அமெரிக்கா எச்சரிக்கை, அலறும் ரஷ்யா, சீனா.!!

By Meganathan
|

புதிய பஞ்சாயத்திற்கு அமெரிக்கா தயாராகி விட்டது. சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் ஆயுத தயாரிப்புகளில் கவனம் செலுத்த ஆயத்தமாகி இருக்கின்றது. அமெரிக்காவை பொருத்த வரை இது சகஜமான ஒன்று தான் என்றாலும், இம்முறை அறிவியல் சார்ந்த அதி நவீன தொழில்நுட்ப ஆயுதங்களை தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னெச்சரிக்கை

முன்னெச்சரிக்கை

ரஷ்யா மற்றும் சீனாவை வீழ்த்த தயாராகும் நோக்கில், அமெரிக்கா சார்பில் புதிய அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்களின் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பென்டகன்

பென்டகன்

புதிய வகை ஆயுதங்கள் தயாரிப்பது குறித்த பணிகளில் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ராணுவத் தலைமையகமான பென்டகன் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவின் அதி நவீன கருவிகளை பயன்படுத்துவது, ரோபோட் சார்ந்த ஆயுதங்களை தயாரிக்கும் ரோபோட், மேம்படுத்தப்பட்ட மனித ஆயுத குழுக்களை பயன்படுத்துவது குறித்து பென்டகன் அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டிருக்கின்றனர்.

சரியான தேர்வு

சரியான தேர்வு

இவை சயின்ஸ் பிக்ஷன் போன்று தோன்றினாலும் ரஷ்ய மற்றும் சீன ராணுவங்களை எதிர்கொள்ள சூப்பர் ஹை டெக் ஆயுதங்கள் தான் சிறந்ததாக இருக்கும் என்றும் பென்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வு

ஆய்வு

சில மாதங்களுக்கு முன் ராணுவ ரகசியங்களாக இருந்த இத்தகவல்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் ராணுவம், மற்றும் வாண்படை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அணு ஆயுதம்

அணு ஆயுதம்

இவ்வாறு ரஷ்யா மற்றும் சீனர்களால் யூகிக்க முடியாத அளவு போர் பிரிவினை சக்தி வாய்ந்த ஒன்றாக மாற்றுவோம் என பாதுகாப்பு படையின் துணை செயலாளர் ராபர்ட் வொர்க் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்

பட்ஜெட்

பென்டகனின் 2017 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் 300 கோடி அமெரிக்க டாலர்கள் அதிநவீன ஆயுதங்களின் தயாரிப்பிற்கும், கடலுக்கு அடியில் இருக்கும் அமைப்புகளுக்கு 300 கோடி அமெரிக்க டாலர்களும், ஆளில்லா டிரோன் மற்றும் மனித இயந்திர அமைப்புகளுக்கு 300 கோடி அமெரிக்க டாலர்களும், 170 கோடி அமெரிக்க டாலர்களை சைபர் மற்றும் மின்னணு அமைப்புகளுக்கும், போர் விளையாட்டு மற்றும் சோதனைகளுக்கு சுமார் 50 கோடி அமெரிக்க டாலர்களையும் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

ரஷ்யா மற்றும் சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு தாமதமாக பதில் வழங்குவதாக ஒபாமாவின் நிர்வாகம் மீது குற்றச்சாட்டு இருந்து வந்தது.

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

ஆனால் அமெரிக்காவின் தலைசிறந்த தந்திரமே அதிநவீன தொழில்நுட்பம் தான் என்றும் கூறப்பட்டுள்ளது.

தீவிரம்

தீவிரம்

ப்ளூ-ரிப்பன் டிஃபென்ஸ் சயின்ஸ் போர்டு அறிவுறத்தலின் பேரில் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது கடந்த ஆண்டு முதல் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்து

கருத்து

'எழுச்சி பெற்று வரும் சக்தி : ரஷ்யா' 'ஈர்க்கக்கூடிய அதிநவீன தொழில்நுட்ப திறன் சீனா கொண்டுள்ளது' என ராபர்ட் வொர்க் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கவலை

கவலை

பிப்ரவரி 2 ஆம் தேதி நிதி அறிவிப்பில் டிஃபென்ஸ் செக்ரட்டரி ஆஷ்டன் கார்டர் 'இன்னும் 25 ஆண்டுகளுக்கு எவ்வித கவலைகளும் எங்களுக்கு கிடையாது' என தெரிவித்துள்ளார்.

சக்தி

சக்தி

2012 முதல் ஸ்மார்ட் ஆயுதங்கள், மைக்ரோ-கேமரா, சென்சார், மிசைல் டிஃபென்ஸ் அமைப்புகள், ஹைப்பர்வெலோசிட்டி ப்ரோஜக்டைல் மற்றும் உண்மையில் அதிவேகமான ஸ்வார்மிங் டிரோன் போன்றவற்றை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கார்டர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

அம்பலம் : 45 வருடங்களுக்கு முன்பு ரஷ்யா செய்த 'சதி'..!

ரஷ்யா : யாரையும் கொல்லும், எதையும் அழிக்கும்..!

ரஷ்யாவின் ஆயுத பலம், 'கதி கலங்கும்' அமெரிக்கா..!

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Technologically Advanced America challenges Russia and China Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X