குட்டையை குழப்பிய கூகுள் : சிதறமால் சிக்கிய வினோதங்கள்.!!

By Gizbot Bureau
|

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், ஆர்வம் இருந்தால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். ஆர்வம் இல்லாமல் எதை செய்தாலும் தோல்வி நிச்சயம். ஒட்டு மொத்த உலகமும் தெரியாதவைகளை தேடித்தேடி தெரிந்துகொள்ள, தினந்தோரும் இயங்கி கொண்டிருக்கின்றது.

வேகமாக இயங்கும் உலகமானது தெரியாதவைகளோடு, சேர்த்து 'பதில் இல்லாத' புதிர் நிறைந்தவைகளை தான் அதிக முக்கியத்தும் கொடுத்து தேடி கொண்டிருக்கின்றது. இதை நிரூபிக்கும் சிறந்த உதாரணம் தான் இந்த தொகுப்பு..!

கூகுள்

கூகுள்

உலகின் மிகப்பெரிய தேடுபொறி நிறுவனமான கூகுள் மக்களுக்கு தெரியாத பல்வேறு திட்டங்களில் ரகசியமாக பணியாற்றி வருகின்றது.

ஆய்வாளர்கள்

ஆய்வாளர்கள்

உலகின் தலைசிறந்த ஆய்வாளர் குழுக்களை கொண்டு மக்களுக்கு தெரியாத பலவற்றை அம்பலப்படுத்துவதில் கூகுள் தனி பங்களிப்பை அளித்து வருகின்றது என்றும் கூறலாம்.

கூகுள் எர்த்

கூகுள் எர்த்

அந்த வகையில் புவி குறித்த தகவல்களை கணினியில் வழங்கும் கூகுள் சேவை தான் கூகுள் எர்த் என அழைக்கப்படுகின்றது.

கீ ஹோல்

கீ ஹோல்

கீ ஹோல் என்ற நிறுவனம் உருவாக்கிய புவியின் வரைபடத்தை கூகுள் நிறுவனம் ஒட்டு மொத்தமாக வாங்கி அதனினை கூகுள் எர்த் சேவையாக மக்களுக்கு வழங்கி வருகின்றது.

புகைப்படம்

புகைப்படம்

கீ ஹோல் நிறுவனமானது புவியின் செயற்கைக் கோள் புகைப்படம், வானில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம், முப்பரிமாணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சூப்பர் இம்போசிஷன் மூலம் வரைபடமாக்குகின்றது. இதுவே நமது கணினியில் கூகுள் எர்த் சேவையாக தெரிகின்றது.

கூகுள் எர்த்

கூகுள் எர்த்

இவ்வாறு வான்வெளியில் இருந்து பூமியில் எடுக்கப்பட்ட எண்ணில் அடங்கா புகைப்படங்களில் இருந்து பல்வேறு விசித்திரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் சில விசித்திரங்கள் சார்ந்த தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.

விசித்திர சக்கரம்

விசித்திர சக்கரம்

சுமார் 8500 ஆண்டுகள் பழைமையான வட்ட வடிவ உருவங்கள் தான் விசித்திர சக்கரம் என அழைக்கப்படுகின்றது. இவை நாஸ்கா லைன்களை விட பழைமையானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வின்டர் சால்ஸ்டைஸ்

வின்டர் சால்ஸ்டைஸ்

ஜார்டன் பகுதியில் அமைந்திருக்கும் இந்த விசித்திர சக்கரங்கள், வின்டர் சால்ஸ்டைஸ் நாளின் சூரிய உதயத்தை குறிப்பதாக இருக்கின்றது.

வின்டர் சால்ஸ்டைஸ்

வின்டர் சால்ஸ்டைஸ்

வின்டர் சால்ஸ்டைஸ் என்பது, சிறிய நாள் எனலாம், அதாவது குறைந்த நேரம் பகல் மற்றும் நீண்ட நேர இரவு. உலகின் வடக்கு பகுதிகளில் டிசம்பர் மாதமும், தெற்கு பகுதிகளில் ஜூன் மாதமும் இந்நிகழ்வு நடைபெறும்.

பொய்த்தீவு

பொய்த்தீவு

2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆய்வாளர்கள் அதற்கு முன் கண்டுபிடிக்கப்படாத தீவு ஒன்றை கண்டுபிடித்தனர். இந்த தீவானது நியூயார்க் நகரின் மேன்ஹாட்டன் பகுதி அளவுக்கு பெரியதாக இருப்பதாக நம்பப்பட்டது.

குழப்பம்

குழப்பம்

பொய்த்தீவானது உண்மையில் இல்லாத, ஆனால் இருப்பதாக நிலப்படங்களில் காட்டப்பட்ட தீவு என்றும் நம்பப்படுகின்றது. நியூ கலெடோனியா பகுதியின் வடமேற்கு திசையில் பொய்த்தீவு காணப்பட்டது.

பொய்

பொய்

கூகுள் எர்த் படங்களில் நிலப்பகுதி தெளிவாக தெரிந்ததால் ஆய்வாளர்கள் அங்கு செல்ல முயற்சித்தனர், அவ்வாறு அங்கு போகும் போது அங்கு நீர் மட்டும் தான் இருந்தது.

இரத்த ஏரி

இரத்த ஏரி

ஈராக் பகுதியில் தான் புகைப்படத்தில் தெரியும் இரத்த ஏரி கண்டறியப்பட்டது. இப்பகுதியில் சிவப்பு நிற நீர் இருப்பது குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் வழங்கப்படவில்லை.

தீவுக்குள் ஏரி.....

தீவுக்குள் ஏரி.....

உலகின் மிகப்பெரிய தீவுக்குள் ஒரு ஏரி, அதற்குள் ஓரு தீவு, இதுபோல் மொத்தம் நான்கு தீவுகளும் அதற்குள் நான்கு ஏரிகளும் கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டது.

பெயர்

பெயர்

பெயர் இல்லாத தீவுகளின் நடுவில் அமைந்திருக்கும் ஏரியானது, வெளிப்புறத்தில் முதலில் அமைந்திருப்பதை விட அளவில் மிகவும் பெரியதாகும். அப்படியானால் முதலில் இருக்கும் தீவிற்குள் அமைந்திருக்கும் ஏரி மிகமிக பெரிதாக இருக்கும்.

ஏரி

ஏரி

கனடாவின் வடக்கு பகுதியில் அமைந்திருக்கும் விக்டோரியா தீவுகளின் தென் கடலோர பகுதியில் இருந்து சுமார் 75 மைல் தூரத்தில் இந்த தீவுக்குள் ஏரி.. அமைந்திருக்கின்றது.

எலும்பு முற்றம்

எலும்பு முற்றம்

டேவிஸ் மோந்தன் விமானப்படை தளமானது அமெரிக்க விமானங்கள் விழுந்து நொருங்கும் பகுதியாக அறியப்படுகின்றது. சுமார் 2600 ஏக்கர் பரப்பளவில் ஸ்டீல் கல்லறை என்றும் இது அழைக்கப்படுகின்றது.

புகைப்படம்

புகைப்படம்

ஆனால் கூகுள் எர்த் புகைப்படங்களில் இதனுள் என்ன இருக்கின்றது என்பதை விளக்கும் அதிக துல்லியமான புகைப்படங்கள் கிடைத்திருக்கின்றது. இரண்டாம் உலக போரில் இருந்து இதுவரை பயன்படுத்தப்பட்ட அனைத்து ரக ராணுவ விமானங்களும் இங்கு இருக்கின்றது.

பெரிய வார்த்தை

பெரிய வார்த்தை

அபு தாபியின் ஆளும் குடும்பத்தை சேர்ந்த பணக்காரரான ஹமாத் பின் ஹம்டன் அல் நஹ்யன் தனது பெயரினை தான் வைத்திருக்கும் ஃபுடைஸி எனும் தீவின் மணற்பகுதியில் செதுக்கியுள்ளார்.

அளவு

அளவு

இவரது பெயர் ஹமாத் என ஆங்கிலத்தில் சுமார் அரை மைல் உயரத்திலும், இரண்டு மைல் நீளத்திற்கு செதுக்கப்பட்டுள்ளது. வானத்தில் இருந்து பார்க்கும் போது உலகில் தெரியும் மிகப்பெரிய பெயர் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அழியாது

அழியாது

பொதுவாக மணலில் செதுக்கும் வார்த்தைகள் அழிந்து போகும், ஆனால் இந்த வார்த்தைகள் மிகவும் பெரியதாக இருப்பதால் கடல் அலைகள் வந்தாலும் அவைகளை இந்த வார்த்தைகள் ஈர்த்துக்கொள்ளும்.

யானை கூட்டம்

யானை கூட்டம்

செயற்கைகோள் படம்பிடித்த இந்த புகைப்படங்கள் ஆப்ரிக்கா யானைகளை மிகவும் தெலிவாக பார்க்க முடியும்.

கோபி பாலைவனம்

கோபி பாலைவனம்

கூகுள் எர்த் புகைப்படங்களில் புதிதாக கிடைத்த புகைப்படங்களில் சீனாவின் கோபி பாவைனத்தில் மர்மமான அமைப்புகளும், கோடுகளும் தெரிகின்றன.

ராணுவ தளம்

ராணுவ தளம்

இப்பகுதியானது ரகசிய ராணுவ தளமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தரப்பில் நம்பப்படுகின்றது.

சோதனை

சோதனை

இப்பகுதியில் ஆயுத சோதனைகள், உளவு செயற்கைகோள் அளவுத்திருத்தம் மற்றும் ரேடார் சோதனை போன்றவை நடைபெறுவதாகவும் கூறப்படுகின்றது.

வானிலை

வானிலை

இந்த மர்ம கோடுகளானது யாகி ஆன்டெனா அர்ரே போன்று காட்சியளிப்பதாகவும் கூறப்படுகின்றது

ஆன்டெனா அர்ரே

ஆன்டெனா அர்ரே

ஆன்டெனா அர்ரே என்பது வானிலையை டிராக் செய்தல் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள பயன்படுத்துவது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாஸ்கா கோடுகள்

நாஸ்கா கோடுகள்

முன்பு குறிப்பிடப்பட்டிருந்த நாஸ்கா கோடுகள் குறித்த விரிவான தகவல்களை இங்கு க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

 மேலும் படிக்க :

மேலும் படிக்க :

பூமி அருகே சுற்றித்திரியும் 230 அடி நீளமுள்ள மர்ம விண்கலம்..!

பிளாக்ஹோல் விளைவுகள் : உயிரினங்கள் 'கிழிந்து அல்லது 'எரிந்து' சாகும்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Strangest Sights on Google Earth Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X