QLED டிவிக்காக சாம்சங் அறிமுகப்படுத்தியுள்ள சீகலர்' செயலி
தென்கொரியாவின் மிகப்பெரிய டெக்னாலஜி நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் நிறுவனம் தனது தயாரிப்புகளில் ஒன்றான QLED தொலைக்காட்சிக்காக பிரத்யேகமாக சீகலர்(SeeColors) என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலம் சாம்சங் டிவி வாடிக்கையாளர்கள் புதிய அனுபவத்தை பெறுவார்கள்

சாம்சங் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் விஷூயுவல் டிஸ்ப்ளே பிசினஸ் பிரிவின் துணைத்தலைவர் ஹெயோங்னம் கிம் அவர்கள் கூறியபோது, 'சாம்சங் நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களின் திருப்தி மற்றும் செளகரியத்திற்காக புதிய டெக்னாலஜியை அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் தற்போது QLED டிவிக்காக அறிமுகம் செய்துள்ள சீகலர்ஸ் செயலி, டெக்னாலஜி உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, புதிய விஷுவல் டிஸ்ப்ளே அனுபவத்தையும் கொடுக்கவல்லது
சாம்சங் டிவி வாடிக்கையாளர்கள் இந்த செயலியை பயன்படுத்தும்போது மிகப்பெரிய மாற்றத்தை உணர்ந்து கொள்வார்கள் என்பது உறுதி என்றே நம்புகிறோம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்த QLED டிவியின் கலர் பிரமாண்டத்தை வரவழைப்பதற்காகவே புடாபெஸ்ட் பல்கலைக்கழகத்தின் டெக்னால்ஜி பிரிவின் பேராசிரியர் க்ளாரா வென்சல் என்பவருடன் சாம்சங் ஒப்பந்தம் செய்து கொண்டு இந்த பிரமாதமான செயலியை வடிவமைத்து, சோதனை செய்து அதற்கான ரிசல்ட்டையும் தந்துள்ளது.
இந்த அற்புதமான கலர் மாற்றத்தை தரும் செயலியை பயனாளிகள் சாம்சங் டிவி செயலி ஸ்டோரில் சென்று டவுன்லோடு செய்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி கூகுள் ப்ளேஸ் ஸ்டோர் மற்றும் கேலக்ஸி செயலி ஸ்டோரிலும் இந்த செயலியை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
மேலும் கேலக்ஸி ஸ்மார்ட்போன் எஸ்6, எஸ்6 எட்ஜ், எஸ்6 எட்ஜ்+ மற்றும் எஸ்7, எஸ்7 எட்ஜ், எஸ்8 ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் இந்த செயலியை பயன்படுத்தி கொள்ளலாம்.. ஒருமுறை இந்த செயலியை டவுன்லோ செய்து இன்ஸ்டால் செய்துவிட்டால் போதும், உடனே சாம்சங் டிவியில் நீங்கள் பிரம்மாதமான வண்ணங்களை பெறலாம். மேலும் இந்த செயலி ஹங்கேரி நிறுவனமான கலர்லைட் என்ற நிறுவனத்தின் பார்ட்னஷிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் அடிப்படையில், சுமார் 300 மில்லியன் பொதுமக்கள் உலகளாவிய CVD குறித்து அறிந்துள்ளனர். இதில் சுமார் 8% ஆண்கள் மற்றும் 1% பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், பெரும்பான்மையான மக்கள் சி.வி.டீவி குறித்து தங்கள் நிலைப்பாட்டை அறியாதவர்களாகவும், வாழ்க்கை தரத்தில் உள்ள தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சாம்சங் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications