'பிளானட் நையன்' இருப்பது உறுதிதான்..!

Written By:

பிளான்ட் நையன் (Planet Nine) ஒரு அனுமான கிரகமாகும் (அதவாது நிச்சயமாக இருக்கிறது என்று உறுதி செய்யப்படாத ஒரு கிரகம்). பிளான்ட் நையன் ஆனது சூரிய குடும்பத்தை தாண்டிய வெளிப்புறத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. அதாவது, நெப்டியூன் கிரகத்தை தாண்டி அசாதாரணமான சுற்றுப்பாதை ஒன்றில் டிரான்ஸ் நெப்டியூன் விண்பொருட்களுடன் (Trans-Neptunian objects -TNOs) நெப்ட்யூன் சுற்றுவட்ட பாதைக்கு அப்பால் இருக்கும் க்யுப்பர் பெல்ட்டில் (Kuiper Belt) சுழலுகிறது என்று நம்பப்படுகிறது.

பெரும்பாலான விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் பேரார்வமாய் திகழும் பிளானட் நையன் பற்றி சமீபத்தில் கிடைக்கப்பெற்றுள்ள ஆதராங்கள் பிளான்ட் நையன் ஆனது சூரிய குடும்பத்தில் இருக்கிறது என்பதை உறுதி செய்யும்படி உள்ளது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மறைந்துக் கிடக்கிறது :

மறைந்துக் கிடக்கிறது :

கடந்த ஆண்டு பிளானட் நையன் பற்றி ஆய்வு செய்த மைக் ப்ரவுன் என்ற வானவியலாளர், பிளானட் நையன் ஆனது ஒரு மிகப்பெரிய கிரகம் என்றும் அது சூரிய குடும்பத்தின் விளிம்பில் மறைந்துக் கிடக்கிறது என்றும் ஆதாரங்களை சேகரித்திருந்தார்.

சூப்பர்-எலாங்கேட்டட் ஆர்பிட் :

சூப்பர்-எலாங்கேட்டட் ஆர்பிட் :

அதுமட்டுமின்றி பிளானட் நையன் ஆனது சூரியனை சுற்றியுள்ள ஒரு சூப்பர்-எலாங்கேட்டட் ஆர்பிட்டில் (அதாவது மிகவும் நீண்ட ஒரு சுற்றுப்பாதையில்) சுழலுகிறது என்றும் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டது.

20,000 ஆண்டுகள் வரை :

20,000 ஆண்டுகள் வரை :

பிளானட் நையன் ஆனது சூரியனை ஒருமுறை சுற்றிவர மிகவும் அசாத்தியமான 10,000 ஆண்டுகள் முதல் 20,000 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்கிறது போன்றவைகள் தான் இதுவரை கிடைத்த பிளானட் நையன் பற்றிய தெளிவுகள் ஆகும்.

உறுதி :

உறுதி :

சமீபத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள க்யுப்பர் பெல்ட் கிரகப்பொருள் (Kuiper Belt Object-KBO) ஒன்றின் மூலம் பிளான்ட் நையன் இருப்பு முதன்முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

சொல்லிக் கொடுக்கும் :

சொல்லிக் கொடுக்கும் :

இதனை தொடர்ந்து கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள க்யுப்பர் பெல்ட் கிரகப்பொருள் ஆனது பிளான்ட் நையன் எங்கே இருக்கும் என்பதை நமக்கு சொல்லிக் கொடுக்கப்போகிறது என்று பிளானட் நையன் பற்றி ஆய்வு செய்யும் மைக் ப்ரவுன் ட்வீட் செய்துள்ளார்..!

நெரிசலான இணைப்பு :

நெரிசலான இணைப்பு :

பிளானட் நையன் ஆனது பூமி கிரகத்தை விட 10 மடங்கு பெரியதாக இருக்குமென்றும், அண்டத்தின் மிகவும் நெரிசலான இணைப்பு கொண்ட ஒரு கிரகமாக இருக்குமென்றும் நம்பப்படுகிறது.

மொத்தம் :

மொத்தம் :

இதற்கு முன்பு ஒரே வரிசையிலான மொத்தம் 6 க்யுப்பர் பெல்ட் கிரகப்பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன, தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது ஏழாவது க்யுப்பர் பெல்ட் கிரகப்பொருள் ஆகும்.

149 பில்லியன் கிலோ மீட்டர்கள் :

149 பில்லியன் கிலோ மீட்டர்கள் :

இதன் மூலம் பிளானட் நையன் ஆனது, சூரியனில் இருந்து சுமார் 149 பில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் என்றும், ப்ளுடோவை விட 75 மடங்கு அதிக தூரத்தில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

விளக்கப்படம் :

விளக்கப்படம் :

பிளான்ட் நையன் பற்றி மைக் ப்ரவுன் செய்த விளக்கப்பட ட்வீட்..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

'மண்டையை குழப்பும்' விண்வெளி மர்மங்களும், விச்திரமான சப்தங்களும்..!


ஏரியா 51 : ஒட்டுமொத்த அமெரிக்க அரசும் மறைக்க விரும்பிய ஒரு இடம்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்றஅறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Scientists just found more evidence that Planet Nine exists in our Solar System. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot