அலற வைக்கும் இந்திய தயாரிப்பு நிஷாந்த் ஆளில்லா வானூர்தி.!!

By Meganathan
|

உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் இந்திய ராணுவத்தின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றது. வெளிநாடுகளில் இருந்து ஆயுத இருக்குமதி செய்வது ஒரு பக்கம் இருந்தாலும், நமக்கு தேவையானவற்றை நாமே தயாரித்து கொள்வோம் என்ற முயற்சியில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு முடிவு செய்துள்ளதாக தெரிகின்றது.

<strong>நிலவுக்கு திரும்ப போகாதது ஏன்..? நாசா மறைக்கும் 'டார்க் சீக்ரெட்'..?!</strong>நிலவுக்கு திரும்ப போகாதது ஏன்..? நாசா மறைக்கும் 'டார்க் சீக்ரெட்'..?!

அதன் படி இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு மூலம் இந்திய ராணுவத்திற்கு பல்வேறு ஆயுதங்கள், மற்றும் ராணுவ உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு தயாரித்த விசேஷ ஆளில்லா வானூர்தி சார்ந்த விரிவான தகவல்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

பயன்பாடு

பயன்பாடு

இந்திய ராணுவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்த வானூர்திகள் ஆளில்லாமல் இயங்கும் திறன் கொண்டுள்ளது.

கட்டுப்பாடு

கட்டுப்பாடு

ஆளில்லா வானூர்திகள் தூரத்தில் இருந்து கட்டுப்படுத்த கூடியதாகவும், நீண்ட நேரம் பறக்கும் திறன் மற்றும் மறுபயன்பாட்டிற்கு உகந்ததாகவும் இருக்கின்றன.

தயாரிப்பு

தயாரிப்பு

அந்த வகையில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு தயாரித்த நிஷாந்த் ஆளில்லாத தாணியங்கி வானூர்தி (யுஏவி) குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

திறன்

திறன்

நிஷாந்த் ஆளில்லாத வானூர்தி பல்வேறு வகையில் திறன் பட செயல்படும் அளவு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியும்.

 உளவு

உளவு

இந்த வானூர்தியானது எதிரி பிரதேசத்தில் புலனாய்வு தகவல்களை சேகரிப்பது, பயிற்சி, உளவு, ஆர்டிலரி ஃபையர் கரெக்ஷன், டேமேஜ் அசெஸ்மென்ட் என பல்வேறு பணிகளை முடிக்கும் திறன் கொண்டிருக்கின்றது.

ரகம்

ரகம்

கேடாபல்ட் லான்ச்டு அன்டு ரிக்கவர்டு பை பாராஷூட் (Catapult-launched and recovered by using parachute) திறன் கொண்ட உலகின் சில வானூர்திகளில் நிஷாந்த் யுஏவி இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருள்

பொருள்

அதாவது சிறிய ஓடுதளத்தில் உயரே பறக்கவும், பாராஷூட் மூலம் மீட்க கூடிய திறன் கொண்டதாகும். இதனை விளக்கும் வீடியோ அடுத்த ஸ்லைடரில்.

வீடியோ

நிஷாந்த் ஆளில்லா வானூர்தி வீடியோ.

தயாரிப்பு

தயாரிப்பு

நிஷாந்த் ஆர்பிவி விமானம் 1995 ஆம் ஆண்டு முதன் முதலாக சோதனை செய்யப்பட்டது. அதன் பின் ஜூலை 1999 இல் நிஷாந்த் யுஏவி முறையானது இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டது.

வெற்றி

வெற்றி

2008 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி நிஷாந்த் யுஏவி வெற்றிகிரகமாக சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

நிஷாந்த் யுஏவி வழக்கமான விமானம் ஏற்பாடுகளை கொண்டு குறைந்த உயர நடவடிக்கைகளை திறன் பட மேற்கொள்ள ஏதுவாக பரவலாக ஏற்றுகொள்ளப்பட்ட யுஏவி வடிவமைப்பு கொண்டுள்ளது.

நேக்கிள்

நேக்கிள்

நிஷாந்த் யுஏவியின் நேக்கிள் பகுதியானது ஏவியானிக்ஸ், பேலோடு, மற்றும் ஃபூயல் ஸ்டோர் போன்றவைகளை கொண்டிருக்கின்றது.

இறக்கை

இறக்கை

நிஷாந்த் யுஏவியின் இறக்கைகள் நீளமாகவும், சரியாக ஃபூயல்சேஜ் மேல் பகுதியில் அமைந்துள்ளது.

அமைப்பு

அமைப்பு

இதன் பின் பகுதியில் இரட்டை -ஏற்ற அமைப்பு பின்புற ஒற்றை கிடைமட்ட விமானத்தில் இணைக்கப்பட்டுள்ளதோடு வெளிபுறத்தில் செங்குத்தான வால் துடுப்புகளும் இருக்கின்றன.

அளவு

அளவு

நிஷாந்த் யுஏவி 4.63 மீட்டர் நீளமும், 6.57 மீட்டர் இறக்கைகளும், சுமார் 45 கிலோ பேலோடு சுமக்கும் திறன் கொண்டுள்ளது.

தாக்குதல்

தாக்குதல்

நிஷாந்த் யுஏவியில் டார்கெட் டிராக்கிங் மற்றும் லோகலைசேஷன், தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளதோடு நிலப்பரப்பு இயக்கம் மற்றும் 4.30 மணி நேர தாங்கும் ஆற்றல் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிஸ்டம்

சிஸ்டம்

சுமார் 380 கிலோ நிஷாந்த் யுஏவி ரயில் லான்ச்சிங் மற்றும் ஹைட்ரோ நூமாடிக் லான்ச்சர் தேவைப்படுவதோடு இதனை பாராஷூட் மூலம் மீட்க முடியும்.

லான்ச்சர்

லான்ச்சர்

மொபைல் பைட்ரோ நூமாடிக் லான்ச்சர் சிஸ்டம் 14,000 கிலோ எடை கொண்ட டாட்ரா டிரக் மீது பொருத்தப்பட்டுள்ளது. இந்த லான்ச்சர் கொண்டு சுமார் 1000 முறை யுஏவிக்களை ஏவ முடியும்.

மொத்த அமைப்பு

மொத்த அமைப்பு

கிரவுன்டு கண்ட்ரோல் சிஸ்டம், ஆன்டெனா வெயிக்கல் / கிரவுன்டு டேட்டா டெர்மினல், ஏவியோனிக்ஸ் பிரப்பரேஷன் வெயிக்கல், மெக்கானிக்கல் மெயின்டனன்ஸ் வெயிக்கல், யுஏவி டிரான்ஸ்போர்டேஷன் வெயிக்கல்ஸ பவர் சப்ளை வெயிக்கல் போன்றவை நிஷாந்த் யுஏவியை முழுமை செய்கின்றன.

என்ஜின்

என்ஜின்

நிஷாந்த் யுஏவி 1 x RE-2-21-P or RE-4-37-P என்ஜின் கொண்டுள்ளது. இதை கொண்டு புஷர் அமைப்பு கொண்ட இரண்டு பிளேடு ப்ராப்பல்லர் விமானத்தை இயக்க முடியும். நிஷாந்த் மூலம் 275 கிலோ எடை கொண்டு தரையில் இருந்து புறப்பட முடியும்.

வேகம்

வேகம்

100 கிவாட் என்ஜின் மூலம் நிஷாந்த யுஏவி நொடிக்கு 45 மீட்டர் என்ற வேலாசிட்டி கொண்டு 0.3 நொடி இடைவெளி கொண்டுள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 185 ஆகும், க்ரூஸ் வேகம் மணிக்கு 125 முதல் 150 ஆகும். சுமார் 3600 அடி உயரத்தில் இதனால் 160 கிமீட்டர் வேகத்தில் செல்ல முடியும்.

விரைவில்

விரைவில்

இந்திய தயாரிப்பில் ஒன்று மட்டும் தான் இந்த தொகுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதர அதி பயங்கர இந்திய தயாரிப்புகள் சார்ந்த தொகுப்பு விரைவில் பதிவு செய்யப்படும். நிஷாந்த் யுஏவி சோதனை செய்யப்பட்ட வீடியோவினை அடுத்த ஸ்லைடரில் பார்க்க தவறாதீர்கள்.

வீடியோ

நிஷாந்த் யுஏவி சோதனை செய்யப்பட்ட போது படமாக்கப்பட்ட வீடியோ.

மேலும் படிக்க

மேலும் படிக்க

இரண்டாம் உலகப்போர் : வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட கொலைக்கருவிகள்..!

அசத்தும் இஸ்ரோ : ஒரே கல்லுல 21 மாங்காய்...!

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Terrific Features of Indian made Nishant Unmanned Aerial Vehicle Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X