறியது என்னவென்றால், தினசரி 20 முறை தன் வீட்டுக்கு அந்த பூனை வருவதாக தெரிவித்துள்ளார். அதேபோல் அந்த பூனை தனது காலால் டோர்லாக் கருவியில் உள்ள ரகசிய எண்களை அழுத்துகிறது, பின்பு கதவு திறந்ததும் உள்ளே சென்று உணவை சாப்பிட்டு விட்டு செல்வது வீடியோவில் பதிவாகியுள்ளது.

வெளியிடப்பட்ட அந்த

மேலும் இப்போது வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், வீட்டின் உரிமையாளர் அந்த பூனையை விரட்டியடித்த போதிலும், மீண்டும் வருகிறது. பின்பு ரகசிய எண்களை பூனை அழுத்துவதை தடுப்பதற்காக, டோர்லாக் கருவியின் மீது லேமினேஷன் அட்டையை பொருத்தினார் உரிமையாளர். ஆனாலும் லேமினேஷனை பூனை நகங்களால் கிழித்துவிட்டதாக கூறுகிறார்உரிமையாளர்.

உலகம் முழுக்க ஒரே நேரத்தில் திடீரென முடங்கிய ரெடிட், அமேசான் இணையதளங்கள்: காரணம் என்ன?உலகம் முழுக்க ஒரே நேரத்தில் திடீரென முடங்கிய ரெடிட், அமேசான் இணையதளங்கள்: காரணம் என்ன?

னையின் சேட்டையைக் கண்டு

இருந்தபோதிலும் பூனையின் சேட்டையைக் கண்டு கோபம் வந்தாலும் தற்போது அதன் புத்திசாலித்தனத்தை பார்த்து அதன் மீது அன்பு செலுத்தினார் அந்த வீட்டின் உரிமையாளர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
The cat enters the stranger's house by Punching on the door password: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X