Subscribe to Gizbot

"நமக்கு 100 ஆண்டுகள் தான் கெடு" என்று ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதின் பின்னணி.?!

Written By:

ஸ்டீபன் ஹாக்கிங் - வெறும் கோட்பாடுகளையும், கருத்துப்படிவங்களையும், கணிப்புகளையும் மட்டும் உருவாக்கியவர் அல்ல, அறிவியலையும், அண்டத்தையும் சற்று அதீதமாய் புரிந்து கொண்டவரும் ஆவார்.

1986-ல் அமெரிக்காவில் உள்ள அனென்பெர்க் அறக்கட்டளை, இயற்பியல் கணிதத்தை எளிய நடையில் புதிய கோணத்தில் வடிவமைப்பவர்களுக்கு 6 மில்லியன் டாலர் பரிசு என அறிவித்தது. இந்தச் சவாலை ஏற்ற இயற்பியல் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங், அரை மணி நேரத்திற்கு ஒரு காட்சி விளக்கம் என்ற விகிதத்தில் 26 மணி நேரம் ஓடக்கூடிய 'காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்' (A Brief History of Time) என்ற பாடத் திட்டத்தை உருவாக்கினார், 6 மில்லியன் டாலர் பரிசையும் பெற்றார்.

அடிப்படை இயற்பியல் தொடங்கி பிரபஞ்ச புதிர்களான ஏலியன், பிளாக் ஹோல் வரையிலாக அனைத்தையும் 'வேறுகோணத்தில்' ஆராய்ந்த 'மேதாவியான' ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு விடயத்தை கூறுனார் என்றால், அதனை நம்பினார் என்றால் அதில் கணிப்புகளை விடவும் 'கச்சிதங்கள்' அதிகமாக இருக்கும் என்பது தான் நிதர்சனம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
100 ஆண்டுகள் :

#1

சமீபத்தில் ஸ்டீபன் ஹாக்கிங், மனித இனத்திற்கு 100 ஆண்டுகள் தான் 'கெடு' என்று கோரியுள்ளார். அதாவது இன்னும் 100 ஆண்டுகளில் மனித இனமானது தன்னை தானே அழித்துக்கொள்ள இருக்கிறது என்று கூறியுள்ளார்.

ஆபத்தான நிலை :

#2

மனித இனம் தன்னை தானே அழிக்கும் ஆபத்தான நிலை இருப்பதால், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பகுதிகளில் வேகமாக முன்னேற வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மரபு-பொறியமைக்கப்பட்ட வைரஸ்கள் :

#3

பிபிசிக்கு பேட்டியளித்த ஸ்டீபன் மனித இனத்தின் முடிவானது அணு ஆயுத போர், உலக வெப்பமயமாதல், மற்றும் மரபு-பொறியமைக்கப்பட்ட வைரஸ்கள் போன்ற சொந்த படைப்புகள் மூலம் ஏற்படும் அழிவுகளை முன்வைத்துள்ளார்.

முதல்முறை அல்ல :

#4

சுயமாக ஏற்படுத்திக்கொண்ட அல்லது சுயமாக தயாரிக்கப்பட்டவைகள் மூலமாக, அழிவை நாம் எதிர்கொள்ள போகிறோம் என்று ஸ்டீபன் எச்சரிக்கை விடுப்பது முதல்முறை அல்ல.

செயற்கை நுண்ணறிவு :

#5

இதற்கு முன்பு செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஆர்டிபிஷியல் இன்டெல்லிஜென்ஸ் (Artificial Intelligence - AI) மூலமாக உலகம் தன் முடிவை சந்திக்க இருக்கிறது என்று ஸ்டீபன் எச்சரிதிருந்தார்.

சமாளிக்க முடியும் :

#6

ஸ்டீபன் ஹாக்கிங் "தான் ஒரு நன்நம்பிக்கையாளர் என்றும், மனித இனம் சந்திக்கும் அழிவு சார்ந்த பிரச்சினைகளை நம்மால் சமாளிக்க முடியும் என்று தான் நம்புவதாகவும், ஆனால் அது மோசமான ஒரு வழியாக இருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

மோசமான ஒரு வழி :

#7

அதாவது "மனித இனம் ஆனது அழிவில் இருந்து தப்பித்துக் கொள்ள வேறு கிரகங்களுக்கு, எடுத்துக்காட்டுக்கு செவ்வாய் கிரகம் போன்ற கிரகங்களுக்கு குடியேற்றம் செய்ய வேண்டும்" என்கிறார் ஸ்டீபன்.

ஆயிரம் முதல் பத்தாயிரம் ஆண்டு :

#8

இது அடுத்த நூற்றாண்டுக்குள் சாத்தியமில்லாத ஒன்றாக தோன்றினாலும் கூட அடுத்த ஆயிரம் முதல் பத்தாயிரம் ஆண்டுகளில் பூமியின் முடிவு நிச்சயமான ஒன்று என்பதை நாம் இங்கே புரிந்து செயல்பட வேண்டும் என்றும் ஸ்டீபன் கூறுகிறார்.

அடுத்த 100 ஆண்டுகள் :

#9

குறிப்பாக வர இருக்கும் அடுத்த 100 ஆண்டுகள் மிகவும் ஆபத்தானவைகள், அதற்குள் நாம் மிகவும் மேம்பட்டு விட வேண்டும் அதே சமயம் பூமி கிரகத்தை மட்டுமே புகலிடமாக வைத்திருக்க கூடாது என்றும் ஸ்டீபன் தெரிவித்துள்ளார்.

 வாய்ப்பு :

#10

ஒரு குறிப்பிட்ட ஆண்டில் பூமிக்கு நேரவிருக்கும் ஒரு பேரழிவிற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்தாலும் கூட அடுத்த ஆயிரம் அல்லது பத்து ஆயிரம் ஆண்டுகளில் பூமியின் முடிவு உறுதியாக இருப்பதால் நாம் மேம்பட்டே ஆக வேண்டிய நிலை ஏற்படுகிறது.

கவனம் :

#11

"எப்படியும் அடுத்த 100 ஆண்டுகளில் நீடித்திருக்கும் காலனி விண்வெளிகளில் (self-sustaining colonies) உருவாக்கப் போவதில்லை, அதனால் இந்த குறிப்பிட்ட 100 ஆண்டுகளில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" என்கிறார் ஸ்டீபன்.

மகத்தான காலம் :

#12

மேலும், உயிரோடு இருக்ககூடிய மகத்தான காலம் விஞ்ஞானிகளிடமும், தன்னைபோன்ற இயற்பியலாளர்களிடமும் உள்ளது, இந்த காலகட்டத்தில் எண்ணற்ற புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட இருக்கின்றன என்றும் ஸ்டீபன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Stephen Hawking Warns Humanity Could Destroy Itself In The Next 100 Years. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot