Subscribe to Gizbot

அமெரிக்காவை 'மீண்டும் மீண்டும்' கலங்கடிக்கும் வடகொரியா..!

Written By:

தனக்கு இருக்கும் மாபெரும் சக்தியை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் தோன்றியதையெல்லாம் செய்வதை சர்வதிகாரம் என்பார்கள். அப்படியானதொரு நிலைப்பாட்டுக்குள் இருக்கும் நாடு தான் வடகொரியா.

சமீபத்தில் வடகொரியாவில் நிகழ்த்தப்பட்டு, உலக நாடுகளின் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கும் - ஹைட்ரஜன் வெடி குண்டு பரிசோதனை, குறைந்த தூர ஏவுகணை மற்றும் ஆர்டிலெரி ஷெல் போன்றவைகளை கடலில் செலுத்தி சோதனை, மர்மமான 'லாங் ரேன்ஜ் மிசைல் ப்ராஜக்ட் (Long Range Missile Project) செயற்கைகோள் ஏவியது, கண்டம் விட்டு கண்டம் தாண்டி அழிக்கும் ஏவுகணைகளில் வளர்ச்சி, எல்லாவற்றிக்கும் மேலாக "அமெரிக்காவை காலி செய்ய ஒரு எச்-பாம் போதும்.!" - என்று மிரட்டல் விடுத்தது என் வடகொரியாவின் 'ஆட்டம்' நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது..!

தற்போது மீண்டும் அமெரிக்கவை குறி வைத்து அச்சுறுத்தலான காரியம் ஒன்றை வடகொரியா செய்துள்ளதற்கான ஆதராங்கள் அம்பலமாகியுள்ளன..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
தயார் :

தயார் :

முன்னெப்போதும் இல்லாத அளவிலான ஏவுகணை லான்ச் ஒன்றை நிகழ்த்துவதற்கு வடகொரியா தயாராகி வருகிறது என்பதை அமெரிக்க ஐக்கிய நுண்ணறிவு செயற்கைக்கோள்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

ஹிட் போர்ஷன்ஸ் :

ஹிட் போர்ஷன்ஸ் :

உடன் வடகொரியாவின் மொபைல் பல்லிஸ்டிக் ஏவுகணையின் ஹிட் போர்ஷன்ஸ் (Hit Portions) அதாவது இலக்காக கொண்ட பகுதிகள் ஆனது அமெரிக்க பிராந்தியம் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பீடு :

மதிப்பீடு :

அமெரிக்க அதிகாரிகளின் கருத்துப்படி சமீபத்திய மதிப்பீடுகளின் கீழ் அநேகமாக முசுடன் ஏவுகணை (Musudan missile) மூலம் அலாஸ்காவின் அலூசியன் தீவுப்பகுதிகள் ஆன குவாம் அல்லது செம்யா தீவுகள் தாக்கப்படலாம்.

மொபைல் ஏவுகணைகள் :

மொபைல் ஏவுகணைகள் :

அல்லது அமெரிக்காவின் பசிபிக் வடமேற்கு பகுதியை அடையக்கூடிய வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் மொபைல் ஏவுகணைகள் கேஎன்-08 அல்லது கேஎன்-14 மிசைல்கள் ஏவப்படலாம் என்றும் பதற்றம் நிலவுகிறது.

முதல் முறை :

முதல் முறை :

கேஎன்-14 ஆனது, கேஎன் -08 ஏவுகணையை விடவும் அதிக துல்லியமான ஏவுகணையாக கருதப்படுகிறது மற்றும் கேஎன்-14 ஆனது 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு வடகொரிய இராணுவ அணிவகுப்பில் தான் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது.

போலித்தனம் :

போலித்தனம் :

அமெரிக்க உளவு செயற்கைக்கோள்கள் இடைவிடாமல் வடகொரியாவின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருக்கிறது என்பது வடகொரியாவிற்கு நன்றாக தெரியும் இருப்பினும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதின் மூலம் அமெரிக்காவை தேவையில்லாத ஒரு நடவடிக்கை ஒன்றை எடுக்க வைக்கும் முயற்சியாக கூட இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

எதிர் நடவடிக்கை :

எதிர் நடவடிக்கை :

ஆகையால், அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது வரையிலாக எந்த விதமான எதிர் நடவடிக்கைகளிலும் ஈடுபாடாமல், எந்த விதமான முடிவையும் எடுக்காமல் இருக்கிறது.

3 ஏவுகணைகளில் ஒன்று :

3 ஏவுகணைகளில் ஒன்று :

மீறி நிஜமாகவே வடகொரியா அமெரிக்காவின் பிராந்தியங்களை தாக்கினால் அதுதான் வடகொரியாவின் முதல் கண்டம் விட்டு தாண்டி தாக்கும் ஏவுகணையாக இருக்கும் என்பதும் அதன் 3 ஏவுகணைகளில் ஒன்று முதல் முறையாக தாக்குதலுக்கு அனுப்பப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ராணுவம் :

அமெரிக்க ராணுவம் :

கடந்த மார்ச் 15-ஆம் தேதியில் இருந்து அமெரிக்க ராணுவம் ஆனது, வடகொரியாவின் அணு ஆயுத மற்றும் பல்லிஸ்டிக் ஏவுகணைகள் பற்றிய தகவல்களை மிகவும் உன்னிப்பாக சேகரித்து வருகிறது.

திறன் :

திறன் :

மறுபக்கம் வடகொரிய ஏவுகணைகள் எப்படி வேலை செய்யும் அதன் வழிகாட்டல் அமைப்புகள் எந்த அளவிற்கு திறன் கொண்டவைகள் என்பது பற்றிய போதிய தகவல்கள் இல்லை.

மிகவும் கடினம் :

மிகவும் கடினம் :

அதிலும் மொபைல் லான்ச்சர்கள் கொண்டு அவசரமாக அல்லது உடனடியாக ஏவுகணைகள் ஏவப்பட்டால் செயற்கைக்கோள்கள் மூலமாகவோ அல்லது உளவு விமானங்கள் மூலமாகவோ அவைகளை கண்டறிவதும் கண்காணிப்பதும் மிகவும் கடினமாகும்.

இரண்டு முறை :

இரண்டு முறை :

இதற்கு முன்பு அடிப்படையான செயற்கைகோள்களை சுமந்து கொண்டு இரண்டு முறை, மூன்று-கட்ட கண்டம் விட்டு கண்டம் தாண்டி அழிக்கும் ஏவுகணையை (three-stage ballistic missile) வடகொரியா வெற்றிகரமாக செலுத்தி பரிசோதித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தென் கொரியா :

தென் கொரியா :

மறுப்பக்கம் வடகொரியா தனது ஐந்தாவது அணு ஆயுத பரிசோதனையை நிகழ்த்துகிறதா என்பதை தென்கொரியா மிகவும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டே வருகிறது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

போர்வெறியில் வடகொரியா : "அமெரிக்காவை காலி செய்ய ஒரு எச்-பாம் போதும்..!"


நம்மையெல்லாம் 'முட்டாள்' ஆக்கிய 'புத்திசாலிகள்'..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Signs of North Korea mobile ballistic missile launch. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot