Just In
- 17 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 19 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 19 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 20 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
டெல்லிக்கு பறக்கும் ‘இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் ‘பளிச்’!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Movies
சூர்யா 42 படத்தின் தலைப்பு இதுதானா.. ஒர்க்அவுட் ஆகுமா ‘வி’ சென்டிமெண்ட்!
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
உங்கள் வீட்டில் இருப்பது ஆவிகள் இல்லையென்பதை நிரூபிக்கும் 10 காரணங்கள்.!
கரண்ட் போனால் போதும் பக்கதில் யாரோ நிற்பது போன்று தோன்றும், தூங்கலாம் என்று 'லைட் ஆஃப்' செய்துவிட்டு, ஜன்னல் வழியே பார்த்தால் தூரத்தில் யாரோ நின்று நம்மையே 'வெறிக்க வெறிக்க' பார்ப்பது போல தோன்றும், சில நேரம் நம் நிழலே நம்மை பயமுறுத்தும்.
இப்படியாக, பேய்கள் மற்றும் ஆவிகள் பற்றிய அச்சம், சந்தேகம், நம்பிக்கை, பீதி - நம் எல்லோரிடத்திலும் பொதுவாகவே உண்டு. உங்கள் கண்களுக்கு மட்டும் பேய்களும், ஆவிகளும், விசித்திரமான நிழல்களும் தெரியக் 10 அறிவியல் காரணங்கள் உண்டு.
அறிவியலை விட பேய்கள் மற்றும் ஆத்மாக்கள் மீது தான் எனக்கு நம்பிக்கை அதிகம் என்று கூறுபவர்கள் கடைசிவரையிலாக பயந்துக்கொண்டே இருங்கள். ஏனையோர்கள் தெளிந்து கொள்ளுங்கள்.

ஆராய்ச்சி :
பேய்கள் சார்ந்த ஆராய்ச்சியில் அனுதினமும் அதிநவீன அறிவியல் - தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு கொண்டே தான் இருக்கின்றன.

தொழில்நுட்ப உதவி :
ஆவிகள் பற்றி 1840 மற்றும் 1850-களில் கண்டுப்பிடிக்கப்படாத உண்மைகள் இப்போது கண்டுபிடிக்கப்பட காரணம் தொழில்நுட்ப உதவியால் தான் என்பதை யாரும் எளிதில் மறுத்துவிட இயலாது..!

பேய் மற்றும் ஆவி :
அப்படியாக 45% மக்கள், பேய் மற்றும் ஆவிகளை நம்புகின்றனர் என்கிறது ஒரு கணக்கெடுப்பு..!

நிஜம் :
ஆனால், அந்த ஆய்வில் இருந்து வெளியான உண்மை என்னவென்றால் பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் தான் என்ற பழமொழி தான் நிஜமாம்..!

அறிவியல் விளக்கங்கள் :
பேய்களையும், ஆவிகளையும் நாம் பார்ப்பது, உணர்வது, எதிர் கொள்ளுவது ஆகியவைகளுக்கு நிஜமான காரணங்களாக 10 அறிவியல் விளக்கங்களை தருகிறது ஒரு ஆய்வு..!

காரணம் 01 :
திடீரென்று நம் கண்களுக்கு தோன்றி மறையும் நிழல் உருவங்கள் போன்ற நிகழ்வுகள் நடக்க காரணம், நம் மூளையின் ஒரு வகையான மின்சார தூண்டல் தானாம் (Electric Stimulation Of The Brain)..!

காரணம் 02 :
ஆவிகளுடன் நடத்தப்படும் உரையாடல்களின் போது நமக்கு கிடைக்கும் பதில்களுக்கு காரணம் பேய்களோ ஆவிகளோ இல்லை - இடியோமோட்டார் எஃபெக்ட் (Ideomotor Effect) தான் காரணம்..!

விளைவு :
தன்னை அறியாத நிலையில் ஏற்படும் உடல் அசைவுகள் சார்ந்த விளைவுகளை தான் இடியோமோட்டார் எஃபெக்ட் என்பர்.

தொடர்பு :
ஆவிகளுடன் தொடர்பு கொள்ள பெரிதளவில் பயன்படுத்தப்படும் ஓவ்ஜா போர்ட்டில் (Ouija board) நம் கைகள் தானாக நகர்வதற்கும் அசைவதற்கும் காரணம் இந்த விளைவு தானாம்..!

காரணம் 03 :
தானாக ஒரு பொருள் அசைகிறது என்றால் அதற்கு காரணம் ஏதோ ஒரு ஆவியின் சக்தி என்று நினைத்து விடாதீர்கள், அதற்கு காரணம் - இன்ஃப்ரா சவுண்ட் (Infrasound)..!

சப்தம் :
அதாவது மனித காதுகளால் 20,000 ஹெர்ட்ஸ் (Hertz) வரையிலான சப்தங்களை மட்டும் தான் கேட்க முடியும். அதற்கு கீழ் இருக்கும் ஒலிகளை நம்மால் கேட்க முடியாது.

அதிர்வு :
அதாவது 20 ஹெர்ட்ஸ் ஒலியை நம்மால் கேட்க முடியாது, ஆனால் அதை அதிர்வுகளாய் உணர முடியும், அப்படியான அதிர்வுகளால் தான், சில பொருட்கள் தானாக அசைய காரணமாகும்..!

அதிகம் ஏற்படும் :
பொதுவாக புயல் பலமான காற்று, வானிலை மாற்றம் போன்றவைகளால் இன்ஃப்ரா சவுண்ட் அதிர்வுகள் அதிகம் ஏற்படுமாம்..!

காரணம் 04 :
உங்களுக்கு வரும் ஆவிகள், பேய்கள் சார்ந்த ஆழ்ந்த சிந்தனைகள் மற்றும் கனவுகளுக்கு காரணம் - ஆட்டோமட்டிஸம் (Automatism)..!

மறந்த நிலை :
அதாவது அதீதமான தன்னை மறந்த நிலையில் கற்பனைகளும், எண்ணங்களும் வேறொரு வழியாக நம்மில் நுழையும் விளைவு தான் ஆட்டோமட்டிஸம் எனப்படும்..!

காரணம் 5 :
குறிப்பிட்ட அறையின் இடம் மட்டும் குளிர்ச்சியாக இருக்க காரணம், அங்கு ஏதோ ஆத்மா இருக்கிறது, பேய் வல்லுநர்கள் சொல்லும் 'கோல்ட் ஸ்பாட்' (Cold spot) என்று நினைக்க வேண்டாம் அது - டிராஃப்ட் (Draft) ஆகும்..!

அறை :
அதாவது, அடைத்தே கிடக்கும் அறைக்குள் இருக்கும் ஒவ்வொரு பொருள்களுக்கும் தனிப்பட்ட உஷ்ணநிலை இருக்கும். ஏதாவது சிறு வழியாக சில்லென்ற காற்று நுழையும் போது சக உஷ்ண நிலையோடு இணையாத குறிப்பிட்ட அந்த இடம் மட்டும் குளிர்ச்சியாய் தோன்றுமாம்.!

காரணம் 6 :
கேமிராக்குள் தூசி படிந்தால் எடுக்கும் புகைப்படங்களில் நிழல் உருவங்கள் அல்லது தெளிவற்ற உருவங்கள் தெரிவது சகஜம். அதை ஆவி, பேய் என்று நினைக்க கூடாது..!

காரணம் 7 :
பாழடைந்த பங்களாவிற்குள் சென்றவர் ஒருவேளை மரணம் அடைந்தால் அல்லது மாபெரும் குழப்பததிற்கு ஆள் ஆனால் அதற்கு காரணம் ஆவிகளோ அல்லது பேய்களோ இல்லை - கார்பான் மோனாக்சைட் பாய்சனிங் (Carbon Monoxide Poisoning)..!

மரணம் வரை :
மிக காலமாய் அடைக்கப்பட்டு கிடக்கும் இடத்தில் கார்பான் மோனாக்சைட் உருவாவது சகஜம்தான். அது சுவாசக் காற்றுக்கு பதில் உள் சென்றால் மயக்கம், குழப்ப நிலை, அதிக பட்சமாக மரணம் வரை கொண்டு செல்லும்.

காரணம் 08 :
நிஜமாகவே உங்கள் கண்ணுக்கு ஒன்றுமே தெரியாது, ஆனால் பல பேர் சேர்ந்து பேய், ஆவி, ஆத்மா என்று சொல்லும் போது உங்களால் அதை உணர முடியும். அது நிஜமான ஆவி இல்லை அந்த விளைவின் பெயர் - மாஸ் ஹிஸ்ட்டிரியா (Mass Hysteria)..!

காரணம் 09 :
சில குறிப்பிட்ட இடங்களில் நாம் பலவீனாமாக உணர்வோம். அதற்கு காரணம் அங்கே ஆவிகளின் சக்தி அதிகம் என்று அர்த்தமில்லை - அதற்கு காரணம் ஐயன்ஸ் (Ions).

பலவீனம் :
ஐயன்கள் இயற்கையாகவே வானிலை மாற்றங்கள் மூலம் உருவாகும் ஒன்றாகும். நெகடிவ் ஐயன்கள் (Negative Ions) நமக்கு அமைதியையும், ஓய்வையும் தரும், பாசிடிவ் ஐயன்கள் (Positive Ions) தலைவலி மற்றும் உடல் பலவீனத்தை தரும்..!

காரணம் 10 :
நாம் இறந்து விட்டதை போலவும், நம் உயிரற்ற உடலை நாமே பார்ப்பது போன்றும் நமக்கு 'நிஜம் போன்ற' கற்பனை எண்ணங்கள் வர காரணம் பேய் உலகம் சார்ந்த விடயமல்ல - அது மூளைக்குள் ஏற்படும் க்வான்ட்டம் மெக்கானிக்ஸ் விளைவாகும் (Quantum Mechanics)
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470