Home
Miscellaneous

புதிய உச்சத்தை எட்டும் பீதி : 'குறி' வைக்கப்படும் அமெரிக்கா..!

By Muthuraj

20-ஆம் நூற்றாண்டுகளின் மத்தியில் இருந்தும் அதற்கு பிறகான காலங்களிலும் சோவியத் ஒன்றியத்திற்கும், ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையே நடந்த விண்வெளி போட்டியானது முழுக்க முழுக்க யார் ஆதிக்கம் வாய்ந்தவர், யார் சக்தி வாய்ந்தவர் என்பதை நிரூபிப்பதற்க்காகவே நடந்தது. இப்போட்டியானது இரண்டு நாடுகளின் தேசிய பாதுகாப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் கருத்தியல் மேன்மை போன்றவைகளையும் மனதிற்கொண்டு நடந்தது, நடந்து கொண்டே இருக்கிறது.

போட்டியாக ஆரம்பித்த விண்வெளி ஆய்வு மற்றும் வளர்ச்சியானது, தற்போது விண்வெளியில் ஆதிக்கம், ஆக்கிரமிப்பு அதன் மூலமான பாதுகாப்பு, பலம் அதனை தொடர்ந்து அச்சுறுத்தல், யுத்தம் என்ற நிலையில் வந்து நிற்கிறது..!

நடவடிக்கை :

நடவடிக்கை :

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ராணுவத் தலைமையகமான பென்டகனில் வரவு-செலவுத் திட்டம் மற்றும் வெறித்தனமான அச்சுறுத்துதல்கள் பற்றிய இராணுவ நடவடிக்கை ஒன்றில் ரஷ்ய-சீன கூட்டணி ஒன்றின் சதி அம்பலமாகியுள்ளது.

செயற்கைகோள்கள் மீது தாக்குதல் :

செயற்கைகோள்கள் மீது தாக்குதல் :

அதாவது ரஷ்யா மற்றும் சீனாவானது, அமெரிக்க செயற்கைகோள்கள் மீது தாக்குதல்கள் நடத்துவதற்கான திட்டங்களை வகுப்பதாக பென்டகன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முனைப்பு :

முனைப்பு :

அமெரிக்காவின் விண்வெளி திறன்களை தடுக்கும்-அழிக்கும் வகையிலான இயக்க ஆற்றல், நேரடி ஆற்றல் மற்றும் சைபர் கருவிகள் (kinetic, directed-energy, and cyber tools) போன்றவைகளை உருவாக்கும் முனைப்பில் ரஷ்யாவும், சீனாவும் இருக்கிறது" என்று அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது.

விண்வெளியை சார்ந்து :

விண்வெளியை சார்ந்து :

மேலும், அமெரிக்காவின் விண்வெளி முன்னேற்றம் மற்றும் அமெரிக்கா எந்த அளவு விண்வெளியை சார்ந்துள்ளது என்பதை தெளிவாக ரஷ்ய-சீன கூட்டணி அறிந்து வைத்துள்ளது என்றும் அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை :

எச்சரிக்கை :

உடன், அமெரிக்க ஜிபிஎஸ் செயற்கைகோள்கள் (US Global Positioning System satellites) தாக்கப்படக் கூடிய நிலைப்பாட்டில் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர் விண்வெளி வலிமை :

எதிர் விண்வெளி வலிமை :

அமெரிக்காவானது விண்வெளியை மிகவும் சார்ந்து இயங்குவதாக ரஷ்யா எண்ணுகிறது அதனாலேயே அவர்கள் தங்களின் எதிர் விண்வெளி வலிமைகளை (counter-space capabilities) மேம்படுத்துவதில் உழைத்துக் கொண்டே இருக்கிறார்களாம்.

 விண்வெளி - சைபர் யுத்தம் :

விண்வெளி - சைபர் யுத்தம் :

மறுபக்கம் சீனா - விண்வெளி யுத்தம், சைபர் யுத்தம் போன்ற மூலோபாய ஆதரவு படைகளை (Strategic Support Forces) உருவாக்கம் செய்து கொண்டே இருக்கிறது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீன வலிமை :

சீன வலிமை :

"சீனா வளர்ந்து கொண்டே வருவது மட்டுமின்றி அதை நிரூபித்து கொண்டே இருக்கிறது, முக்கியமாக எதிர் விண்வெளி வலிமைகள் ஆன டைரக்ட்-அசென்ட், கைனடிக் கில் வெயிக்கில்ஸ், கோ-ஆர்பிடல் டெக்னாலஜிஸ் (direct-ascent, kinetic-kill vehicles, co-orbital technologies) போன்றவைகளில் முன்னேறிக் கொண்டே போகிறது"

செயற்கைகோள் முடக்கப்படலாம் :

செயற்கைகோள் முடக்கப்படலாம் :

"சீனாவின் இந்த முன்னேற்றம் மூலம் எந்தவொரு செயற்கைகோளும் முடக்கப்படலாம் அல்லது அழிக்கப்படலாம், தகவல் தொடர்புகள் நாசம் செய்யப்படலாம்" என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிகழ் நேர கண்காணிப்பு  :

நிகழ் நேர கண்காணிப்பு :

மேலும் ரஷ்ய-சீன கூட்டணியானது, நிகழ் நேர கண்காணிப்பு, வரிசைப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு படைகள், மற்றும் நீண்ட தூர துல்லியமான தாக்குதல் முறை (near-real-time tracking of objects, command and control of deployed forces, and long-range precision strikes capabilities) போன்றவைகளிலும் தற்காலத்திற்கு ஏற்றது போல புதுமைகளை புகுத்திக் கொண்டே வருகிறார்கள் என்றும் அமெரிக்க விமானப்படை கூறியுள்ளது.

வரலாற்று துரோகம் :

வரலாற்று துரோகம் :

விண்வெளி சார்ந்த வரலாற்றில் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக அமெரிக்க பல துரோகங்களை செய்துள்ளது. அதைப்பற்றி தெரிந்துக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும் (அமெரிக்கா செய்த 'வரலாற்று துரோகம்'..!)

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

உறுதி செய்யும் ஆதாரங்கள் : உலகப்போருக்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா தயார்..?!


இந்தியாவை பார்த்து 'மீண்டும் ஒருமுறை' வாயைப்பிளக்க போகின்றன உலக நாடுகள்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Russia, China Planning Space Attacks on US. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X