சினிமாவில் முதல் முறையாக எல்இடி திரையை இன்ஸ்டால் செய்த சாம்சங்

|

சாம்சங் நிறுவனம் தனது முதல் சினிமா எல்இடி திரையை கொரியாவின் லாட் சினிமா சர்வதேச டவரில் இன்ஸ்டால் செய்துள்ளது. இந்த எல்இடி திரை ஹை டைனமிக் ரேஞ்ச் தியேட்டர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

சினிமாவில் முதல் முறையாக எல்இடி திரையை இன்ஸ்டால் செய்த சாம்சங்

மேலும் சாம்சங் ஆடியோ லேப்ஸ் ஹார்மனுடன் இணைந்து ட்ரூ-டூ-லைஃப் ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. ஹார்மன் அமெரிக்க ஆடியோ தொழில்நுட்ப நிறுவனம் ஆகும்.

அதிக பிரகாசமான மற்றும் துல்லியமான நிறங்களுடன், காம்ப்ளிமென்ட்ரி ஆடியோ மற்றும் எளிவேட்டெட் பிரசன்டேஷன் வழங்கும் என்பதால் சினிமா எல்இடி கிரை வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் என எச்.எஸ். கிம் சாம்சங் விஷுவல் டிஸ்ப்ளே வியாபாரப் பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.

தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து, தடையில்லா வீடியோ வழங்கும் சாம்சங் புதிய திட்டத்தின் மூலம் வணிக ரீதியிலான சினிமாக்களை 4கே தரத்தில் வழங்கும்.

சினிமா திரை 10.3 மீட்டர் அதாவது 33.8 அடி அகலம் கொண்டுள்ளது. சினிமா எல்இடி திரை வெவ்வேறு வகையான கான்பிகரேஷன்களை சப்போர்ட் செய்கிறது. எல்இடி திரை சுமாக் 4096x2160 பிக்சல் தரமுள்ள சினமாவினை எச்டிஆர் தரத்தில் வெளிப்படுத்துகிறது. இதன் பிரைட்னஸ் அளவு மற்ற டிஸ்ப்ளேக்களை விட 10 மடங்கு அதிகரிக்க முடியும்.

சாம்சங் நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பம் மட்டுமின்றி, எதிர்காலத்திலும் இதேபோன்ற தொழில்நுட்பத்தை வழங்க பணியாற்றுவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளோம் என லோட் சினிமா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான வொன்சுன் சுவா தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

Read more about:
English summary
Samsung has installed first LED screen in a commercial theater ever with audio support from HARMAN's JBL.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X