கொலைவெறியில் ரஷ்யா : சிக்குறவன் 'சின்னாபின்னம்' தான்.!

By Meganathan
|

உலக நாடுகள் தினமும் ஏதாவதொரு ஆயுதங்களை சோதனை செய்வது வாடிக்கை. சமீபத்தில் இந்த பட்டியலில் வட கொரியா, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் அதிகம் இடம்பிடித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே.

கையில் காசு வைத்திருக்கும் உலக நாடுகள் அதிக செலவில் அதிபயங்கர ஆயுதங்களை தயாரித்து வரும் நிலை பிற்காலத்தில் பல்லாயிரக்கணக்கான உயிரை பறிக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.

நிலைமை இப்படி இருக்க ரஷ்யா தயாரித்து வெற்றிகரமாக சோதனை செய்திருக்கும் புதிய பீரங்கி சார்ந்த விரிவான தகவல்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

டேன்க்பாட்

டேன்க்பாட்

முழுவதும் லோட் செய்யப்பட்ட ஃபயர் ப்ரூஃப் மினி டேன்க்பாட் தான் யுரான்-9 மனிதர்களை விட சற்றே உயரமான டேன்க்பாட் நீங்கள் நினைப்பதை விட அதிக திறன் கொண்டுள்ளது.

மெஷின் கன்

மெஷின் கன்

இந்த டேன்க்பாட் பீரங்கியில் முழுவதுமாக மெஷின் கன், மிஸைல் மற்றும் நிமிடத்திற்கு 350 முதல் 400 ரவுன்டுகளுக்கு சுடும் திறன் கொண்ட 30-மில்லிமீட்டர் கனான் கொண்டுள்ளது.

ரஷ்யா

ரஷ்யா

ரஷ்யாவின் பாதுகாப்பு ஆனையம் தயாரித்திருக்கும் இந்த ஆளில்லாமல் இயங்கும் பீரங்கியானது எதிர் தாக்குதல் செய்ய ஏதுவாக தயாரிக்கப்பட்டுள்ளது.

ரோஸோபோரான் எக்ஸ்போர்ட்

ரோஸோபோரான் எக்ஸ்போர்ட்

இந்த பீரங்கியை ரோஸோபோரான் எக்ஸ்போர்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த பீரங்கியில் ரிமோட் மூலம் இயக்க கூடியது ஆகும். மேலும் இந்த மினி பீரங்கியில் இரண்டு ரீகான் மற்றும் ஃபயர் சப்போர்ட் ரோபோட், போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

லேசர் அமைப்பு

லேசர் அமைப்பு

இந்த பீரங்கியில் அதிநவீன லேசர் எச்சரிக்கை அமைப்பு, டார்கெட் டிடெக்ஷன் மற்றும் அதிநவீன ஐடென்டிபிகேஷன் மற்றும் டிராக்கிங் எக்யூப்மென்ட் போன்றவை பொருத்தப்பட்டுள்ளது.

படை

படை

யுரான்-9 தனியாக செயல்படாமல் ஒரு ஆயுத படை போன்று பயன்படுத்தப்பட இருப்பதாக இந்த பீரங்கியை தயாரித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய திறன்

ரஷ்ய திறன்

சர்வதேச அளவில் கிடைக்கும் அனைத்து வித ராணுவ ரோபோட்களும் ரஷ்யா வசம் என்றும் இருக்கும் என ரோஸோபோரான் எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் ஆய்வு மற்றும் நீண்ட-கால திட்ட துறை தலைவர் போரிஸ் சிமாகின் தெரிவித்துள்ளார்.

வெளிப்புறம்

வெளிப்புறம்

இந்த சிறிய பீரங்கியின் வெளிப்புறத்தில் 7.62 மில்லிமீட்டர் இயந்திர துப்பாக்கி, மற்றும் நான்கு 9M120 அடாகா ஆன்டி டேன்க் மிஸைல் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மிஸைல்கள் 2.5 மைல் தொலைவில் இருக்கும் இலக்குகளையும் 90 சதவீதம் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டிருப்பதாக பாப்புலர் மெக்கானிக்ஸ் தெரிவித்துள்ளது.

புதிது

புதிது

இது போன்ற தொழில்நுட்பம் முற்றிலும் புதியது என்பதோடு, இது போன்ற பீரங்கிகளை கொண்டு தீவிரவாத தாக்குதல்களுக்கு சரியான பதிலடி கொடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதம்

ஆயுதம்

ஆயுத சந்தைில் வேகமாக வளர்ந்து வருவதால் இது போன்ற யுக்திகளை ஊக்குவிப்பது நீண்ட கால திட்டங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என சிமாகின் தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

Read more about:
English summary
Russia's tiny Hi-tech unmanned bot in action Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X